14 April 2021

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

 வாழ்க வளமுடன்


நட்புக்கள் அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

ஸ்ரீவில்லிபுத்தூரில் யுகாதி திருநாளை முன்னிட்டு நடைப்பெற்ற ...
யுகாதி ஆஸ்தானத்தில் ஆண்டாள் ,ரெங்கமன்னார் , ஸ்ரீதேவி பூ தேவி சமேத பெரிய பெருமாள் மற்றும்  ஆழ்வார்கள் .....












பெருமாள் திருமொழி

நான்காம் திருமொழி - ஊனேறு


ஆழ்வார் திருவேங்கடமலையிற் பிறத்தலை அவாவுதல்


ஊனேறுசெல்வத்து உடற்பிறவியான்வேண்டேன் * 
ஆனேறேழ்வென்றான் அடிமைத்திறமல்லால் * 
கூனேறுசங்கமிடத்தான்தன் வேங்கடத்து *
கோனேரிவாழும் குருகாய்ப்பிறப்பேனே. (2) 

1 677


ஆனாதசெல்வத்து அரம்பையர்கள்தற்சூழ *
வானாளும்செல்வமும் மண்ணரசும்யான்வேண்டேன் * 
தேனார்பூஞ்சோலைத் திருவேங்கடச்சுனையில் *
மீனாய்ப்பிறக்கும் விதியுடையேனாவேனே.

2 678


பின்னிட்டசடையானும் பிரமனும்இந்திரனும் *
துன்னிட்டுப்புகலரிய வைகுந்தநீள்வாசல் *
மின்வட்டச்சுடராழி வேங்கடக்கோன்தானுமிழும் * 
பொன்வட்டில்பிடித்து உடனேபுகப்பெறுவேனாவேனே. 

3 679


அனைவரும் எல்லா நலமும், வளமும், பெற்று

இந்த பிலவ ஆண்டில் மகிழ்வுடன் வாழ

எங்களது இனிய வாழ்த்துக்களும் .....



அன்புடன்
அனுபிரேம்





6 comments:

  1. படங்கள் நன்று.

    அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். எல்லாம் வல்ல எம்பெருமான் அனைவருக்கும் அருள் புரிய எனது பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  2. மிக அருமையான தரிசனம்.... ரங்கமன்னார் கோவிலைச் சேவித்தது நினைவுக்கு வந்துவிட்டது
    .
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்.

    ReplyDelete
  3. அருமையான படங்கள்.  இனிய பிலவ வருட புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    அருமையான தரிசனம் கிடைத்தது.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. ஸ்ரீ ரங்கத்து நம்பெருமானை தரிசனம் செய்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete