12 October 2019

சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில் , அழகிய மணவாளம்.

 ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில் , அழகிய மணவாளம், மண்ணச்சநல்லூர், திருச்சி .






திருச்சியிலிருந்து 15 கி.மீ  தொலைவில் , மண்ணச்சநல்லூர் என்னும் ஊரில்,  அழகிய மணவாளம்  என்ற கிராமத்தில்  இக்கோவில் அமைந்துள்ளது .

பசுமையான வயல் வெளிகளுக்கு நடுவே இப்பெருமாள் கோவில் கொண்டுள்ளார்.






இக்கோவில் மிக பழைமையானதும் , சிறப்பு வாய்ந்ததும்  என்பதை பின்வரும் செய்திகள் மூலம் அறியலாம் ..

அந்தச் சம்பவம்...

1321-ம் ஆண்டு டில்லியை ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னர் கியாசுதீன் துக்ளக் என்பவரின் மகன் உலூக்கான் யுவராஜாவாக பட்டம் சூட்டிக்கொண்டான். அதை ஒட்டி தென்னிந்தியாவின் மீது படையெடுக்க ஆயத்தம் செய்தான். இவனே பின்னர் மன்னரானதும் முகமதுபின் துக்ளக் என்ற பெயரோடு ஆட்சி செய்தான்.

1323 ஆம் ஆண்டு உலூக்கான் பெரும் படையோடு தமிழகத்தை நோக்கி வருகிறான் என்ற செய்தி கேள்விப்பட்டதும், அனைவரும் பதற்றம் அடைந்தனர் . புராதனமான ஆலயங்களைப் பாதுகாக்க வேண்டுமே என்ற உயர்ந்த எண்ணம்தான் அவர்களின் பதற்றத்துக்குக் காரணம்.


அப்படித்தான் உலூக்கான் படையெடுத்து வருவதைக் கேள்விப்பட்டதுமே திருவரங்கத்தைச் சேர்ந்தவர்கள் திடுக்கிட்டனர். எங்கே கோயில் சொத்துக்கள் கொள்ளை போய்விடுமோ, தெய்வ திருமேனிகள்  பின்னப்படுமோ என்றெல்லாம் அஞ்சியவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

அப்போது பிள்ளை லோகாச்சாரியார் என்ற வைணவ அடியார் , திருவரங்கம் கோவிலின் மூலவர் ரங்கநாதப் பெருமாளையும், தாயார் ரங்கநாயகியையும் மறைத்துச் சுவர் எழுப்பினார்.


பின்னர் சிலரை துணைக்கு அழைத்துக்கொண்டு, உற்சவ மூர்த்தியான அழகிய மணவாள நாதனை பாதுகாக்க வேண்டி, சுமந்து கொண்டு ஊர் ஊராக பயணம் சென்றார்.

 எங்கே ஒரே இடத்தில் தங்கினால் பெருமாள் இருக்கும் இடம் எதிரிகளுக்கு தெரிந்து விடுமோ என்று பயந்து  அழகர் கோயில், முந்திரி மலை பள்ளத்தாக்கு,  கோழிக்கோடு,  திருக்கணாம்பி, திருநாராயணபுரம்,  திருப்பதி,  செஞ்சி,  அழகியமணவாள கிராமம் என பல இடங்களில் பெருமானை மறைத்து வைத்து பாதுகாத்தார்.


எல்லா இடங்களிலும் தன்னால் இயன்ற பூஜைகளை செய்து வழிபட்டார். 118 வயதில் பிள்ளை லோகாச்சாரியார்  பெருமாளை காக்கும் முயற்சியில் மதுரை கொடிக்குளம் அருகே எதிரிகள் முற்றுகையிட்ட போது மலைக்குகை உச்சியை அடைந்த பெரியவர், தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் மறைந்தும் போனார்.

அவரது சீடர்களால் ஸ்ரீரங்கம் உற்சவ மூர்த்தியான அழகிய மணவாள நாதப் பெருமாள் கவனமாக பாதுகாக்கப்பட்டு , பின்னர்  48 ஆண்டுகள் கழித்து இனி எதிரிகள் தொல்லை இல்லை என்ற நிலையில்  மீண்டும் திருவரங்கம் வந்தார் நம் பெருமாள்.






( மிக பெரிய சரித்திரம் இது ..இன்னும் அறிந்துக் கொள்ள வேண்டிய செய்திகள் பல உள்ளன.)  நம் பெருமாள் சில காலம் தங்கிய இடம் இந்த அழகிய மணவாளம் கோவில் .



 இங்கு யோக நரசிம்மர் சன்னதி  மற்றும் விஷ்வக்க்ஷேனர் சன்னதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன.










கோபுர தரிசனம் 










 இங்கிருக்கும் மூலவர் மிக உயர்ந்த திருமேனி.அவரின் திருநாமம்  சுந்தரராஜப் பெருமாள்  நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் தரிசனம் தருகிறார்.


இணையத்திலிருந்து
 மூலவரை எப்பொழுதும் நாங்கள்  படம் எடுப்பது இல்லை , அதனால் இணையத்திலிருந்து கிடைத்த அழகிய படங்களை   பகிர்கிறேன் .


இணையத்திலிருந்து




வம்பவிழும்துழாய்மாலைதோள்மேல் 
கையன ஆழியும்சங்கும்ஏந்தி *
நம்பர்நம்இல்லம்புகுந்துநின்றார் 
நாகரிகர்பெரிதும்இளையர் *
செம்பவளம்இவர்வாயின்வண்ணம் 
தேவரிவரதுஉருவம்சொல்லில் *
அம்பவளத்திரளேயும்ஒப்பர் 
அச்சோஒருவரழகியவா!

4 1761


கோழியும்கூடலும்கோயில்கொண்ட 
கோவலரேஒப்பர், குன்றமன்ன *
பாழியந்தோளும் ஓர்நான்குடையர் 
பண்டு இவர்தம்மையும்கண்டறியோம் *
வாழியரோஇவர்வண்ணம்எண்ணில் 
மாகடல்போன்றுளர், கையில்வெய்ய *
ஆழியொன்றேந்திஓர்சங்குபற்றி 
அச்சோஒருவரழகியவா! 

5 1762

வெஞ்சினவேழம்மருப்பொசித்த 
வேந்தர்கொல்? ஏந்திழையார்மனத்தை *
தஞ்சுடையாளர்கொல்? யான்அறியேன் 
தாமரைக்கண்கள்இருந்தவாறு *
கஞ்சனையஞ்சமுன்கால்விசைத்த 
காளையாரவர், கண்டார்வணங்கும் *
அஞ்சனமாமலையேயும்ஒப்பர் 
அச்சோஒருவரழகியவா! 

6 1763


பிணியவிழ்தாமரைமொட்டலர்த்தும் 
பேரருளாளர்கொல்? யான்அறியேன் *
பணியும்என்நெஞ்சமிதென்கொல்? தோழீ! 
பண்டுஇவர்தம்மையும்கண்டறியோம் *
அணிகெழுதாமரையன்னகண்ணும் *
அங்கையும்பங்கயம், மேனிவானத்து *
அணிகெழுமாமுகிலேயும்ஒப்பர் 
அச்சோஒருவரழகியவா! 

7 1764












மிக பொறுமையாக தரிசனம் செய்யலாம் , மிக அமைதியான  கோவில், வயல்வெளியும் , தென்னை மரங்களும் சூழ உள்ள இடம் .

இங்கு செல்ல பேருந்து வசதி எப்படி என்று தெரியவில்லை . சொந்த வாகனத்தில் செல்லும் போது மிக எளிதாகவே இங்கு செல்லலாம் .


ஓம் நமோ நாராயணா..


அன்புடன்
அனுபிரேம்


14 comments:

  1. வாய்ப்பு கிடைக்கும்போது நாங்கள் செல்லத்தக்க வகையில் பதிவிட்ட விதம் அருமை.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    அருமையான கோவில் தரிசனம் தங்களால் கிடைக்கப் பெற்றேன். ஊரின் பெயரும், கிராமத்துப் பெயரும் அழகாக உள்ளன. அழகிய மணவாளம் பெயர் மட்டுமல்ல.. அங்கு குடி கொண்டுள்ள சுந்தர ராஜ பெருமாளும் மிக அழகு.. கோபுர தரிசனங்கள் நன்றாக இருக்கிறது.

    ஸ்தல புராணம் நன்றாக உள்ளது. விபரங்கள் அறிந்து கொண்டேன். சென்று தரிசித்து வர மனம் வேண்டுகிறது. தங்கள் பதிவில் அருமையாக தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி. பகிர்வுக்கும் மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தொடர் ஊக்கம் மிகு வார்த்தைகள் உற்சாகம் தருகின்றன அக்கா..

      மிகவும் நன்றி

      Delete
  3. நல்லதொரு அழகிய சூழலில் கோவில் இருக்கு. பார்க்க அருமையா இருக்கு. 6 வது படம் எங்க் ஊரில் இருக்கும் நாகதம்பிரான் கோவிலை ஞாபகப்படுத்துது. பெருமாளின் படம் அழகா இருக்கு. தகவல் மூலம் பெருமாளின் செய்திகளை அறியக்கூடியதாக இருந்தது.அருமை.

    ReplyDelete
  4. மண்ணச்சநல்லூர் அருகே இப்படி ஒரு கோவில் இருப்பது அறிந்து இருக்கவில்லை. அடுத்த பயணத்தில் அங்கே செல்ல வேண்டும் என குறித்து வைத்துக் கொண்டேன். தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சென்று வாருங்கள் ..அருமையான இடம் ..

      Delete
  5. நல்லதொரு கோவில். கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் சென்றதில்லை.

    மிலேச்சர்களின் படையெடுப்பை எழுதி மனதை சோகத்தில் ஆழ்த்திவிட்டீர்கள். இந்த வரலாறு தரும் சோகம், அவர்களால் அழிக்கப்பட்ட கோவில், ஸ்ரீவைணவர்கள் என்று மனத்தில் எண்ணங்கள் தோன்றுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. திருவெள்ளறை செல்லும் போது வழியில் தான் இந்த கோவில் ...முடியும் போது சென்று வாருங்கள் ..

      மிலேச்சர்களின் படையெடுப்பை பற்றி அதிகம் விவரம் தெரியாது ...மேலதிக செய்திகள் மட்டுமே அறிவேன் ...

      கீதா மா தளத்தில் படித்தாலும் இன்னும் மனதில் பதியவில்லை ..

      அதற்கான நூல் தேடும் போது அரங்கன் உலா என்னும் நூல் பற்றி அறிந்து இப்பொழுது வாசிக்க ஆரம்பித்துள்ளேன் ..

      Delete
  6. பிள்ளைலோகாச்சார்யார், கால் தடுமாறி விழுந்து இறந்தார் என்பது புதிய செய்தி எனக்கு. வயதானதால் இறந்தார் என்றும், இறப்பதற்கு முன்பு, தன் கருணைக்கண்களால் சுற்றி இருக்கும் மரம் செடி கொடிகளைப் பார்த்து அவைகளுக்கும் முக்தி அருளினார் என்று படித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஓ..அப்படியா சரியான விவரம் தேடி பார்கிறேன் ..

      Delete
  7. கோவில் பற்றிய விவரங்கள் அறிந்து கொண்டேன். வெங்கட் தளத்தில் இருந்த சுட்டி மூலம் வந்தேன்.

    ReplyDelete
  8. இன்று வெங்கட்ஜியின் தளத்தில் இக்கோயில் பற்றி வாசித்து உங்கள் சுட்டியும் தந்ததும் நினைவுக்கு வந்தது இங்கு வந்து பார்த்ததும் பதிவு பார்த்த வாசித்த நினைவும் இருக்கு ஆனால் கருத்து போடாமல் போயிருக்கிறேன்.

    கோயில் பற்றிய விவரங்கள் எல்லாம் அறிகிறேன். கோயில் சின்னதுதான் இல்லையா? ஆனால் பசுமையின் நடுவில் அழகாக இருக்கிறது.
    வெங்கட்ஜி பேருந்தில் சென்று வந்த விவரம் அங்கு சொல்லியிருக்கிறார் அனு.

    நானும் எங்குமே மூலவரை படம் எடுக்க அனுமதி இருந்தாலும் எடுப்பதில் எனக்குத் தயக்கம் உண்டு.

    கோபுரம் படம் அழகு...

    கீதா

    ReplyDelete