01 January 2018

திருப்பாவை 17








ஆடைகளையும்,  குளிர்ந்த நீரையும்,  உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே!
தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும்.
விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.


ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....








அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. நலம் பெருகட்டும்..
    நன்மைகள் சூழட்டும்..

    தங்களனைவருக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. ஆண்டாள் திருவடிகள் போற்றி..

    ReplyDelete
  3. இரண்டாம் படம் ரொம்ப அழகு.

    ReplyDelete