12 July 2018

திருவள்ளுவர் சிலை

   வாழ்க நலம்...


                    
அடுத்து நாங்கள் செல்ல வேண்டியது    திருவள்ளுவர் சிலை ஆனால் அங்கு நடக்கும் பராமரிப்புப் பணிகள் காரணமாக அங்கு செல்ல  அனுமதி இல்லை...

அதனால்    விவேகானந்தர் பாறையிலிருந்தே பார்த்து ரசித்தோம்..








தமிழினம் செழிக்க இரண்டடி குறள் தந்த வள்ளுவருக்கு  எழுப்பப்பட்டுள்ள 133 அடி உயரச் சிலை.

இந்த உயரம் 133 அதிகாரங்களை நினைவுபடுத்துகிறது.

நவீன கட்டடக் கலையின் அழகையும் திராவிடக் கலை நுட்பங்களையும் உள்ளடக்கி 5000க்கும் மேற்பட்ட சிற்பிகளின் உளியில் பிறந்த அற்புதம்.






இந்த சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு 2000, சனவரி 1 இல் திறக்கப்பட்டது.

உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.

பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும்,

பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.








சிலை குறிப்புகள்
மொத்த சிலையின் உயரம் - 133 அடி

சிலையின் உயரம் - 95 அடி

பீடத்தின் உயரம் - 38 அடி

சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.

சிலையின் மொத்த எடை - 7,000 டன்

சிலையின் எடை - 2,500 டன்

பீடத்தின் எடை - 1,500 டன்

பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்





                                                                         

சிலை அளவுகள்

முக உயரம் - 10 அடி

கொண்டை - 3 அடி

முகத்தின் நீளம் - 3 அடி

தோள்பட்டை அகலம் -30 அடி

கைத்தலம் - 10 அடி

உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி

இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி

கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி






அடுத்து வாய்ப்பு கிடைக்கும் போது அய்யனை அருகில் சென்று காண வேண்டும்....ஆனாலும் பரவசம் தான் அய்யனை கண்டதில்..









11.திற்பரப்பு நீர்வீழ்ச்சி

12.கரையோரம்..

13. திற்பரப்பு நீர்வீழ்ச்சி  படகுத்துறை...

14.மாத்தூர் தொட்டிப் பாலம் 1

15. மாத்தூர் தொட்டிப் பாலம் 2

16.   விவேகானந்தர் பாறை


தொடரும்...



அன்புடன்
அனுபிரேம்...





4 comments:

  1. திருவள்ளுவர் சிலை அமைந்திருக்கும் பாறையைப் அருகிலிருந்து பார்க்க இயலாவிட்டாலும் இப்பதிவில் திருவள்ளுவர் பற்றி பதிவிட்ட செய்திகள் பயனுள்ளவை. நன்றி

    ReplyDelete
  2. திருவள்ளுவர் சிலை காலடியில் என் பிள்ளைகளை உக்கார வச்சு படமெடுத்தோம், நாங்க போய் வந்த ஒரு வாரத்துல சுனாமி வந்தது.

    ReplyDelete
  3. நாங்கள் போன போது கடல் அலைகள் அதிகம் இருந்ததால் திருவள்ளுவர் சிலையைப் பார்க்க அனுமதி இல்லை.
    விவேகானந்த பாறையிலிருந்து தான் கண்டு களித்தோம்.

    படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  4. துளசி: படங்கள் எல்லாம் அருமை. நான் சென்றிருக்கிறேன் அமைத்த புதிதில். குழந்தைகளுக்கும் ஐயனைப் பற்றிச் சொல்லி காட்டினேன்.

    கீதா: நான் சென்றதில்லை. திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு முன்பு வரை சென்றிருக்கிறேன் மகனுடன் கன்னியாகுமரி அடிக்கடி செல்வேன். ஆனால் திருவனந்தபுரம் விட்டு வந்த பிறகுதான் நிர்மாணிக்கப்பட்டது எனவே சென்றதில்லை.

    படங்கள் சூப்பரா இருக்கு அனு

    ReplyDelete