31 July 2018

சுவாமி நம்மாழ்வார் பிறந்ததலம்

வாழ்க வளமுடன்





நம்மாழ்வார் பிறந்ததலம்

திருமாலின் அம்சமான நம்மாழ்வாரைப் பெற்றெடுத்த தாய் பிறந்த பெருமை இத்திருப்பதிக்கே உண்டானது.

சுவாமி நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கையின் பிறந்த ஊர் இது.










குறுநாட்டுக் காரிமாறன் என்ற சிற்றரசனுக்கும், நாஞ்சில் நாட்டுத் திருவண்பரிசாரத்திலிருந்த (திருப்பதிசாரம்) திருவாழிமார்ப பிள்ளை மகளான உதயநங்கைக்கும் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது.

பல ஆண்டுகள் ஆகியும், குழந்தை இல்லாதது கண்டு வருந்திய தம்பதிகள் மகேந்திரகிரியின் அடிவாரத்திலுள்ள "திருக்குறுங்குடி" சென்று, அதன் வழியிலே ஓடும் நதியில் நீராடி, அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாளாகிய நம்பியிடம் குழந்தை வேண்டி நின்றனர்.




பெருமாளும் அவர்களது வேண்டுகோளுக்கு மனமிரங்கி, உங்கள் எண்ணம் நிறைவேறும். ""யாமே உமக்கு மகனாக அவதரித்துப் பதினாறு வயதிலேயே கணக்கிலடங்காத கீர்த்திகளைப் பெற்று உங்களுக்கு புகழ் தேடித் தருவோம். பிறக்கும் குழந்தையை (ஆழ்வார்) திருநகரியிலுள்ள புளியமரத்தடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்"" என்று கூறி மறைந்தார்.

சில நாட்களில் உதயநங்கை கருவுற்றார். மகப்பேறுக்காக தாய் வீடான திருவைண்பரிசாரத்துக்கு வந்தார்.

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பௌர்ணமி திதியில் நம்மாழ்வார் இவ்வுலகிலே அவதரித்தார். குறுங்குடிப் பெருமாளின் ஆணைப்படி குழந்தையை ஆழ்வார்திருநகரியிலுள்ள புளிய மரத்துப் பொற் தொட்டிலில் இட எடுத்து வந்தனர்.






குழந்தை தவழ்ந்து தவழ்ந்து புளிய மரப் பொந்தினுள் ஏறித் தெற்கு நோக்கி பத்மாசனத்தில் ஞான முத்திரை ஏந்தியவராய் அங்கு எழுந்தருளியிருக்கும் ஆதிநாதரைத் தியானித்து நின்றது.

இந்நிகழ்ச்சியை கண்டவர்கள் வியந்து போற்றினர். 16 ஆண்டுகள் இந்த பாலமுனி, இறை தியானத்தில் மூழ்கியிருந்தார்.


இவ்வாறு திருப்பதிசாரம் நம்மாழ்வாரின் திருஅவதாரத் தலமாகவும், ஆழ்வார் திருநகரி அவர் ஞானம் பெற்ற திருத்தலமாகவும் சிறப்புடன் விளங்குகின்றன.





3591. 
வருவார் செல்வார்*  வண்பரிசாரத்து இருந்த*  என்
திருவாழ்மார்வற்கு*  என்திறம் சொல்லார் செய்வதுஎன்*
உருவார் சக்கரம்*  சங்குசுமந்து இங்குஉம்மோடு*
ஒருபாடுஉழல்வான்*  ஓர்அடியானும் உளன்என்றே. 


நம்மாழ்வார் பாசுரம்  ...





கோவில் மதில் சுவரைச் சுற்றி வந்தால் வடக்கே உடைய நங்கையார் அவதரித்தப் பகுதியைக் காணலாம்.

நம்மாழ்வாரின் தாயாரின் இந்த ‘வீடு’, இப்போது ஒரு பஜனை மடமாக உள்ளது.










பின் குறிப்பு...நம்ம தில்லையகத்து கீதா அக்கா வின் ஊர் இது ..அவர்கள் ஆடி பாடி மகிழ்ந்திருந்த ஊர்... அவர்கள் ஊர் கண்டு எனக்கும் மிக மகிழ்ச்சி...










11.திற்பரப்பு நீர்வீழ்ச்சி

12.கரையோரம்..

13. திற்பரப்பு நீர்வீழ்ச்சி  படகுத்துறை...

14.மாத்தூர் தொட்டிப் பாலம் 1

15. மாத்தூர் தொட்டிப் பாலம் 2

16.   விவேகானந்தர் பாறை

17.திருவள்ளுவர் சிலை

18. அருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்

19. நாகர்கோவில்..

20.ஜடாயுபுரீஸ்வரர் திருக்கோவில் ,  ஜடாயுபுரம், திருப்பதிசாரம்


தொடரும்...



அன்புடன்
அனுபிரேம்...


7 comments:

  1. கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  2. அறியாத செய்திகள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. ஆஹா தில்லையகத்து கீதா அவர்களின் ஊரா இது....

    படங்கள் அனைத்தும் அழகு. தகவல்கள் சிறப்பு.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  4. நான் பார்க்கவுள்ள கோயில்களில் இதுவும் ஒன்று. இப்பதிவு அங்கு செல்லும் ஆர்வத்தினை மிகுவித்தது.

    ReplyDelete
  5. இதுவரை அறிந்திடாத தகவல்கள்.. புகைப்படம் அருமை. இது கீதாக்கா ஊரா?! ரைட்டு

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு. தாயாரின் வீடு இப்போது பஜனை மடமாகப் பராமரிக்கப்படுவது பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  7. எனக்குத் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு உண்டு நாலாயிர திவ்யப் பிரபந்தம் படிப்பதும் உண்டு . இருந்தும் நான் அறியாத விஷயங்களை பகிர்ந்துள்ளீர்கள் , நன்றி .
    அட நம்ம கீதா மேடம் ஊரா ? சந்தோஷம்

    ReplyDelete