17 October 2019

மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி ..

மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி  தரிசனம் ...


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் , 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. குருவாயூரைப் போலவே, மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயத்தையும் ‘தட்சிண துவாரகை’ என்று அழைக்கிறார்கள்.


புஷ்ப பல்லக்கு இராஜ அலங்காரம்
ருக்மனி சத்யபாமாவுடன் ஸ்ரீ வித்யா கோபாலன் 


திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்தபோது, தென்பகுதியில் கோபிலர், கோபிரளயர் என்னும் இரண்டு முனிவர்கள் இருந்தனர். இவ்விருவரும் கண்ணனின் லீலைகளைக் கேட்டு, அவரைப் பார்க்க துவாரகை நோக்கி புறப்பட்டனர். அப்போது வழியில் அவர்களை சந்தித்த நாரதர், கிருஷ்ணாவதாரம் முடிந்து விட்டதாக கூறினார்.

அதைக்கேட்ட முனிவர்கள் வருத்தம் அடைந்தனர். அவர்களை ஆறுதல்படுத்தி தேற்றிய நாரதர், இருவரையும் கண்ணனைக் காண தவம் இருக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி முனிவர்கள் இருவரும் கடுமையான தவத்தில் ஆழ்ந்தனர்.

அவர்களுக்கு இறைவன், ‘கிருஷ்ணராக’ காட்சி தந்தார். அவரிடம் தங்களின் லீலைகளை காட்டி அருளும்படி முனிவர்கள் வேண்டினார்கள். அதன்படி கிருஷ்ணர் தன்னுடைய 32 லீலைகளைக் காட்டி அருளினார். பின்னர் முனிவர்களின் வேண்டுதலுக்காக, இந்தத் தலத்தில் கிருஷ்ணர் எழுந்தருளினார் என்று ஆலய வரலாறு சொல்லப்படுகிறது.


கண்ணன் திருக்கோலம் உற்சவர் ராஜகோபால சுவாமி, இந்த ஆலயத்தில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேஷ்டி அணிந்து, அதையே தலைப்பாகையாக சுருட்டி வைத்துள்ளார்.

வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார்.

இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய குழந்தைகள் அணியும் அணிகலன்களை அணிந்திருக்கிறார்.

 அவரோடு ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன.
கோவர்த்தன கிரி கண்ணன் திருக்கோலம்.

 ஆண்டின் 12 மாதங்களிலும் நடைபெறும்  உற்சவங்கள் ...


சித்திரை மாதம்  - கோடை உற்சவம் - 10 நாட்கள்

வைகாசி மாதம் - வசந்த உற்சவம்  - 10 நாட்கள்

ஆனி மாதம் -  தெப்போற்சவம் - 10 நாட்கள்,

ஆடி மாதம் – ஆடிப்பூரம் - 10 நாட்கள். செங்கமலத் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைப் பெறும்.

ஆவணி மாதம் -  பவித்ரோற்சவம்  - 10 நாட்கள்.

புரட்டாசி மாதம் - நவராத்திரி       - 10 நாட்கள்.

ஐப்பசி மாதம் -   கோலாட்ட உற்சவமும் தீபாவளி உற்சவமும் கொண்டாடப் படும்

கார்த்திகை மாதம்- சொக்கப் பானையுடன் கார்த்திகை உற்சவம்

மார்கழி மாதம் - அத்யயன உற்சவம் - 20 நாட்கள்.இராப்பத்து, பகல் பத்து உற்சவம்.

தை மாதம் -   பொங்கல் உற்சவம்- 10 நாட்கள், தாயாருக்கும் உற்சவம் நடைப்பெறும்

மாசி மாதம் -  டோலோற்சவம் -10 நாட்கள்

பங்குனி மாதம் - ’பிரம்மோற்சவம் - 18 நாட்கள்


இராஜ அலங்காரம்.

தாயார்  பெருமாள் சேர்த்தி சேவை


ஆண்டாள் திருக்கோலம்.
மோகினி திருக்கோலம் மிக சிறிய வயதில் சென்ற ஆலயம் . மனதிற்கு மிக பிடித்த ஆலயமும் ...மீண்டும் செல்ல ஆசைப் படும் கோவிலும் கூட ...புரட்டாசி மாத பிறப்பில் கோபுர தரிசனம் பதிவில் இவரின் சில படங்களை பகிர்ந்தேன் . அப்பொழுது இன்னும் சில படங்களை பகிரலாம் என்னும் ஆசையில் இணையத்தில் நான் கண்டு மகிழ்ந்த படங்களை இங்கும் பகிர்கிறேன் ...


வருடம் முழுவதும் திருவிழா கோலம் கொண்டுள்ளதால்  போன வருடத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகளில் இருந்து சில படங்கள் இங்கு அவன் அருளால் ...


 

யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்


அஞ்சனவண்ணனை ஆயர்குலக்கொழுந்தினை *
மஞ்சனமாட்டி மனைகள்தோறும்திரியாமே *
கஞ்சனைக்காய்ந்த கழலடிநோவக்கன்றின்பின் * 
என்செயப்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. (2)

1 234


பற்றுமஞ்சள்பூசிப் பாவைமாரொடுபாடியில் *
சிற்றில்சிதைத்து எங்கும்தீமைசெய்துதிரியாமே *
கற்றுத்தூளியுடை வேடர்கானிடைக்கன்றின்பின் *
எற்றுக்குஎன்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. 

2 235


நன்மணிமேகலை நங்கைமாரொடுநாள்தொறும் *
பொன்மணிமேனி புழுதியாடித்திரியாமே *
கன்மணிநின்றதிர் கானதரிடைக்கன்றின்பின் *
என்மணிவண்ணனைப்போக்கினேன் எல்லேபாவமே.

3 236


ஓம் நமோ நாராயணா..


அன்புடன்
அனுபிரேம்


13 comments:

 1. அம்மாடி...    எவ்வளவு படங்கள்...    சுக தரிசனம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம் சார்

   Delete
 2. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி தரிசனம் செய்து கொண்டேன்.
  அவர் அழகு நம்மை ஆட்க்கொள்ளும்.
  நிறைய தடவை போய் இருக்கிறேன்.

  கோவில் அழகு இறைவன் அழகு.
  பகிர்வு அருமை.

  ReplyDelete
 3. வணக்கம் சகோதரி

  அழகான மனதை கவர்ந்த படங்கள். அருமையான பகிர்வு. ஒவ்வொரு படங்களையும் பெரிதுபடுத்தி பரந்தாமனின் தரிசனம் மெய்சிலிர்க்க, அகம் குளிர கண்டு தரிசித்தேன். அத்தனையும் அவ்வளவு அழகு. ஸ்தல புராணம் படித்து மகிழ்ந்தேன். இன்னமும் இந்த கோவிலுக்கு செல்லும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. தங்கள் பதிவில் ராஜ கோபலனை தரிசித்த பலன் நேரில் சென்று தரிசிக்க வாய்ப்பு கிடைத்தால் தன்றாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. மிக மகிழ்ச்சி கமலா அக்கா ...அழகனின் படங்கள் உங்களை கவர்ந்ததில் ..

   விரைவில் உங்களுக்கு நேரில் செல்லும் பாக்கியம் கிட்டும் ...அப்பொழுது ராஜ கோபாலனை நேரில் கண்டு மகிழ அவன் வழி செய்வான் ..

   Delete
 4. சில பெருமாள் படங்களை (உற்சவர்) பார்த்த உடனேயே இனம் கண்டு கொள்ளலாம் (அல்லிக்கேணி, காஞ்சி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள், வடுவூர், மன்னார்குடி போன்றவை).

  நானும் ஆநிரை படங்களையே காணோமே என்று தேடினேன். ஒரு சில படங்களில் போட்டிருக்கீங்க.

  நிறைய படங்கள். மிக அழகு. வெண்ணெய்க்காப்பு முகம்கூட போட்டிருக்கீங்க.

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு உற்சவத்திலும் ஒவ்வொரு சேவை ...அப்படங்களையே தொகுத்து பதிவிட்டேன் ....

   Delete
 5. 'வருடம் பூராவும் திருவிழா "படங்களும் அதையே சொல்கின்றன அழகிய தரிசனம்.

  ReplyDelete
 6. அழகான படங்கள். ராஜகோபால சுவாமிகளின் வெண்ணெய்காப்பு தரிசனம் அழகு. கடைசி படம் மிகவும் அழகு.

  ReplyDelete
 7. அழகான படங்கள். மன்னை மிகவும் அழகான ஊர்.

  உங்களுக்குத் தெரியுமா என எனக்குத் தெரியாது - மன்னையை ஊராகக் கொண்ட சில பதிவர்கள் சிலர் பதிவுலகில் இருந்ததுண்டு. இப்போது அனைவருமே இங்கே எழுதுவதில்லை. ஒருவர் முகநூலில் இருக்க, மற்றவர்கள் எழுதுவதே இல்லை.

  ReplyDelete