வாழ்க வளமுடன்
ரகுபதி ராகவ ராஜாராம் !
பதீத பாவன சீதாராம் !
சீதாராம் ஜெய சீதாராம் !
பஜ து ப்யாரே சீதாராம் !
ஈஸ்வர அல்லா தேரே நாம் !
சப்கோ சன்மதி தே பகவான் !
ரகுபதி ராகவ ராஜா ராம் !
பதீத பாவன சீதாராம் !
இன்று நமது தேச பிதா காந்தி ஜி யின் 150-வது பிறந்த நாள்...
இதற்காக பெங்களூர் சித்திரச்சந்தையில் எடுத்த ஓவியங்கள் மற்றும் சிலைகளின் படங்கள் இன்றைய தொகுப்பில் ....
இந்த ஆண்டு சித்திரச் சந்தையும் காந்தியின் 150-வது பிறந்த நாள் சிறப்பாகவே நடைப்பெற்றது .
உலக அகிம்சை தினம் -
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியே உலக அகிம்சை தினமாகும். இதனை உலக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
மனிதம் என்கிற புத்தகம் -
உண்மையான கல்வி என்பது உங்களிடமிருந்து சிறந்த எண்ணத்தை, உங்கள் ஆற்றலை வெளியேக் கொண்டு வருவதில் தான் உள்ளது.
மனிதம் என்னும் புத்தகத்தை விடச் சிறந்த புத்தகம் வேறென்ன இருக்கமுடியும்? என்பதுதான் காந்தி அவர்களின் அடிப்படை வாதம்.
எண்ணமே வாழ்க்கை-
காந்தி தாத்தாவிடம் கற்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான ஒன்று எண்ணமே வாழ்க்கை.
மனிதன் எதனை சிந்திக்கிறானோ அதை தான் எப்போதும் செய்கிறான்.
ஒருவனுடைய ஆளுமையைத் தீர்மானிப்பது அவனது சிந்தனை என்கிறார் அவர். அவ்வாறு நேர்மறையாகச் சிந்திப்பவர்கள் தங்களின் இலக்குகளைச் சுலபமாக அடைவார்கள்.
இதுவே எதிர்மறையாகச் சிந்திப்பவன் என்றால் தன் தோல்வியை எண்ணிச் சோர்ந்து விடுவான்.
வாழ்க நீ எம்மான் ...
அன்புடன்
அனுபிரேம்
We do remember the 2nd October. And that is fine.
ReplyDeleteSubbu thatha.
காந்தி நாமம் வாழ்க......லால்பகதூர் சாஸ்திரி நாமம் வாழ்க.... காமராஜ் நாமம் வாழ்க...
ReplyDeleteஎண்ணமே வாழ்க்கை.!
ReplyDeleteஆமாம், எண்ணமே வாழ்க்கைதான்.
பதிவு மிக அருமை.
வணக்கம் சகோதரி
ReplyDeleteஅருமையான பதிவு. அக்டோபர் 2 ல் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளன்று அவரைப்பற்றிய செய்திகளும் படங்களும் பகிந்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. படங்களும், சிலைகளும் மிகவும் அழகாக இருக்கின்றன.
தங்கள் தளத்தில் முகப்புப் படமாக வந்திருக்கும் பொம்மைகள் படமும் அழகாக உள்ளது.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிறப்பான பகிர்வு.
ReplyDeleteஎண்ணமே வாழ்க்கை - நல்ல சிந்தனை நன்மையே தரும் என்பதை உணர்ந்தால் நல்லது.
தொடரட்டும் பதிவுகள். நானும் தொடர்கிறேன்.