02 July 2018

சத்துமாவு உருண்டை..



நலம் வாழ்க..



இன்றைய பதிவில் சத்தான  சத்துமாவு உருண்டை..









தேவையானவை..


சத்து மாவு - 1 கப்

வெல்லம் - 3/4 கப்

நெய்  - 2 ஸ்பூன்

முந்தரி - கொஞ்சம்..

நீர் - 1/2 கப்



செய்முறை..


சத்துமாவை வெறும் வாணலில் சிறிது வறுக்க வேண்டும்...



வெல்லத்தில் அரை கப் நீர் ஊற்றி   பாகு  காய்ச்ச வேண்டும்...

கெட்டி பாகுன்னா உருண்டையும் ரொம்ப இறுகி போய்விடும்.

அதனால் மிதமான பாகு தான் சரியாக இருக்கும் ரொம்ப கொதிக்க விட எல்லாம் வேண்டாம்..






முந்திரியை உடைத்து நெய்யில் வறுக்க வேண்டும்...






இப்பொழுது வறுத்த மாவில் ...முந்திரி, பாகு சேர்த்து கலந்து...உருட்ட வேண்டியது தான்...








சுவையான சத்துமாவு உருண்டை தயார்...







 அன்புடன்

அனுபிரேம்








11 comments:

  1. எளிதான செய்முறை. சுவை. அவ்வப்போது சாப்பிடலாம்.

    ReplyDelete
  2. செய்வதும் ஈஸி. சத்தும் அதிகம் .வயிறும் சாப்பிட்ட திருப்தியை அடையும்

    ReplyDelete
  3. மிகச் சுவையான உருண்டைதான். இதில் சத்துமா என்றால் என்ன என்ன மாவெல்லாம் கலந்திருக்கும்?

    அந்த மாவை வறுத்துப் போட்டு, சும்மாவே தேங்காய்ப்பூவும் சக்கரையும் போட்டுக் குழைத்துச் சாப்பிட நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இது கடையில் வாங்கிய சத்துமாவு அதிரா..எல்லா பயறும் கலந்து இருக்கும்..

      Delete
  4. மேலே இருக்கும் சித்திரம் வரைந்தவர் உங்கள் மகனோ? ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. இல்ல இல்ல ...நானே வரைந்தது...மதுபானி ஓவியம்.

      Delete
    2. அனு என்று தெரிந்து கொள்ள முடிந்தது கேட்க நினைத்து விட்டுட்டேன்..அனு செமையா இருக்கு மதுபானி. நான் பெரிய அளவில் ஒன்று 5,6 வருடங்களுக்கு முன் வரைந்தேன். துப்பட்டா நீளமா இருக்கு இல்லையா அதைக் கட் செய்து கிட்டத்தட்ட சதுரமாக்கினால் அந்த சைஸ். கேன்வாஸ் துணியில். பாரிஸ் கார்னரில் மகனுக்கு முன்பு கராத்தே ட்ரெஸ் தைக்க வாங்கியதில் மீந்து இருந்தது. நெருங்கிய உறவினர் கேட்டார் என்பதால் அதில் வரைந்தேன். கட்டம் போட்டு பார்டர் போடுவதற்குள் கரண்ட் போனப்ப கேண்டில் ஏற்றி வைத்தது விழுந்து பற்றிக் கொண்டு விட்டது. எதிர்பார்க்கவில்லை. நன்றாக ஒட்டிக் கொண்டுதான் நின்றது. முதலில் எனக்குத் தெரியவில்லை. (ஸ்மெல் தெரியாது) அப்புறம் எதோ வெளிச்சம் தெரியுதே என்று பார்த்தால் பகுதி போய்விட்டது. அதுவும் முதலில் வெளிச்சம் வந்தது அதன் பின் பெயிண்டின் காரணமாக உருகியதே அல்லாமல் அத்தனை எரியவில்லை..அப்புறம் அதை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டேன். மனது கொஞ்ச நாள் ஆறவில்லை. அதன் பின் வரையவில்லை...

      கீதா

      Delete
    3. ராஜ்புதானி படமும் வரைந்துள்ளேன் பல வருடங்களுக்கு முன் திருமணம் ஆவதற்கு முன். ஆன பின் யாராவது கேட்டால். வேண்டாத ஃப்ளாஸ்க், மண் ஜாடி ஃப்ளவர் வேஸ், பீங்கான் ஜாடி இவற்றில் சில செய்துள்ளேன். பார்க்கிறேன் சில கைவண்ணங்கள் உருப்படியாக இருந்தால் படம் எடுத்துப் போடுகிறேன்..

      கீதா

      Delete
  5. நானும் கேட்க இருந்தேன் சத்துமாவு பற்றி. அதிரா கேட்டுட்டா. மிகவும் சத்தான உருண்டை. அழகா உருட்டி இருக்கீங்க அனு.

    ReplyDelete
  6. அருமையான ஸ்னாக் அனு. மகன் சின்னவனாக இருந்தப்ப செய்தது. நல்ல சத்துள்ளது வயிறும் நிறையும்....

    கீதா

    ReplyDelete