வாழ்க வளமுடன்
இன்றைய சுவையான பதிவில் ....சோளமாவு அல்வா
இன்றைய சுவையான பதிவில் ....சோளமாவு அல்வா
தேவையானவை
சோள மாவு – 1/2 கப்
சர்க்கரை – 1 & 1/4 கப்
தண்ணீர் – 2 & 1/2 கப்
எலுமிச்சை பழம் - 1
முந்திரி – தேவையான அளவு
சிட்டிகை கேசரி பவுடர்
ஏலக்காய் – 2
நெய் – 1/4 கப்
செய்முறை
சோள மாவை , 1 & 1/2 கப் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து, பின்னர் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை , 1 கப் தண்ணீர் சேர்த்து, பிசுக்கு பதம் வரும் வரை கொதிக்கவிடவும்.
பின் அதில் கரைத்த மாவை ஊற்றி, கை விடாமல் கிளறவும்.
சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
நன்றாக உருண்டு அல்வா பதம் வரவும் நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறவிடவும். மேலே வறுத்த முந்திரியை சேர்க்கவும் .
ஒரு மணிநேரம் கழித்து, அதனை துண்டுகளாக்கினால் சோளமாவு அல்வா ரெடி!!!
இந்த சோளமாவு அல்வா செய்முறை எளிது தான்... சுவையும் அருமையாக இருந்தது .
அன்புடன்
அனுபிரேம்
சுவையான குறிப்பு. தொடரட்டும் தங்கள் புதுப் புது சமையல் முயற்சிகள்.
ReplyDeleteஅருமையான அல்வா. பார்க்கவே அழகாய் இருக்கிறது அனு.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteசோள மாவு அல்வா சூப்பராக வந்திருக்கிறது. படங்கள் செய்முறை எல்லாம், அழகாக விபரமாக உள்ளது. கோதுமை மாவு, மைதா மாவில் இது போல் செய்துள்ளேன். சோள மாவில் இதுவரை செய்ததில்லை. பார்க்க மிக அழகாக உள்ளது. இனிப்பு ரெசிபி அருமையாக செய்து பகிர்ந்து கொண்ட தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் முன்னதான தீபாவளி நல்வாழ்த்துக்கள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரொம்ப நல்லாவே இருக்கும். நான் மும்பையில் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன். இதுல ஸ்பெஷல் என்னன்னா, அந்த எலுமிச்சைச் சாறு சேர்ப்பதால் வரும் லைட் புளிப்புதான். இன்னொன்று நல்லா ஜவ்வு மாதிரி அல்வா இருக்கும்.
ReplyDeleteசுவையான குறிப்பு
உங்களின் அல்வா மிகவு நன்றாக வந்திருக்கிறது. இதை பாம்பே அல்வா என்பர்கள் செய்வது எளிது இதை நானும் செய்து பதிவும் இட்டுள்ளேன் லிங்க் இங்கே http://avargal-unmaigal.blogspot.com/2018/06/bombay-halwa.html
ReplyDeleteபார்க்கவே சூப்பரா இருக்கே ..நானா இதுவரை செஞ்சதுமில்லை சுவைத்ததுமில்லை .செய்து பார்க்கணும்
ReplyDeleteஆவ்வ்வ் மிக நன்றாக, நல்ல பதமாக செய்துவிட்டீங்க அனு.. பார்க்கவே சாப்பிடத் தூண்டுது.
ReplyDeleteவாவ் பார்க்கவே சூப்பரா இருக்கு. படத்தில் பார்க்க சாப்பிடவேண்டும் போல அருமையா இருக்கு.
ReplyDeleteசுவையான குறிப்பு.
ReplyDeleteஅட பாம்பே அல்வா!! இது மிகவும் பிடிக்கும் நம்ம வீட்டுல ஒரு வித புளிப்புடன் செம டேஸ்டியா இருக்கும். கோதுமை அல்வா (பால் எடுத்துச் செய்யும் அல்வா)ல கூட எலுமிச்சை பிழிவோம் இல்லையா அந்தப் புளிப்பு டேஸ்ட் ரொம்பப் பிடிக்கும்...
ReplyDeleteசூப்பரா வந்திருக்கு அனு. ரொம்ப நல்லா செஞ்சுருக்கீங்க.
தீபாவளி ஜரூரா நடக்குது போல!! ஹா ஹா ஹா...
கீதா