ஸ்ரீ ஜெகந்நாதரின் ரத யாத்திரை
இன்று - உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ இரத யாத்திரை 16 - 7 - 2026
ஒடிசாவில் கோயில் நகரமான பூரியில் ஸ்ரீ ஜெகந்நாதரின் ரத யாத்திரை....
வழக்கமாக 15 நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. ஸ்ரீ ஜெகந்தாதர் தனது அண்ணன் பலராமன் மற்றும் சகோதரி சுபத்திரையுடன் இரத உலா வருவார்கள்.
உலகிலேயே மிகப் பழமையான இரத யாத்திரையாகக் கருதப்படும் பூரி இரத யாத்திரையானது, ஆண்டுதோறும் ஆனி மாதம் வளர்பிறை இரண்டாம் நாள் தொடங்கி நடைபெறுக்கிறது.
ஆலய நகரமான பூரி மட்டுமல்ல, ஒடிசாவே இரத யாத்திரையின் போது திருவிழாக் கோலம் பூணும். ஸ்ரீ ஜெகந்நாதர் மற்றும் அவரது சகோதர சகோதரிகளின் மூன்று இரதங்களும் அளவு மற்றும் பிற விவரங்களில் பரஸ்பரம் வேறுபட்டவை. தேர்கள் ஒவ்வொரு ஆண்டும் அழகாகவும் உள்ளார்ந்ததாகவும் வடிவமைக்கப்பட்டு வண்ணம் தீட்டப்படுகின்றன.
தங்கள் அத்தையின் இருப்பிடமான குண்டிச்சா ஆலயம் நோக்கிச் செல்லும் இரத யாத்திரையின்போது, மவுசிமா கோவிலில் ஸ்ரீ ஜெகன்நாதர் தங்கி ஓய்வெடுப்பார். அதன்பிறகு சகோதர சகோதரியின் தேர்கள் புடைசூழ ஜெகந்நாதரின் இரத யாத்திரை மீண்டும் கிளம்பி தங்கள் இருப்பிடமான ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலை வந்தடையும்.
பின்வரும் பதிவுகளில் இந்த யாத்திரையின் முன், பின் நிகழ்வுகளை விரிவாக காணலாம் ..
ஸ்ரீ பலராம ஸ்வாமி , ஸ்ரீ சுபத்ராதேவி, ஸ்ரீ ஜெகந்நாத பெருமாள்
திருவடிகளே சரணம் ... !!!
அனுபிரேம் 💙



வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. ஒடிசா பூரி ஜெகன்னாதன் கோவில் ரத யாத்திரையை தரிசித்துக் கொண்டேன். படங்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது. இங்கு அருகில் இருக்கும் இஸ்கான் கோவிலிலும், இந்த ரத யாத்திரை பற்றிய விளம்பரங்கள் இருந்ததை கண்டு கொண்டேன். இறைவனை உங்கள் பதிவில் தரிசித்துக் கொண்டேன்.
திருமங்கையாழ்வார் பாசுரமும் எளிய தமிழில் படித்துணர அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.