04 April 2020

உறையூர் சேர்த்தி சேவை ...





ஸ்ரீரங்கத்தில் பங்குனி மாதம் நடைபெறும் "ஆதி பிரம்மோற்சவம்' விபீஷணனால் தொடங்கப்பட்டது.

இதன் ஆறாம் நாள் உற்சவத்தின்போது உறையூரில் அருள்பாலிக்கும் சோழகுல வல்லியான கமலவல்லி நாச்சியார் சந்நிதிக்கு, நம்பெருமாள்  புத்தாடை, சந்தனம், திலகம், மாலை அணிந்து புதுமாப்பிள்ளை போல் காட்சி கொடுப்பார்.

கமலவல்லி நாச்சியார் பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்ததாக ஐதீகம், அன்றே இந்த சேர்த்தி சேவை நடைபெறும்.





நம்பெருமாள் மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். பின்பு பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு செல்கிறார்.

பின்னர் தான் அணிந்த மலர் மாலையை கமலவல்லி நாச்சியாருக்கு அணிவித்து, நாச்சியாரின் மாலையை தான் வாங்கி அணிந்துக்கொள்வார்.

பின்னர் இருவரும் திருமணக் கோலத்தில் "சேர்த்தி சேவை" சாதிப்பார்கள்.

இன்று தாயார் நம்பெருமாள் பதக்கத்தையும், மாங்காய் மாலையும் அணிந்து பெருமாளை நோக்கியவண்ணமும்,

நம்பெருமாள் தாயார் பதக்கத்துடன் , அழகுக்கு கன்னத்தில் திருஷ்டிபொட்டு, நள்ளிரவில் திரும்பிச் செல்வதால் பவள மாலையில் தாயத்து அணிந்து காட்சி  கொடுப்பார் .






667

அல்லிமாமலர்மங்கைநாதன்அரங்கன்மெய்யடியார்கள்தம் *
எல்லையிலடிமைத்திறத்தினில்என்றுமேவுமனத்தனாம் *
கொல்லிகாவலன்கூடல்நாயகன் கோழிக்கோன்குலசேகரன் *
சொல்லினின்தமிழ்மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்களாவரே. (2)



1762


கோழியும்கூடலும்கோயில்கொண்ட 
கோவலரேஒப்பர், குன்றமன்ன *
பாழியந்தோளும் ஓர்நான்குடையர் 
பண்டு இவர்தம்மையும்கண்டறியோம் *
வாழியரோஇவர்வண்ணம்எண்ணில் 
மாகடல்போன்றுளர், கையில்வெய்ய *
ஆழியொன்றேந்திஓர்சங்குபற்றி 
அச்சோஒருவரழகியவா! 








முந்தைய வருடங்களில் நடைபெற்ற சேர்த்தி சேவையின் காட்சிகள் இவை ....


நேற்று (03/04/20) உறையூரில் நம்பெருமாள், கமலவல்லி நாச்சியார் சேர்த்தி உற்சவம் நடந்திருக்க வேண்டும். ஆனால்  பெருமாள் உற்சவங்களை நிறுத்தி விட்டு ஏகாந்த திருவாராதனை கண்டருள்கிறார்.



பெருமாள் திருவடிகளே சரணம் !!

தாயார்  திருவடிகளே சரணம் !!

ஓம் நமோ நாராயணாய நமக 



அன்புடன்
அனுபிரேம்

3 comments:

  1. உறையூர் சேர்த்தி - படங்கள் வெகு அழகு.

    ReplyDelete
  2. படங்கள் ரொம்ப நல்லாருக்கு அனு.

    வடுவூர் ராமரையும் கண்டேன்..

    கீதா

    ReplyDelete
  3. கோயிலுக்குச் சென்றுள்ளேன். சேர்த்தி விழா கண்டதில்லை. மன நிறைவான பதிவு.

    ReplyDelete