09 October 2025

8. ஏழுமலையான் கோயிலின் வரலாறு

 🍃🌷ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025 - 4 ஆம் திருநாள் இரவு சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி 









 ஏழுமலையான் கோயிலின் வரலாறு

திருவேங்கட மலை சப்த மலைகள் எனப்படும் ஏழுமலைகள் அடங்கிய திருமலையாக விளங்குகிறது. தொண்டைமான் சக்ரவர்த்தி முதன்முதலில் ஏழுமலையானுக்கு கோயில் கட்டி வழிபட்டான் என கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

கி.மு.1-ம் நூற்றாண்டில் திருமலையில் ஒரு புற்றிலிருந்த ஏழுமலையானின் சுயம்பு சிலையை, தொண்டைமான் சக்கரவர்த்தி முதன் முதலில் தரிசித்துள்ளார். பின்னர் அவர் அபிஷேகங்கள் செய்து, அந்த சிலையைச் சுற்றிலும் ஒரு மண்டபத்தை நிறுவியுள்ளார். 

கி.பி. 9-ம் நூற்றாண்டில் அதாவது 945-ம் ஆண்டில் ஏழுமலையானின் கர்ப்ப  கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் சுற்றுப்புறச் சுவர்களும் எழுப்பட்டன. பின்னர் 10-ம் நூற்றாண்டில், 2-வது சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

 பின்னர் கி.பி. 1262-ம் ஆண்டில் சுந்தர பாண்டிய அரசன், தற்போதைய கர்ப்ப  கோயில் கோபுரத்தின் மீது தங்கக் கலசங்களை நிறுவி உள்ளார்.

கி.பி.13-ம் நூற்றாண்டில் கோயிலுக்கு மராமத்து பணிகள் நடைபெற்றுள்ளன. கி.பி 1417-ம் ஆண்டில் மல்லண்ணா என்பவர், கர்ப கோயில் முன்பு 16 தூண்கள் அடங்கிய திருமாமணி மண்டபத்தை கட்டி உள்ளார். மேலும், வாயிலின் இருபுறமும் ஜெய, விஜய சிலைகளும், கருடாழ்வார் சிலைகளும் நிறுவப்பட்டன.

கி.பி. 1209-ம் ஆண்டு கோயிலின் முகப்பு கோபுர பணிகள் தொடங்கப்பட்டன. மேலும் கோயிலுக்குள் பிரசாதங்கள் தயாரிக்கும் அறையும் கட்டப்பட்டது.

 கி.பி.16-ம் நூற்றாண்டில் பரகாமணி மண்டபம், வரதராஜர் சன்னதி, ராமானுஜர் சன்னதிகள் கட்டப்பட்டன. 

13-ம் நூற்றாண்டிலேயே கிருஷ்ண தேவராய மண்டபம், கண்ணாடி மண்டபம், ரங்கநாயக மண்டபம் போன்றவை கட்டப்பட்டன.

கி.பி. 15-ம் நூற்றாண்டில், கொடிகம்ப மண்டபம் கட்டப்பட்டது. கி.பி. 1470-ல் விஜயநகர சக்ரவர்த்தி சாளுவ நரசிம்மராயுலு தன்னுடைய மனைவி, இரண்டு மகன்களின் பெயரில் சம்பங்கி மண்டபம் உட்பட மேலும் சில கட்டிடங்களைக் கட்டினார். இப்படி திருப்பதி ஏழுமலையான் கோயில் படிப்படியாக கட்டப்பட்டு, நடைபாதை, வாகனப் பாதைகள், விடுதிகள், தேவஸ்தான அலுவலகங்கள் என வளர்ந்து நிற்கிறது.



பெருமாள் திருமொழி

 4. ஊன் ஏறு செல்வத்து

திருவேங்கடத்தில் பிறந்திட விரும்புதல் 


பிறை ஏறு சடையானும் பிரமனும் இந்திரனும்

முறையாய பெருவேள்விக் குறை முடிப்பான் மறை ஆனான்

வெறியார் தண் சோலைத் திருவேங்கட மலை மேல்

நெறியாய்க் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே 8


பொற்சிகரமாய் நின்றாலும் உன் கோயிலைச் சுற்றி அடர்ந்த காடுகள் இருப்பதால் அடியார்களால் உன் கோயிலை அடைய முடியாமல் போகலாம். அதனால் அவர்கள் உன் கோயிலை அடையும் வழியாக நான் ஆவேன்.

பிறையினை தன் சடையில் வைத்திருக்கும் சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் முறையுடன் உன்னை வேண்டிச் செய்யும் பெரும் வேள்விகளுக்கான பயன்களைத் தந்து அவர்களின் குறை தீர்ப்பாய். அவர்கள் முறை என்ன என்று அறியும் வகை சொல்லும் வேதங்களாய் நின்றாய். நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மேல் அடியவர்கள் உன் திருக்கோயிலை அடையும் வழியாகக் கிடக்கும் நன்னிலை உடையவன் ஆவேனே.



ஓம் நமோ வெங்கடேசாய !!

கோவிந்தா!!  கோவிந்தா!!


தொடரும் ....

அன்புடன், 
அனுபிரேம் 💓💓💓

No comments:

Post a Comment