வாழ்க வளமுடன்
இன்றைய சுவையான பதிவில் ....ரவா உருண்டை
தேவையானவை
ரவை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
நெய் – 1/2 கப்
ஏலக்காய் – 3
முந்திரி – 1௦
ரவா உருண்டை செய்முறை-
ஒரு அடி கனமான கடாயில், ரவையை நிறம் மாறாமல், மிதமான தீயில் வறுக்கவும். பின் ஆற வைத்து மிக்சியில் நைசாக பொடிக்க வேண்டும்.
பிறகு சர்க்கரையையும் ஏலக்காயும் சேர்த்து நன்கு நைசாகப் பொடிக்கவும்.
இரண்டையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி சூடு செய்த நெய் மற்றும் வறுத்த முந்திரிப்பருப்பை சேர்த்து , கலந்து, உருண்டைகளாக அழுத்திப் பிடிக்கவும்.
எளிமையான ரவா உருண்டை தயார் ...
பொதுவாக அனைவரது வீட்டிலையும் செய்யும் முறை தான் . ...இருப்பினும் படம் எடுத்ததால் பகிர்ந்தேன் ...
சிலர் பால் சேர்த்து செய்வார்கள் , ஆனால் அது விரைவில் தீர்க்க வேண்டும் . இந்த நெய் சேர்த்த ரவா உருண்டை பல நாள் நன்றாக இருக்கும் ...
அன்புடன்
அனுபிரேம்
ரொம்ப நல்லா வந்திருக்கு. உருண்டை யூனிஃபார்மா வராதது தவறில்லை. சாப்பிடத்தானே போறோம்.
ReplyDeleteஇனிப்பு சாப்பிடக்கூடாது என்ற என் விரதத்தைக் கெடுத்துவிடுவீர்கள் போலிருக்கே..கர்ர்ர்ர்ர்
ஹா ஹா ஹா ஹா நெல்லை நான் சொன்னேனே உங்களால் விரதம் எல்லாம் இருக்க முடியாதுன்னு. அதுவும் ஸ்வீட் சாப்பிடாமல்!!!!!!! ஹா ஹா ஹா...அதுக்கு விரதம்னு எல்லாம் உறுதி மொழி எடுக்காம ஸ்வீட் தொடாம இருங்களேன்...ஹிஹிஹி
Deleteகீதா
ரவா உருண்டை பார்க்கவே அழகு.
ReplyDeleteஅருமை.
தீபாவளி வாழ்த்துக்கள்.
நல்லாருக்கு அனு!!! ரவா உருண்டை நாலே எனக்கு என் அம்மாவின் அம்மா நினைவுக்கு வந்துவிடுவார். வீட்டில் எப்போதும் ரவையும் சர்க்கரையும் சேர்த்து பொடித்து வைத்திருப்பாங்க. ரவை வறுத்து மெஷினில் கொடுத்து பொடித்து அதோடு சர்க்கரை பொடித்ததும் கலந்து அதிலேயே ஏலக்காய் பொடியும் போட்டு எப்ப வேண்டுமோ அப்ப நெய் மட்டும் விட்டு கலந்து உருண்டை.
ReplyDeleteஇங்கு சிரோட்டி ரவையில் செமையா வருது. ஏற்கனவே அது பொடியாதான் இருக்கு. அதை வறுத்து பொடித்தால் நல்லா பொடியாகிடும்.
தீபாவளி வாழ்த்துகள்.
சூப்பரா கொண்டாடுங்க!!
கீதா
இதுவும் மாலாடும் எங்கள் வீட்டில் தவறாது இடம்பெறும்!
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅழகான படங்கள். அருமையாக வந்திருக்கிறது ரவா உருண்டை. தெளிவாக செய்முறைகளை விளக்கியுள்ளீர்கள. நானும் இப்படித்தான் செய்வேன். பொட்டுக்கடலை மாலாடும், ரவா லாடும் அடிக்கடி செய்வதுதான். தங்கள் செய்முறை மிகவும் நன்றாக உள்ளது. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ராவா லட்டு பார்க்க அருமையா இருக்கு. இங்கு கொண்டாட்டங்களில் ரவா லட்டுதான் முக்கியம் இடம் பெறும்.ஒரே ஒருமுறை செய்து இறுக்கி போய்விட்டது. இன்னும் அதன் பின் செய்யவில்லை. மறுபடியும் உங்க ரெசிப்பி ஆவலை ஏற்படுத்துது.
ReplyDeleteஉங்களுக்கும்,குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
இனிய தீபாவளி வாழ்த்துகள் அனு
ReplyDelete