06 October 2018

கோவிந்தராஜ பெருமாள் திருக்கோவில் , உடையாப்பட்டி.

ஓம் நமோ நாராயணா

கோவிந்தராஜ பெருமாள் திருக்கோவில், உடையாப்பட்டி, சேலம்.

சேலம் - வாழப்பாடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கோவில் இது.


.






 ஸ்ரீதேவி  பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி அருள்கிறார்.







சிறிய மலையின் மீது அமைந்துள்ள திருக்கோவில்.




நாங்கள் கடந்த   ஜனவரி மாதம் சென்றோம் . அப்பொழுது இத்திருக்கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது .



 இத்திருக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

இங்கு ஆஞ்சநேயரும்  தனி சன்னதியில் அருள் புரிகிறார்.






இக்கோவிலும் மலையின் மீது இருப்பதால் அங்கிருந்த அழகிய காட்சிகள்...







மலையின் அடிவாரத்திலேயே நின்று வணங்கும்  பெரிய கருடாழ்வார்.



நாங்கள் ஊருக்கு செல்லும் சாலை இது என்பதால் எப்பொழுதும் இந்த கருடாழ்வார் காட்சி கிடைக்கும் ..

இந்த முறை நேரம் அமைந்ததால் அருகில் சென்று தரிசித்தோம்..


மிக சிறப்பான திருக்கோவில், மலையின் மீது இளம் காற்று வீச நல்ல தரிசனம் கிட்டியது.







683.   
வான் ஆளும் மா மதி போல்*  வெண் குடைக்கீழ்*  மன்னவர்தம்
கோன் ஆகி வீற்றிருந்து*  கொண்டாடும் செல்வு அறியேன்*
தேன் ஆர் பூஞ்சோலைத்*  திருவேங்கட மலைமேல்*
கானாறாய்ப் பாயும்*  கருத்து உடையேன் ஆவேனே


வானத்தில் இருக்கும் விண்மீன்களையெல்லாம் தன் ஒளியால் வென்று வானத்தை ஆளும் முழுமதியைப் போல் வெண்கொற்றக் குடையின் கீழ் அரசாளும் மன்னவர்களை எல்லாம் திறத்தால் வென்று அவர்கள் தலைவனாக வீற்றிருக்கும் பெருமையையும் நான் வேண்டேன்.

தேன் நிரம்பும் பூக்கள் உடைய சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மேல் ஒரு காட்டாறாய் பாயும் எண்ணத்தைக் கொண்டவன் ஆவேனே.




அன்புடன்,
அனுபிரேம்.




3 comments:

  1. அழகான கோவில் தரிசனம் அனு.
    நன்றி.

    ReplyDelete
  2. இதுவரை பார்த்திராத கோயில். வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் செல்வேன்.

    ReplyDelete
  3. அழகிய கோவில். நல்ல பகிர்வு.

    ReplyDelete