29 September 2014

எனக்கும் வலைப்பூ விருது...........

 எனக்கும் விருது...

ஆம் தமிழ்  வலைப்பூ எழுத  வேண்டும்  என்று ஆரம்பித்து...இன்னும்  எழுதவே இல்லை ஆனால் அதற்குள்  விருது...


நன்றி ஏன்சலின்  (kaagidhapookal .)..நான் இந்த வலைப்பூவை ஆரம்பித்ததே உங்களை பார்த்து இப்பொழுது நீங்களே விருதும் கொடுத்து  ஊக்குவிப்பது ஆகா..மீண்டும்  நன்றி ..

பல  பதிவுக் களை  இங்க   பதிவிட ஆசை  ஆனால் கடத்த  மாதம் முழுவதும் பசங்க தேர்வு, பிறந்த   நாள்  கொண்டாட்டங்கள், திடிர் திருப்பதி பயணம் என ரொம்ப பிஸி ...

ஆனால்  எல்லாருடைய வலைதளமும் இப்பொழுது விருதால் மகிழ்ச்சியாக    உள்ளது ..ஆம்  அனைவரும்  தாமும் மகிழ்ந்து  அனைவருக்கும் பகிர்ந்து எனற  நிலையில்.....எனக்கும் விருது...

இதை   கொண்டாட  இந்தாங்க  இனிப்பு ...வீட்டில் செய்தது  பாசி பருப்பு உருண்டை 










எனக்கு  கிடைத்த விருதை  நான் ஐந்து பேருக்கு பகிரனும் ...ஆன எல்லாருக்கும் விருது கிடச்சாச்சு   (நான்தான் கடைசி போல  )....

கடைசியாக  நான் கண்டுபிடித்த  ஐவர்

  ராஜி அம்மா  அவர்களின்  சமையலுக்காக

சகோதரர் சிவா  அவர்களின் தோட்டத்திற்காக

அமுதா கிருஷ்ணன்  அம்மா  அவர்களின் எழுத்திற்காக

சகோதரி தியானா  அவர்களின் பூந்தளிர்காக

ராஜி அம்மா  அவர்களின் கனவுகளுக்காக



மேலும்  இ ங்கு  வந்து என்னை உக்கப்படுத்தும்  அனைவர்க்கும்  எனது மனமார்ந்த  நன்றிகள் ...



அன்புடன்
அனுபிரேம்



20 August 2014

புதுசு.....என்ற தலைப்பிற்கான எனது புகைப்படங்கள்.....




காலை வணக்கம் ....

புதுசு.....என்ற தலைப்பிற்கான எனது புகைப்படங்கள்.....
வழக்கம் போல் இவையும் ஏரியில் எடுத்தவை .....

















அன்புடன்
அனுபிரேம்

15 August 2014

படித்ததில் பிடித்தது..........

படித்ததில் பிடித்தது..........


நாவல்களை தவிர சில நேரங்களில் .. ....இந்த புத்தகங்களையும் படிப்பது உண்டு...


Please intha puthagathai vaangatheenge


அவ்வாறு கடைசியாக படித்தது ... ப்ளீஸ் இந்த  புத்தகத்தை  வாங்கதீங்க( please intha puthagathai vaangatheenga) -கோபிநாத் 

நீங்கள் ஏழையாக இருந்தால் உங்கள் மனசும் ஏழையைப் போலவே சிந்திக்க வேண்டுமா.......

எதை சிந்திக்கிறீர்களோ அதைத்தான் பெறுகிறீர்கள்....உயர்வாகவும்,எண்ணங்களில் ஏழ்மை  இல்லாமலும் மனதை வைத்துக் கொள்வது.....


என பல தெரிந்த செய்திகளை எளிமையாக கூறுகிறார்....

நேரம் கிடைக்கும் போது....கண்டிப்பாக வாசியுங்கள்....


இப்படிக்கு

அனுபிரேம்




01 August 2014

வெள்ளையும் மஞ்சளும் ..


இந்த  புகைபடங்கள் அனைத்தும் வெள்ளைநிறமும்  மஞ்சள்நிறமும் என்ற தலைப்பிற்காக எடுத்தது..

முதல் படம் என் மகனின் ஆசைக்காக ....காய்யுடன்




 இவைகள் எல்லாம் ஏரிகரையில் எடுத்தவை









 இவைகள் எல்லாம் வீட்டில் எடுத்தவை ஆனால் அனைத்தும் ஒவ்வொறு கோணம்










மொத்தமாக நூறுக்கு மேல் எடுத்தேன்...நல்லவேளை  டிஜிட்டல்  கேமரா ...


அன்புடன்
அனுபிரேம்



24 July 2014

தக்காளி செடி......


காலை வணக்கம் ....

எனக்கும் செடி வளர்க்க வேண்டும் என்று பல நாள் .......வருட கனவு

8 வருசத்துக்கு முன் வாங்கின தொட்டி இது....நானும் பலமுறை பலவிதமாக முயற்சி செய்தும்.............ஒண்ணும் வளறல....

கடைசியா ஏப்ரல் மாதம் வந்த அம்மா....சும்மா ஒரு தக்காளிய நசிக்கி போட்டாங்க...


10 நாள்ல வளர ஆரம்பித்து விட்டது...

ஆன எனக்கு கவலையும் ஆரம்பித்து விட்டது.....ஆமா  நான் ஒரு மாசத்துக்கு ஊருக்கு போறேனு...

ஆன அவர்கிட்ட மட்டும் தண்ணி ஊத்த சொல்லிட்டு கிளம்பியாச்சு...

ஒரு மாசத்திற்கு பிறகு...........

ஆச்சரியம்....எல்லாரும் நல்லா வளர்ந்திதாங்க.....

தொட்டிக்குள்ள மண்ணு மட்டுமில்ல பிரட் எல்லாம் இருந்தது....

 நல்லா  செடிய வளர்திருக்கிங்கன அவருக்கும் ஒரு பாராட்டை கொடுத்தாச்சு.....


 அவங்க எப்போ காய் காய்ப்பாங்கனு எல்லாம் எனக்கு தெரியாது  ஆன மனசுக்கு  ரொம்ப சந்தோசம்....அதை உங்ககிட்ட பகிர்ந்துக்கதான் இந்த பதிவு...........



தினமும் அந்த இலைய தொட்டு வாசம் பிடிப்பது..........அப்பப்பா...ஆனந்தம்















எங்க செடியில் காய்த்த  தக்காளி    உங்கள் பார்வைக்கு...



என்றும் அன்புடன்

அனுபிரேம்










04 July 2014

எனது தமிழ் வரிகளின் முயற்சி.....................



அனைவருக்கும் காலை வணக்கம்

எனது  anu-rainydrops வலைதளத்தில்  நான் அதிகமாக டைப்  அடிப்பதே இல்லை.....அனைத்தும்  புகைப்படத்திலே  விளங்கிவிடும்.....


ஆனால் தமிழ் பதிவு செய்வதற்காக நான் செய்த முயற்சிகள் இவை...

நாள் 1

1. தமிழ் keyboardயை  (lexilogos. keyboard) கண்டுபிடித்து டைப்பிங்கு பயிற்சி..ஏன்எனில் இதுவரை தமிழ் டைப் செய்ததே இல்லை...


நாள் 2

2.தமிழ் virtual  keyboard ல் (Tamil-Keyboard)  பயிற்சி.....

நாள் 3

எனது கணவரின் உதவியால்....settingsல்  languageஜ மாற்றி   அடுத்த முயற்சி

அடுத்ததாக ஒரு பெரும் முயற்சியாக  சிறுகதை விமர்சனப்போட்டியில்  ( gopu1949 )பங்கேற்க எண்ணம் ஏற்பட்டது...

ஐயாவின் உற்சாகமிக்க சொற்கள் என்னை பங்கு பெற செய்தது...

அதற்காக நான் 2 நாட்கள் செலவிட்டேன்...கை வலியே வந்து விட்டது...(veeeery slow typing.....)


ஆனால் நானும் தமிழ் பதிவு செய்வதற்கு கற்றுக் கொண்டேன் என நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்...












நன்றிகளுடன் 

அனுபிரேம்


03 July 2014

நன்றி....

அனைவருக்கும் காலை வணக்கம் .....


kaagidhapookal  வலைத்தளத்தை  படிக்க ஆரம்பித்த  உடன்  எனக்கும்  தமிழ்  வலைத்தளம் ஆரம்பிக்க வேண்டும் என்ற  எண்ணம் ஏற்பட்டது..அதனால் உதித்ததே இந்த அனுவின் தமிழ் துளிகள்...



நன்றி  Angelin ....




என்றும் அன்புடன்

அனுபிரேம்