இந்தியர்களாகிய நாம் இன்று எழுபத்தி மூன்றாவது குடியரசு தினத்தை கொண்டாடுகின்றோம்........!
26 January 2022
25 January 2022
20 January 2022
18 January 2022
16 January 2022
14 January 2022
13 January 2022
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...
முப்பதாம் பாசுரம் - வங்கக் கடல் கடைந்த
முப்பதாம் பாசுரம் - எம்பெருமான் தன் ஆசைகளைப் பூர்த்தி செய்வதாகச் சொல்ல, ஆண்டாள் இப்பொழுது கோபிகை பாவத்தை விட்டு, தானான தன்மையில் இப்பாசுரத்தைப் பாடுகிறாள்.
அவள் யாரொருவர் இந்த முப்பது பாசுரங்களையும் கற்றுக் கொண்டு பாடுகிறார்களோ, அவர்கள் தன்னைப் போன்ற பரிசுத்த பாவத்துடன் இல்லாவிடினும், தனக்குக் கிடைத்த அதே கைங்கர்ய ப்ராப்தி அவர்களுக்கும் கிடைக்கும் என்று அறுதியிடுகிறாள்.
இருபத்தொன்பதாம் பாசுரம் - சிற்றஞ்சிறு காலே வந்து
இருபத்தொன்பதாம் பாசுரம் - இதில் மிகவும் முக்யமான கொள்கையை வெளியிடுகிறாள் – அதாவது, கைங்கர்யம் நம் ஆனந்தத்துக்கு இல்லை அவனுடைய ஆனந்தத்துக்கு மட்டுமே. மேலும் க்ருஷ்ணானுபவத்தில் கொண்ட மிகப் பெரிய அவாவினால், இந்த நோன்பை அதற்கு ஒரு வ்யாஜமாக மேற்கொண்டதையும் தெரிவிக்கிறாள்.
12 January 2022
இருபத்தெட்டாம் பாசுரம் - கறவைகள் பின் சென்று
இருபத்தெட்டாம் பாசுரம் - இதில் எம்பெருமான் அனைத்து ஆத்மாக்களுடன் கொண்டுள்ள நிருபாதிக ஸம்பந்தம், (ஆண்டாளாகிய) தான் எந்த ஸாதனத்திலும் ஈடுபட முடியாத இயலாமை, எம்பெருமானின் பெருமை, அவன் தானே யவரையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உஜ்ஜீவிப்பிக்கும் தன்மை ஆகியவைகளை விளக்குகிறாள்.
11 January 2022
இருபத்தேழாம் பாசுரம் - கூடாரை வெல்லும்
இருபத்தேழாம் பாசுரம் - ஆண்டாள் எம்பெருமான் அனுகூலர் மற்றும் ப்ரதிகூலர்களை தன்னிடம் ஈர்த்துக் கொள்வதாகிய விசேஷ குணத்தை விளக்குகிறாள். மேலும் உயர்ந்த புருஷார்த்தம், எம்பெருமானுடன் எப்பொழுதும் பிரியாமல் இருந்து தொடர்ந்து கைங்கர்யம் செய்வதாகிய ஸாயுஜ்ய மோக்ஷமே என்பதை நிரூபிக்கிறாள்.
10 January 2022
இருபத்தாறாம் பாசுரம் - மாலே மணிவண்ணா
இருபத்தாறாம் பாசுரம் - இதில் நோன்புக்குத் தேவையான உபகரணங்கள் என்ன என்பதை அவனுக்கு அறிவிக்கிறாள்.
முன்பு எதுவும் வேண்டாம் என்று சொன்னவள், இப்பொழுது மங்களாசாஸனம் செய்வதற்கு பாஞ்சஜந்யாழ்வான் முதலிய கைங்கர்யபரர்கள், அவன் திருமுகத்தைத் தெளிவாகக் காண ஒரு விளக்கு, அவன் இருப்பை அறிவிக்கும் கொடி, அவனுக்கு நிழல் கொடுக்கும் விதானம் போன்றவைகளைக் கேட்கிறாள்.
நம் ஆசார்யர்கள், ஆண்டாள் இவற்றைத் தான் செய்யும் க்ருஷ்ணானுபவம் முழுமையாகவும் முறையாகவும் அமைவதற்கு இவ்வுபகரணங்களை வேண்டுகிறாள் என்று காட்டுகின்றனர்.
09 January 2022
இருபத்தஞ்சாம் பாசுரம் - ஒருத்தி மகனாய்
இருபத்தஞ்சாம் பாசுரம் - எம்பெருமான் அவர்களிடம் நோன்புக்கு ஏதாவது தேவையா என்று கேட்க அவர்கள் அவன் குணங்களுக்கு மங்களாசாஸனம் செய்ததால் அவர்கள் துன்பங்கள் விலகின என்றும், இனி அவனுக்குக் கைங்கர்யம் செய்வது ஒன்றே வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
08 January 2022
இருபத்து நாலாம் பாசுரம் - அன்று இவ்வுலகம்
இருபத்து நாலாம் பாசுரம் - அவன் அவ்வாறு அமர்ந்ததைக் கண்டு அவனுக்கு மங்களாசாஸனம் செய்கிறாள். பெரியாழ்வார் திருமகளாராதலால், ஆண்டாளின் லக்ஷ்யம் எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்வதே. ஸீதாப் பிராட்டி, தண்டகாரண்யத்து ருஷிகள், பெரியாழ்வார் போலே ஆண்டாளும் அவள் தோழிகளும் எம்பெருமான் நடையழகைக் கண்டதும் மங்களாசாஸனம் செய்தார்கள். மேலும் இப்படிப்பட்ட ம்ருதுவான திருவடிகளை உடைய எம்பெருமானை நடக்க வைத்துவிட்டோமே என்றும் வருந்தினார்கள்.
07 January 2022
இருபத்துமூன்றாம் பாசுரம் - மாரி மலை முழைஞ்சில்
இருபத்துமூன்றாம் பாசுரம் - இதில் கண்ணன் எம்பெருமான் ஆண்டாளை வெகுகாலம் காக்க வைத்ததை எண்ணி, அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறான். அதற்கு அவள் எம்பெருமானைப் படுக்கையை விட்டு எழுந்து, சில அடிகள் நடந்து, அவனுடைய சீரிய ஸிம்ஹாஸனத்தில் எழுந்தருளி, சபையில் தன் விண்ணப்பத்தை ஒரு ராஜாவைப் போலே கேட்குமாறு ப்ரார்த்திக்கிறாள்.
06 January 2022
இருபத்திரண்டாம் பாசுரம் - அங்கண் மா ஞாலத்து
05 January 2022
இருபத்தொன்றாம் பாசுரம் - ஏற்ற கலங்கள்
இருபத்தொன்றாம் பாசுரம் - இதில் கண்ணனின் ஆபிஜாத்யம் (ஸ்ரீ நந்தகோபனுக்கு மகனாகப் பிறந்தது), பரத்வம், திடமான வேத சாஸ்த்ரத்தால் அறியப்படும் தன்மை முதலிய குணங்களைக் கொண்டாடுகிறாள்.
04 January 2022
இருபதாம் பாசுரம் - முப்பத்து மூவர்
இருபதாம் பாசுரம்- இதில் கண்ணனையும் நப்பின்னைப் பிராட்டியையும் சேர்த்து எழுப்பி நப்பின்னைப் பிராட்டியிடம் “நீ எங்களையும் அவனையும் நன்றாகச் சேர்த்து, அனுபவிக்கும்படி செய்” என்று கேட்கிறாள்.
03 January 2022
02 January 2022
அஞ்சனை மைந்ததா ... ஸ்ரீ ஆஞ்சநேயா
இன்று அனுமத் ஜெயந்தி ....
மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசை திதியில் அனுமன் ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
சிரஞ்சீவியான அனுமன் வாயு புத்ரன் என்பதால் காற்றை வென்றவர் ஆகிறார்.
சமுத்திரத்தை ராம நாமம் சொல்லியபடி தாண்டியதால் நீரை வென்றவர் ஆகிறார்.
பூமி பிராட்டியான சீதா தேவியின் பூரண அருளை பெற்றதால் நிலத்தை வென்றவர் ஆகிறார்.
வாலில் வைத்த அக்னி ஜுவாலையால் இலங்கையை தகனம் செய்ததால் நெருப்பை வென்றவர் ஆகிறார்.
வானத்தில் நீந்திப் பறக்கும் ஆற்றல் பெற்றதால் ஆகாயத்தை வென்றவர் ஆகிறார்.
இப்படி பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர், எங்கும் எதிலும் அடங்குவதில்லை. " ராமா" என்ற இரண்டு எழுத்தில் கட்டுண்டு கிடக்கிறார்.
மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆஞ்சநேயர் அயோத்தியை ஆண்ட ராமனின் நெஞ்சத்தையே ஆண்ட பெருமைக்குறியவர்.
பதினெட்டாம் பாசுரம் - உந்து மதகளிற்றன்
பதினெட்டாம் பாசுரம் - எப்படி எழுப்பியும் எம்பெருமான் எழுந்திருக்காமல் இருக்க, நப்பின்னைப் பிராட்டியைப் புருஷகாரமாக முன்னிட்டுக் கொண்டு எழுப்பினால், கண்ணன் எம்பெருமானை எழுப்பலாம் என்றெண்ணி அவ்வாறே செய்கிறாள்.
01 January 2022
-
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
-
நம் முன் தற்போது இருக்கும் மிக பெரிய அச்சுறுத்தல் "புவி வெப்பமயமாதல்" அல்லது உலக வெப்பமயமாதல். புவி வெப்பமயமாதல் ...