16 October 2019

பனீர் டிக்கா


வாழ்க வளமுடன் 


 


இன்றைய பதிவில் சுவையான பனீர் டிக்கா-


தேவையானவை


பனீர் 
குடை மிளகாய்  -1
வெங்காயம் -1



 மசாலாவுக்கு:

தயிர் - கால் கப்,

இஞ்சி - பூண்டு விழுது -1 ஸ்பூன் ,

மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்,

கடலை மாவு -  ஒரு ஸ்பூன்,

மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்,

 மசாலாத்தூள் - 2 ஸ்பூன்,

 உப்பு - தேவையான அளவு.






மசாலாவுக்கு கொடுத்துள்ளவற்றை நன்கு கலந்து கொள்ளவும்,  பிறகு அதில்  சதுரமாக நறுக்கிய  பனீர், வெங்காயம்,  குடை மிளகாய் துண்டுகளை சேர்த்து  கலந்து  30 நிமிடங்கள்  ஊற விடவும்.

இதை நீள கம்பியில் ஒன்றன்பின் ஒன்றாக குத்தி,'மைக்ரோவேவ் அவன்’  னில் கிரில் செய்யலாம் ...


மற்றொரு முறையாக  சிறு குச்சியில் இவற்றை குத்தி  சூடான தவாவில் எண்ணெய் விட்டு...  இரு புறமும் சிவக்க விட்டு எடுத்தால் பனீர் டிக்கா ரெடி.















 இந்த பனீர் டிக்கா செய்முறை மிகவும் எளிமையாகவே இருந்தது... சுவையும் மிக நன்றாக இருந்தது .



அன்புடன்
அனுபிரேம்






10 comments:

  1. அழகிய சுவையான குறிப்பு. நான் இப்படி சிக்கின் டிக்கா , கிரில் பண்ணிச் செய்வதுண்டு, பன்னீரில் செய்ததில்லை இதுவரை.

    ReplyDelete
  2. வாவ் பார்க்க சூப்பரா இருக்கே பனீர் டிக்கா ..பேலியோவில் இருந்தப்போ வெஜிஸ் கூட சேர்த்து வதக்குவேன் ..இந்தமாதிரி செஞ்சதேயில்லை கண்டிப்பா செய்வேன் விரைவில் 

    ReplyDelete
  3. இங்கு நடக்கு பார்ட்டிகளில் எங்காத்து மாமி போல ஆட்களுக்கு இப்படி செய்து கொடுப்பதுண்டு

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    பனீர் டிக்கா பார்க்க நன்றாக உள்ளது படங்கள் செய்முறை மிகவும் எளிதாக அருமையாக உ‌ள்ளது. நான் இது மாதிரியெல்லாம் புது வித உணவுகள் செய்வதில்லை.வீட்டில் மைக்கரோவேவ் அவனும் இல்லை. எனவே அது சம்பந்தபட்ட உணவுகள் கொஞ்சம் அறியாதவைதான். மற்றபடி பனீர் சேர்த்து சப்பாத்திக்கு குருமா மாதிரியெல்லாம் செய்துள்ளேன்.

    தங்கள் செய்முறை எளிதாய் அழகாய் உள்ளது. வெறும் தவாவில் இப்படிச் செய்யலாமா? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வெறும் தவாவில் தான் நானும் செய்தேன் கமலா அக்கா ..மிக நன்றாகவே வந்தது ..

      Delete
  5. மிகவும் எளிமையான செய்முறை.   செய்து சாப்பிடும் ஆவலைத் தூண்டுகிறது.

    ReplyDelete
  6. சூப்பரா இருக்கு அனு. இங்கு ஒருவித சீஸ் இருக்கு அது இப்படி செய்வதுண்டு. பனீர் ரெசிப்பி ஈசியா அருமையா இருக்கு.

    ReplyDelete
  7. எளிமையான செய்முறை.. அதுக்கு ஏத்த பெரிய குச்சி இருந்தால் நல்லது. தவாவில் ஒருமுறை செய்து பார்க்கிறேன்.

    படத்தைப் பார்க்கும்போதே நாசியில் வாசனை...ஹா ஹா

    ReplyDelete
  8. சோளமா சேர்பதுண்டு,கடலைமா சேர்ததில்லை.செய்து பார்கிறேன்.

    ReplyDelete
  9. பனீர் டிக்கா - ஆஹா... இங்கே மிகவும் பிரபலமான Snack! பனீர் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுவார்கள் இங்கே. அதுவும் குளிர் காலத்தில் நிறையவே பயன்பாடு உண்டு.

    ReplyDelete