02 April 2020

ஸ்ரீ ராம சரித பஜனை....

ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 

 ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 

ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்








பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் - ஸ்ரீ ராமனின் பிறந்த நாள்.

இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம்.




நாம ராமாயணம் எனும் “சுத்த பிரம்ம பராத்பர ராம்....” என்ற ஸ்லோகத்தின் மெட்டில்
ஸ்ரீ ராம சரித பஜனை....

பாகவதோத்தம ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிகள் அருளியது....



*********************************
தசரத புத்ரா ஸ்ரீ ராமா
கோசலை மைந்தா ஸ்ரீ ராமா
நால்வரில் முதல்வா ஸ்ரீ ராமா
கைகேயிப் ப்ரியனே ஸ்ரீ ராமா
முனிவர்கள் யாகமே ஸ்ரீ ராமா
காத்திடச் சென்றாய் ஸ்ரீ ராமா

மாடத்தில் மைதிலி ஸ்ரீ ராமா
மனதுள் வரித்தால் ஸ்ரீ ராமா
சிவனார் தனுசை ஸ்ரீ ராமா
சட்டென் றிருத்தாய் ஸ்ரீ ராமா
மங்கை ஜானகி ஸ்ரீ ராமா
மாலையும் சூட்டினாள் ஸ்ரீ ராமா

மந்தரை மனதுள் ஸ்ரீ ராமா
மாசும் புகுந்தது ஸ்ரீ ராமா
பரதன் ஆளவும் ஸ்ரீ ராமா
வனம்நீ ஏகவும் ஸ்ரீ ராமா
வரங்களும் பெற்றாள் ஸ்ரீ ராமா
சிரமேல் ஏற்றாய் ஸ்ரீ ராமா

மரவுரி அணிந்தாய் ஸ்ரீ ராமா
மங்கையும் பணிந்தாள் ஸ்ரீ ராமா
இருவரின் பின்னே ஸ்ரீ ராமா
இளவலும் இணைந்தான் ஸ்ரீ ராமா
குகனையும் உன்னுடன் ஸ்ரீ ராமா
குளிர்ந்தே சேர்த்தாய் ஸ்ரீ ராமா

கல்லுள் பெண்ணை ஸ்ரீ ராமா
கருணையால் மீட்டாய் ஸ்ரீ ராமா
மானென வந்தான் ஸ்ரீ ராமா
மாதினை மயக்கினான் ஸ்ரீ ராமா
லக்ஷ்மண ரேகையை ஸ்ரீ ராமா
அலட்சியம் செய்தாள் ஸ்ரீ ராமா

இலங்கை மன்னனும் ஸ்ரீ ராமா
இலகுவாய்க் கொண்டான் ஸ்ரீ ராமா
கால்கள் நோகவே ஸ்ரீ ராமா
கானகம் அலைந்தாய் ஸ்ரீ ராமா
தந்தைபோல் ஜடாயு ஸ்ரீ ராமா
தக்க துரைத்தார் ஸ்ரீ ராமா

வானரர் பூமியும் ஸ்ரீ ராமா
வந்தே சேர்ந்தாய் ஸ்ரீ ராமா
வாலியின் வதமும் ஸ்ரீ ராமா
வருந்தியே செய்தாய் ஸ்ரீ ராமா
அஞ்சனை மைந்தனை ஸ்ரீ ராமா
ஆசியோட அனுப்பினாய் ஸ்ரீ ராமா

உன் கணையாழியும் ஸ்ரீ ராமா
உவந்தே தந்தனை ஸ்ரீ ராமா
உன் திரு நாமமே ஸ்ரீ ராமா
உறுதுணை செய்தது ஸ்ரீ ராமா
மும்மதில் நகருள் ஸ்ரீ ராமா
மாருதி நுழைந்தான் ஸ்ரீ ராமா

அன்னையைத் தேடி ஸ்ரீ ராமா
அவனும் அலைந்தான் ஸ்ரீ ராமா
அசோக வனமதில் ஸ்ரீ ராமா
அவளும் இருந்தாள் ஸ்ரீ ராமா
விவர மனைத்துமே ஸ்ரீ ராமா
வணங்கியே உரைத்தான் ஸ்ரீ ராமா

தீயவன் நகரினை ஸ்ரீ ராமா
தீக்கிரை யாக்கினான் ஸ்ரீ ராமா
கண்ட நற்செய்தியை ஸ்ரீ ராமா
விண்டே யுரைத்தான் ஸ்ரீ ராமா
அணிலும் பணி செய்ய ஸ்ரீ ராமா
அமைத்தாய் சேதுவை ஸ்ரீ ராமா

வந்தனன் போருக்கு ஸ்ரீ ராமா
தந்தனை பொழுதும் ஸ்ரீ ராமா
இன்றுபோய் நாளையே ஸ்ரீ ராமா
வாவென் றியம்பினாய் ஸ்ரீ ராமா
இலங்கை வேந்தன் ஸ்ரீ ராமா
இறையோ டிணைந்தான் ஸ்ரீ ராமா

பாதுகை காத்தே ஸ்ரீ ராமா
பரத னிருந்தான் ஸ்ரீ ராமா
தீக்குள் புகுமுன் ஸ்ரீ ராமா
அனுமனும் சென்றான் ஸ்ரீ ராமா
அனைவரும் மகிழவே ஸ்ரீ ராமா
அரியணை அமர்ந்தாய் ஸ்ரீ ராமா

ராம ராம ஜெய ராஜாராம்
ராம் ராம ஜெய சீதா ராம்.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !





குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்

பெருமாள் திருமொழி
பத்தாம் திருமொழி - அங்கணெடுமதின்


ஸ்ரீராமாயண கதைச்சுருக்கம்



செவ்வரிநற்கருநெடுங்கண்சீதைக்காகிச்
சினவிடையோன்சிலையிறுத்து மழுவாளேந்தி *
வெவ்வரிநற்சிலைவாங்கிவென்றிகொண்டு
வேல்வேந்தர்பகைதடிந்தவீரன்தன்னை *
தெவ்வரஞ்சு நெடும்புரிசைஉயர்ந்தபாங்கர்த்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
எவ்வரிவெஞ்சிலைத் தடக்கைஇராமன்தன்னை
இறைஞ்சுவாரிணையடியேஇறைஞ்சினேனே.

3 743


தொத்தலர்பூஞ்சுரிகுழல்கைகேசிசொல்லால் *
தொன்னகரம் துறந்து * துறைக்கங்கைதன்னைப்
பத்தியுடைக்குகன்கடத்தவனம்போய்ப்புக்குப்
பரதனுக்குப் பாதுகமும் அரசுமீந்து *
சித்திரகூடத்து இருந்தான்தன்னை இன்று
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
எத்தனையும்கண்குளிரக்காணப்பெற்ற
இருநிலத்தார்க்கு இமையவர்நேரொவ்வார்தாமே.

4 744


வலிவணக்குவரைநெடுந்தோள்விராதைக்கொன்று
வண்தமிழ்மாமுனிகொடுத்தவரிவில்வாங்கி *
கலைவணக்குநோக்கரக்கிமூக்கைநீக்கிக்
கரனோடுதூடணன்தனுயிரைவாங்கி *
சிலைவணக்கிமான்மறியஎய்தான்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
தலைவணக்கிக்கைகூப்பிஏத்தவல்லார்
திரிதலால் தவமுடைத்துத்தரணிதானே.

5 745



தனமருவுவைதேகிபிரியலுற்றுத்
தளர்வெய்திச்சடாயுவைவைகுந்தத்தேற்றி *
வனமருவுகவியரசன்காதல்கொண்டு
வாலியைக் கொன்று இலங்கைநகரரக்கர்கோமான் *
சினமடங்கமாருதியால்சுடுவித்தானைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
இனிதமர்ந்தஅம்மானைஇராமன்தன்னை
ஏத்துவாரிணையடியேஏத்தினேனே.

6 746





ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 

 ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 

ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 





ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதா ராம்.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !


அன்புடன் 
அனுபிரேம் 

7 comments:

  1. படங்கள் நல்லா தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கீங்க.

    குலசேகர ஆழ்வார் ப்ரபந்தம் இனிமை

    ReplyDelete
  2. படங்கள் அருமை. ராம நாமம் போற்றுவோம்

    ReplyDelete
  3. ஓ ராமநவமி ஸ்பெஷலா...!!

    படங்கள் பாசுரம் நல்லாருக்கு அனு.

    எனக்கு இப்படியான ஆன்மீக அறிவு/ஆன்மீகமே ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கம்மி! பூஜ்ஜியம்னே சொல்லலாம்!!!!!!!

    கீதா

    ReplyDelete
  4. ஸ்ரீராமநவமி சிறப்புப் பதிவி சிறப்பான பதிவு.

    வழக்கம் போல தேர்ந்தெடுத்த புகைப்படங்கள் நன்றாக இருக்கின்றன.

    ஸ்ரீராமன் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    அருமையான அழகான படங்கள். ஒவ்வொரு படங்களும் ராமனின் அருளை வாரி வழங்குகின்றன. அனுமனின் ஸ்ரீ ராம சரித பஜனை நன்றாக உள்ளது. அனைத்தும் பார்க்கும் போது பக்தி ரசம் பெருகுகிறது. ஸ்ரீ ராமனின் பாதம் போற்றுவோம். அனைவருக்கும் அவனருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. ராம நாமமே ஆனந்தம் ‌ நம்பியவர்க்கு கற்கண்டு

    ReplyDelete
  7. ராம நாமமே ஆனந்தம்
    நம்பியவர்க்கு கற்கண்டு

    ReplyDelete