03 November 2018

கோதுமை மாவு அல்வா..


வாழ்க வளமுடன்..

இன்றைய சமையலில் கோதுமை மாவு அல்வா..😍😍😍










தேவையானவை


கோதுமை மாவு  - 1/2 க

சர்க்கரை   - 1க

தண்ணீர் - 1க + 1/8  க

நெய் -  1/4 க + 2 TSP

கேசரிப்பவுடர் -சிறிது
முந்திரி - சிறிது
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்





செய்முறை



NAN STICK கடாயில் நெய் ஊற்றி  , சூடாகவும் .. கோதுமை மாவை சேர்த்து வறுக்கவும்..


மிதமான தீயில் நன்கு அது சிவக்கும் வரை வறுக்க வேண்டும் .


பின் அதில் நீரை சேர்த்து கிளற வேண்டும் ..மிக விரைவாக உருண்டு வரும் ..



நன்றாக உருண்டு வரவும் அதில் சர்க்கரை , கலர் சேர்த்து மீண்டும் கிளற வேண்டும் ..




நன்றாக அல்வா பதம் வரும் போது இன்னும் இரு ஸ்பூன் நெய் சேர்த்து , வறுத்த முந்திரியும் சேர்க்க வேண்டும்..






சுவையான கோதுமை மாவு அல்வா தயார்....இது கடை அல்வா போல் மிக வழவழப்பாக இருக்காமல்  ..சிறிது வித்தியாசமாக இருக்கும் ...ஆனால் சுவை மிக அருமை , செய்முறையும் எளிதே ...






அன்புடன்
அனுபிரேம்





7 comments:

  1. அனு தீபாவளி தொடங்கிருச்சு போல!!!

    நல்லா வந்துருக்கு! ஆமாம் கோதுமை மாவு ஹல்வா செம டேஸ்டியா இருக்கும் திருநெல்வேலி ஹல்வா போல இல்லாம வித்தியாசமா...மில்லட் மாவு ஹல்வாவும் செய்யலாம்...தினை மாவு தனியாவோ இல்லைனா கலந்தோ...அதுவும் இப்படியே தான் டேஸ்ட் நல்லாருக்கும் வித்தியாசமா...

    இதே ஹல்வால/மில்லட் மாவு ஹல்வால மில்க் பௌடர்/கோவா கலந்தும் செய்யலாம்..அது ஒரு வித்தியாசமான சுவையோடு இருக்கும்...இப்படி நிறைய பெர்ம்யூட்டேஷன் காம்பினேஷன்ல நம்ம இஷ்டத்துக்கு நிறைய செய்யலாம் அனு...

    கீதா

    ReplyDelete
  2. கோதுமை மாவில் ஹல்வா....

    பார்க்க நன்றாகவே இருக்கிறது. இங்கே நிறைய சுவைத்திருக்கிறேன். முந்திரி மட்டுமல்லாது மற்ற உலர் பழங்கள் சேர்த்தும் செய்யலாம்.

    ReplyDelete
  3. ஐ லவ் அல்வா. ஆனா செய்ய வராது

    ReplyDelete
  4. எளிதான கோதுமை மாவு அல்வா. பார்க்கவே அழகு, சுவையும் நன்றாக இருக்கும்.
    தீபாவளி இனிப்பு ஆரம்பித்து விட்டதோ!

    ReplyDelete
  5. அருமையான கோதுமை அல்வா, இதை நாங்கள் “மஸ்கட்” என்போம்.

    ReplyDelete