05 October 2019

துறையூர் பெருமாள் மலை...

துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பெருமாள் மலை.





 இந்த மலை, பெருமாளுக்கான மலை. இந்தத் தலத்தில் இவரின் திருநாமம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி.

 இத்திருத்தலம் திருப்பதிக்கு ஒப்பானது. அதனாலேயே தென்திருப்பதி என்ற சிறப்பு பெயர் பெற்றது.

திருப்பதியில் உள்ளதுபோல் கருவறையில் ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி திருமண கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் சேவை சாதிக்கிறார். இதேபோல் அலமேலு மங்கை தாயார் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார்.

உயர்ந்த கருடாழ்வார் 






புராண காலத்தில் காவிரிக்கு வடக்கே உள்ள இந்த பூமி, தீர்த்தபுரி எனப் போற்றப்பட்டது. அதேபோல் வேணுவனம் என்றும் துறையூர் அழைக்கப்பட்டது.



ஓங்கி உயர்ந்த மலையின் அடிவாரத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீகோவிந்தராஜ சுவாமியின் சந்நிதி. இவரை வணங்கி விட்டு, மலையேற  வேண்டும் ...

 முன்பெல்லாம் மலையை நடந்துதான் அடையவேண்டும்.

இப்போது, மலையில் பாதையிட்டு, கார் முதலான வாகனங்கள் வந்து செல்லவும் வழிவகைகள் செய்யப்பட்டு விட்டன.

பூமி மட்டத்தில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்தில் இருக்கிறது ஆலயம்.

படிக்கட்டுகள் வழியாகவும் செல்லலாம். சுமார் 1,600 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாகனப் பாதையும் உண்டு. வழியே சிறுசிறு குன்றுகளாக இருப்பதையும் பார்க்கலாம். இந்தக் குன்றுகள் மொத்தம் ஏழு. அதாவது ஏழு மலைகளைக் கடந்த பிறகு, ஏழுமலையானின் சிலிர்க்க வைக்கும் தரிசனம்!





 நாங்கள்  போன வருடம் நடந்து சென்ற போது எடுத்தப் படங்கள் ...









 ஸ்தல வரலாறு:


கல்லணையைக் கட்டிய கரிகாற் சோழப் பெருவளத்தானின் பேரன், தன் ஆட்சியில் கட்டிய கோயில் என்கிறது ஸ்தல வரலாறு.

தன் ராஜகுருவின் அருளாசிப்படி, சோழ தேசத்துக்கு உட்பட்ட இந்தப் பகுதியில், வேங்கடவனை நினைத்து, தவமிருந்தான் மன்னன்.

ஓர் இலந்தை மரத்தடியில் அமர்ந்து தவம் செய்ய... அதில் மகிழ்ந்த பெருமாள், மன்னனுக்குத் திருக்காட்சி தந்ததாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.

இப்படி, பக்தனின் முன்னே பிரசன்னமானதால், ஸ்ரீசக்ராயுதபாணியாக, திருமணக் கோலத்திலும் திருக்காட்சி தந்ததால், இந்தத் தலத்துப் பெருமாளுக்கு ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி என்றே திருநாமம் அமைந்தது என்பர்.


இம்மன்னரே கருப்பண்ணார் என்றும் வீரப்பசுவாமி என்றும் இங்கு போற்றப்படுகிறார் .

 வேறெந்த வைணவத் திருத்தலத்திலும் இல்லாத சிறப்பாக கருப்பண்ணசுவாமி சன்னதியில் விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.



மேலே கோவில் 


தலவிருட்சம் இலந்தை மரம், ஏழு ஸ்வரங்களின் ஒலி எழுப்பும் கருங்கல் தூண்கள், தசாவதாரங்களை தூண்களில் கொண்ட தசாவதார மண்டபம், வசந்த மண்டபம், ஏகாதசி மண்டபம் என இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

  அடிவாரத்தில்   பிரமாண்டமான பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது .அங்கு அஷ்ட லஷ்மி தேவியருக்கும் சன்னதிகள் உள்ளன .





மிக அருமையான , பழமையான இடம் ...சுற்றியுள்ள அனைத்து இடங்களில் இருந்தும் மக்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் தரிசனதிற்கு வருவார்கள் .



யானே தவஞ்செய்தேன் ஏழ்பிறப்பும்எப்பொழுதும் * 
யானேதவமுடையேன் எம்பெருமான்! * - யானே 
இருந்ததமிழ்நன்மாலை இணையடிக்கேசொன்னேன் * 
பெருந்தமிழன்நல்லேன்பெரிது. 

  2255


பெருகுமதவேழம் மாப்பிடிக்குமுன்னின்று * 
இருகணிளமூங்கில்வாங்கி * - அருகிருந்த 
தேன்கலந்துநீட்டும் திருவேங்கடம்கண்டீர் * 
வான்கலந்தவண்ணன்வரை. 
 
2256
.



ஓம் நமோ நாராயணா..


அன்புடன்
அனுபிரேம்

14 comments:

  1. கருடாழ்வார், பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலைகள் பிரம்மாண்டமாய் அழகா இருக்கு. அழகான கோவில்.கோவில்களின் தகவல்களை தருவதால் அதன் சிறப்பினை அறிய முடிகிறது அனு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக மகிழ்ச்சி அம்மு

      Delete
  2. இதுவரை போகாத கோயில். அப்பகுதியில் பயணம் மேற்கொள்ளும்போது செல்வேன்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சென்று வாருங்கள் ஐயா ..மிக அமைதியான கோவிலும் ..புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் வேன் சேவை இருக்கும்

      Delete
  3. வணக்கம் சகோதரி

    அருமையான கோவிலைப்பற்றிய விமர்சனம். அறியாத இந்தக் கோவிலைப்பற்றி படித்தறிந்து கொண்டேன். படங்களும், ஸ்தல புராணமும் பார்க்க, படிக்க மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது. கோபுரங்களின் நெடிதுயர்ந்த அழகும், கருடாழ்வார் தரிசனமும் மனதிற்கு நிம்மதியை தருகிறது. பக்தியுடன் பெருமாளை தரிசித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மிக மகிழ்ச்சி கமலா அக்கா

      Delete
  4. மிக அருமையான இடம், எந்தாப்பெரிய சிலைகள்.. ஆஞ்சனேயரைத் தரிசிக்கக் கிடைச்சதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. 'ஏழுமலைகளைக் கடந்து செல்வது சொல்லும்போதே மிகவும் அழகாக இருக்கும என தெஙரிகிறது. படங்கள் பல காட்சிகளை தருகின்றன.

    ReplyDelete
  6. அழகான இந்தக் கோயில் பற்றி இதுவரை அறிந்து கொள்ளவில்லை. 1600 படிகள்.... அடுத்த தமிழகப் பயணத்தில் முடிந்தால் இங்கே செல்ல வேண்டும்.....

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சென்று வாருங்கள் ...அருமையான கோவிலும் இடமும் ..

      Delete
  7. எவ்வளவு படிகள், எத்தனை நேரமாயிற்று என்றெல்லாம் நீங்கள் எழுதவில்லை. உணவுக்கு என்ன பண்ணினீங்க, தண்ணீர் எடுத்துக்கொண்டு செல்லவேண்டியிருந்ததா?

    ReplyDelete
    Replies
    1. 16௦௦ படிகள் என குறிப்பிட்டு இருக்கிறேனே ...

      மேலும் எங்களுக்கு ஒரு மணி நேரம் ஆனது நடந்து மலை ஏற ....இறங்கும் போது அரை மணி நேரம் போதும் ..

      தண்ணீர் கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும் ..

      உணவு -பொதுவாக இங்கு மலை ஏறி தரிசனம் முடித்துவிட்டு நாங்கள் வீட்டில் விரதம் விடுவோம் ...அதனால் உணவு ஏதும் நாங்கள் எடுத்து செல்லுவது இல்ல ..பல பேர் உள்ளூர் மக்கள் அப்படி தான் ..அதனால் அங்கு சில கடைகள் மட்டும் உண்டு ..

      துறையூரில் நல்ல ஹோட்டல்கள் உண்டு

      Delete
  8. நன்றி அண்ணா

    ReplyDelete