29 February 2020

இராப்பத்து உற்சவம் ஸ்ரீரங்கம்

நம்பெருமாள் அழகு 5 - இராப்பத்து உற்சவம்




முந்தைய பதிவுகள் .. 


இராப்பத்து -நாள் 4


முன்னழகு - கல் இழைத்த நேர் கீரிடம்
நெற்றிச் சுட்டி, விமான பதக்கம், வைர அபயஹஸ்தம், பவழ மாலை, நெல்லிக்காய் மாலை, அடுக்கு பதக்கங்கள், ரத்தின மகரகண்டிகை செட்

பின்: புஜ கீர்த்தி, வைர அட்டிகை, ரத்தின கல் (நடு) பதக்கம்.















இராப்பத்து 5ஆம் நாள் 

சாயக்கொண்டை, வைரமுடி அலங்காரம், ரத்தின அபயஹஸ்தம், மார்பில் மஹாலக்ஷ்மி பதக்கம்
மிக நீளமான காசுமாலை, பவள மாலைகளுடன்
அகிலத்தை ஆளும் ரங்கராஜாவாக சேவை சாதிக்கிறார்.








இராப்பத்து  -நாள் 6 



இன்று நம்பெருமாள் மார்பில் மஹாலஷ்மி பதக்கம்,
அண்ட பேரண்ட பக்ஷ்சி பதக்கம், 
நெடிய அரைக் கொண்டை
மகர கர்ண பத்ரம் வைர அட்டிகை, ரத்தின அபயஹஸ்தம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, முத்துச்சரம். அணிந்து கொண்டு சேவை சாதிக்கிறார்.








எறியும்நீர்வெறிகொள்வேலை மாநிலத்துஉயிர்களெல்லாம் * 
வெறிகொள்பூந்துளவமாலை விண்ணவர்கோனையேத்த * 
அறிவிலாமனிசரெல்லாம் அரங்கமென்றழைப்பராகில் * 
பொறியில்வாழ் நரகமெல்லாம் புல்லெழுந்தொழியுமன்றே.

திருமாலை -13
884


வண்டினம்முரலும்சோலை மயிலினம்ஆலும்சோலை * 
கொண்டல்மீதணவும்சோலை குயிலினம்கூவும்சோலை * 
அண்டர்கோன்அமரும்சோலை அணிதிருவரங்கமென்னா * 
மிண்டர்பாய்ந்துஉண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கிடுமினீரே. (2)

திருமாலை -14
885

மெய்யர்க்கேமெய்யனாகும் விதியிலாஎன்னைப்போல * 
பொய்யர்க்கேபொய்யனாகும் புட்கொடியுடையகோமான் * 
உய்யப்போமுணர்வினார்கட்கு ஒருவனென்றுஉணர்ந்தபின்னை * 
ஐயப்பாடறுத்துத்தோன்றும் அழகனூர் அரங்கமன்றே. 

திருமாலை -15
886

தொடரும்...

முக நூல் வழி இப்படங்களை பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...


அன்புடன் 
அனுபிரேம் 

3 comments:

  1. அழகிய பதிவு. படங்களும் அருமை. சிறப்பு.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக எட்டு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது இராப்பத்து உற்சவம் ஸ்ரீரங்கம் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  2. அலங்காரப் பிரியனுக்கு அழகழகாய் அலங்காரம்.

    படங்கள் நன்று.

    தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    அழகான படங்கள். பெருமாளின் திவ்ய தரிசனத்தை நேரில் கண்டது போல் மகிழ்ச்சியடைந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete