03 October 2018

தென்பெண்ணை ஆறு

தென்பெண்ணை ஆறு



தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பிறந்து, 430 கிமீ தூரத்தில் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.










நாங்கள்  தக்க்ஷன திருப்பதி, ஓசூர் சென்ற போது கீழே ஓடிய ஆறு இது தான்...    தென்பெண்ணை ஆறு

அந்த படங்கள் தான்  இன்றைய பதிவாக..





ஆற்றிலிருந்து கோவில் 





தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலத்தில் 112 கிமீ நீளத்திலும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கிமீ நீளத்திலும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 34 கிமீ நீளத்திற்கும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கிமீ நீளத்திற்குப் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.






சுத்தமான நீர் தேங்காமல்  ஓடிகொண்டிருந்தது ..அதில் பல சிறுவர்கள் நீந்தி ஆடி மகிழ்ந்திருந்தனர்..









ஒரு குட்டி சுற்றுலா தளம் போல் பலர் உணவு கொண்டு வந்து உண்டு, விளையாண்டு கொண்டிருந்தனர் ..பார்க்கவே அழகான காட்சிகள்.








ஒரு புது இடம் இங்கு படங்களுடன், பகிர்ந்ததில் மிக மகிழ்ச்சி.



அன்புடன்

அனுபிரேம்




11 comments:

  1. காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வைகை பொருணைநதி என
    மேவிய ஆறுகள் பல ஓட திருமேனி செழித்த தமிழ்நாடு!...

    ஆகா.. அழகான படங்கள்..
    பெண்ணை எனும் புண்ணிய நதியை நானும் தரிசித்தேன்...

    வாழ்க நலம்...

    ReplyDelete
  2. தென்பெண்ணை ஆறு வெகு அழகு.
    படங்கள் எல்லாம் அழகு.
    பாரதி பாடல் பகிர்வு அருமை.

    ReplyDelete
  3. படங்கள் கொள்ளை அழகு

    தென்பெண்ணை ஆற்றை ஒட்டிய பதிவு நானும் ரெடி பண்ணிட்டு இருக்கேன்

    ReplyDelete
  4. அழகிய படங்கள். நடுவில் ஒரு பாறையைப் பார்த்தால் பெரிய ஆமையின் ஃபாசில் போல இருக்கிறதே...

    ReplyDelete
  5. படங்கள் மிகவும் அழகு! சிலுசிலுவென்று தண்ணீரின் ஓட்டத்தைப்பார்க்கையில் மனமும் குளுமையாகிறது!

    ReplyDelete
  6. தென்பெண்ணை அழகு
    மனதைக் கவருகிறது
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  7. ஆறு என்றால் அழகு என்றொரு பொருள் உள்ளதோ?

    ReplyDelete
  8. ஆவ்வ்வ்வ் மிக மிக அருமையான இடம்.. அழகாக படம் எடுத்திருக்கிறீங்க.. இது முன்பும் ஒருதடவை படம் போட்டதாக நினைவிருக்கே.. அது வேஎறு ஆறும் பாலமுமோ?.

    ReplyDelete
    Replies
    1. ஆமா, அது வேற இடம் அதிரா.

      Delete
  9. வாவ் அனு இந்த ஆற்றைத்தான் நீங்க தென் திருப்பதி பற்றி போட்டிருந்த பதிவில் கேட்டிருந்தேன் இப்ப தெரிஞ்சுருச்சு. என்ன அழகான ஆறு!! தமிழ்நாட்டில் இந்த ஆற்றில் நீர் ஓடுதா? ஏனென்றால் நான் பார்த்த வரையில் இத்தனை சுத்தமாக நீர் ஓடிப் பார்த்ததில்லை...

    அருமையாக இருக்கிறது. அதுவும் தண்ணீய்ர்ப்பரப்பு மட்டும் எடுத்த படங்கள் செம மனதைக் கொள்ளை கொள்ளும் அழகு. எப்போதும் தண்ணீர் இருக்குமோ தெரியவில்லை. இது போன்ற சமயத்தில் போய்ப் பார்க்கணும்..

    கீதா

    ReplyDelete