ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம் நேற்று - ஐப்பசி திருமூலம்.....
ஸ்ரீ மணவாள மாமுனிகள் 655 ஆவது திருநட்சத்திரம்
மணவாளமாமுனிகளின் வாழிதிருநாமம்
இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே
பெரியபெருமாள் இவரை ஆசார்யனாக ஏற்க,
ஓராண் வழி ஸ்ரீவைஷ்ணவ ஆசாரிய குருபரம்பரையில் இறுதி
ஆசார்யனாக எழுந்தருளி இருந்து
குருபரம்பரா ஹாரத்தை பூர்த்தி செய்கிறார்
சுவாமி அழகிய மணவாள மாமுனிகள் ....
திருநக்ஷத்ரம் : ஐப்பசியில் திருமூலம்
அவதார ஸ்தலம் : ஆழவார்திருநகரி
ஆசார்யன் : திருவாய்மொழிப் பிள்ளை
பரமபதித்த இடம் : திருவரங்கம்
காலம் : கிபி 1370 - 1443
ஆழ்வார்திருநகரியிலே திகழக்கிடந்தான் திருநாவீறுடையபிரான் ஸ்ரீரங்க நாச்சியார் தம்பதிக்கு, ஆதிஶேஷன் திருவவதாரமாகவும் அனைத்துலகும் வாழப்பிறந்த யதிராஜர் புனரவதாரமாகவும் ஜனித்த வள்ளல் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.
ஓராண் வழி ஸ்ரீவைஷ்ணவ ஆசாரிய குருபரம்பரையில் இறுதி
ஆசார்யனாக எழுந்தருளி இருந்து
குருபரம்பரா ஹாரத்தை பூர்த்தி செய்கிறார்
சுவாமி அழகிய மணவாள மாமுனிகள் ....
![]() |
திருநக்ஷத்ரம் : ஐப்பசியில் திருமூலம்
அவதார ஸ்தலம் : ஆழவார்திருநகரி
ஆசார்யன் : திருவாய்மொழிப் பிள்ளை
பரமபதித்த இடம் : திருவரங்கம்
காலம் : கிபி 1370 - 1443
ஆழ்வார்திருநகரியிலே திகழக்கிடந்தான் திருநாவீறுடையபிரான் ஸ்ரீரங்க நாச்சியார் தம்பதிக்கு, ஆதிஶேஷன் திருவவதாரமாகவும் அனைத்துலகும் வாழப்பிறந்த யதிராஜர் புனரவதாரமாகவும் ஜனித்த வள்ளல் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.
![]() |
![]() |
மணவாள மாமுனிகள் அவதாரப் பெருமை :
பூருவாசார்யர்கள் பரம்பரையில் கடைசியாக அவதரித்தவர் மணவாள மாமுனிகள். ஆதிசேஷனுடைய அவதாரமாகவும், பகவத் இராமானுசரின் அவதாரமாகவும் அவதரித்தவர் மாமுனிகள்.
அவர் அவதரித்தது, நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரில் (திருக்குருகூர்), ஐப்பசித் திங்கள் "மூல" நக்ஷத்திரத்தில்.
மாமுனிகளின் இயற்பெயர் "அழகிய மணவாளர்" என்பது.
மாமுனிகளுக்கு, ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும், பிள்ளை உலகாரியனின் சீரிய நூல்களையும் கற்பித்தார் பிள்ளை உலகாரியனின் சீடரான திருவாய்மொழிப்பிள்ளை என்கிற திருமலையாழ்வார்.
திருவாய்மொழிப்பிள்ளை இராமானுசர் மாறனடி பணிந்து உய்ந்தமை பற்றிய சிறப்பை மனத்தில் கொண்டு, ஆழ்வார் திருநகரியில் இராமானுசருக்கு ஒரு திருக்கோயிலமைத்து, அதைச்சுற்றி, அந்தணர்களைக் குடியேற்றி, “இராமானுச சதுர்வேதி மங்கலம்” என்ற சிற்றூரை அமைத்து, அழகிய மணவாளரிடம் அந்த அமைப்பைச் சிறப்புற நடத்தும் பணியை ஒப்படைத்தார்.
மணவாளரின் சீரிய பணியைக் கண்ணுற்று அவருக்கு எதிராசரிடம் பேரன்பு கொண்டவர் என்ற பொருளில் "யதீந்த்ரப்ரவணர் " என்ற விருதை வழங்கினார், அவரது ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளை.
பிள்ளை ஆணையிட்டபடி, உடையவரைப் பற்றி இருபது பாக்கள் கொண்ட "யதிராஜ விம்சதி" என்ற வடமொழி நூலையும், அழகிய மணவாளர் இயற்றினார்.
சில காலம் கழித்து, அழகிய மணவாளரை திருவரங்கம் "பெரிய கோயிலில்" வாழ்ந்து வைணவ சமயத் தலைமை பூண்டு பணி செய்ய ஆணையிட்டு, திருநாட்டுக்கு எழுந்தருளினார், திருவாய்மொழிப்பிள்ளை.
அழகிய மணவாளர் வைணவர்கள் பாரிப்பதுபோல், செந்தமிழ், வடமொழி என்ற இருமொழியிலமைந்த வைணவ சமய நூல்களையும் பரப்பும் உபய வேதாந்த பிரவர்த்தகாசார்யராய், புகழ்மிக்கு விளங்கினார்.
உறவினர்கள் நிறைந்தமையால் பல நாள் அழகிய மணவாளருக்கு, அரங்கனின் கோயிலினுள் செல்ல முடியாத தீட்டு ஏற்பட்டுவந்தது. இதற்கு வருந்தி, மணவாளர், தன்னுடன் பயின்ற சடகோப சீயர் என்பவரிடம், முறையே துறவறம் வேண்டிப் பெற்றார்.
அழகிய மணவாளச்சீயர் என்ற பெயரும் பெற்றார்.
புகழ்மிக்கமை பற்றி, இவர் "பெரிய சீயர் என்றும் மணவாள மாமுனிகள் என்றும் அழைக்கப்பட்டார்.
மாமுனிகள் தம் மடத்தைச் சீர்படுத்தி, பிள்ளையுலகாசிரியர் திருமாளிகையிலிருந்து மண் கொண்டிட்டு, தன் ஆசாரியரான திருவாய்மொழிப்பிள்ளையின் பெயரால் "திருமலை ஆழ்வார் மண்டபம்" என்ற மண்டபம் எழுப்பி, சீர் வைஷ்ணவ சமயம் பரப்ப விரிவுரைகளும் தொண்டும் செய்து வந்தார்.
மாமுனிகளின் சீடர் கூட்டம் நாள்தோறும் பெருகிக்கொண்டே சென்றது
மாமுனிகள் எம்பெருமானார் பற்றிய "யதிராஜ விம்சதி" என்கிற வடமொழித்துதி நூல் தவிர, பிள்ளை உலகாசிரியரின் ஸ்ரீ வசன பூஷணம், தத்வத்ரயம், முமுக்ஷுப்படி , அழகியமணவாளப் பெருமாள் நாயனாரின் “ஆசார்ய ஹ்ருதயம்” ஆகியவைகளுக்கு தெள்ளிய, சீரிய உரைகளும்,
இராமானுச நூற்றந்தாதிக்கு உரையும், அருளாளப் பெருமானாரின் ஞானசாரம், பிரமேயசாரம் என்ற நூல்களுக்கு உரைகளும் சீடர்களின் வேண்டுகோளுக்கிணங்கி ஆழ்வார்கள், பூருவாச்சர்யார்கள் இவர்களின் ஏற்றத்தைப் பேசும் உபதேச இரத்தினமாலை என்ற நூலையும்,
திருவாய்மொழியின் பொருளைச் சுருக்கமாகவும், உணர்ச்சியுடனும் அறிவிக்கும் "திருவாய்மொழி நூற்றந்தாதி" என்ற நூலையும் செய்தருளினார்.
பகவத் கீதைக்கு தாத்பர்ய தீபமென்று ஒரு உரையிட்டதாகவும், அது இப்போது கிடைக்கவில்லை என்றும் கூறுவர்.
ஈடு முப்பத்தாறாயிரத்துக்கு மேற்கோள்களின் திரட்டு, திருவாராதன முறை, ஆர்த்தி பிரபந்தம் என்பவை இவருடைய மற்றைய நூல்கள்.
இந்நூல்களின் தெளிவை உரைக்கும் வகையில் , மாமுனிகளை "விசதவாக் சிகாமணி" என்றழைப்பர். மாமுனிகளின் சிறப்பைப் பற்றி எறும்பியப்பா, பிரதிவாதி பயங்கரம் அண்ணன் முதலானோர் நூல்களை இயற்றியுள்ளனர்.
இவ்வாறு சீரும் சிறப்பும் மிக்கு விளங்கிய அழகிய மணவாள மாமுனிகள், திருவரங்கன் இட்ட ஆணையின்படி, ஓராண்டு முழுவதும், திருவாய்மொழிக்கு உரையான நம்பிள்ளை ஈட்டை, திருக்கோயில் விழாக்கள் நிறுத்தப்பட்டு, திருவரங்கன் தன் நாச்சிமார்கள், ஆழ்வார்கள், ஆசாரியர்கள் புடைசூழ பெரிய திருவோலக்கமாக எழுந்தருளியிருக்க, திருவாய்மொழியின் சாராம்சங்களை விரித்துரைத்தார்.
அவருடைய புகழ் மேலும் உயர்ந்து அவருடைய விரிவுரையைக் கேட்கக் கூடிய கூட்டம் மிகுந்தது.
அவர் தம் காலக்ஷேபம் முடிவடையும் நாளான, சாற்றுமறை தினத்தன்று, அரங்கன் அவருக்கு சீர்கள் பல தந்து, தவிர, அரங்க நாயகமென்ற ஐந்து வயது அர்ச்சகப்பிள்ளையுருவாய் வந்து,
“ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ரப் பிரணவம் வந்தே ரம்யஜா மாதரம் முனீம்”
என்று அவரைப் புகழ்ந்து, ஒரு தனியனும் அருளிச்செய்தான். இத்தனியன், திருவதரியிலும், திருநாராயணபுரத்திலும், திருமலையிலும், திருமாலிருஞ்சோலையிலும் பெரியோர்களுக்கு தெய்வ நியமனத்தால் வெளியிடப்பட்டது.
மாமுனிகள், ஆழ்வார்களும் ஆசாரியர்களும் அவதரித்த திருத்தலங்களைப் பற்றியும், அவர்கள் அவதரித்த மாதங்களையும் திருநக்ஷத்ரங்களைப் பற்றியும், ஆழ்வார்கள் பாடியுள்ள திவ்யப் பிரபந்தங்களின் சிறப்பையும், ஆசாரியர்கள் அருளிச்செய்த கிரந்தங்களின் சிறப்பினையும் பற்றி உலகோர்கள் அனைவரும் அறியும் வண்ணம் "உபதேச இரத்தினமாலை" என்ற அற்புத கிரந்தத்தை இயற்றினார்.
மாமுனிகளின் ஒவ்வொரு நூலுமே, வைணவத்திற்கு அவர் இட்ட கிரீடமாகும். ஆனால் கிரீடத்திற்குக் கிரீடம் வைத்தாற்போல் அவர் இயற்றியது "திருவாய்மொழி நூற்றந்தாதி" என்னும் அற்புதப் பிரபந்தமாகும்.
திருவாய்மொழி நூற்றந்தாதி
முதல் பாசுரம். (உயர்வே பரன் படி…) இதில், மாமுனிகள் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள், அதாவது எம்பெருமானின் மேன்மையை விளக்கி, “அவன் திருவடிகளில் பணிந்தால் உஜ்ஜீவனத்தை அடையலாம்” என்று சொல்லும் முதல் திருவாய்மொழி சேதனர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கவல்லது என்று அருளிச்செய்கிறார்.
உயர்வே பரன் படியை உள்ளதெல்லாம் தான் கண்டு
உயர் வேதம் நேர் கொண்டுரைத்து மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு
மேன்மைகள் பொருந்திய ஸர்வேச்வரனின் தன்மைகளை முழுவதுமாக அநுஸந்தித்த ஆழ்வார், தலைசிறந்த ப்ரமாணமான வேதத்தின் க்ரமத்தில் அருளிச்செய்தார்; இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள் மனிதர்கள் சிறிதும் அஜ்ஞானம் இல்லாமல், உஜ்ஜீவனத்தைப் பெற்று, மோக்ஷத்தை அடைய வழிசெய்யும்.
இரண்டாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வார் ஸம்ஸாரிகளைத் திருந்துமாறும் தன்னுடைய ஹ்ருதயத்தைப்போலே துணையாக இருக்கும்படிக் கேட்பதையும் அனுபவித்து இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார்.
வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் – நீடு புகழ்
வண்குருகூர் மாறன் இந்த மாநிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி அருள் பத்து
சிறந்த திருக்குருகூருக்குத் தலைவரான பெருமை பொருந்திய ஆழ்வார் மிகுந்த கருணையுடன் இந்தப் பரந்த உலகில் வாழ்பவர்களைத் திருத்த “எல்லாவற்றையும் விட்டு ஸ்ரீமந் நாராயணனின் மேன்மை பொருந்திய திருவடிகளைப் பற்றுங்கோள்” என்று அருளிச்செய்தார்.
![]() |
மணவாளமாமுனிகளின் தனியன்:
ஸ்ரீஶைலேஶ தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||
திருவாய்மொழிப்பிள்ளையின் திருவருளுக்கு இலக்க்கானவரை, ஞானம் பக்தி வைராக்யம் போன்றவைகளின் கடலை, எம்பெருமானார் மீது பெருத்த மையல் உடையவரான அழகிய மணவாளமாமுனிகளை அடியேன் (அரங்கநகரப்பன்) வணங்குகிறேன் .
"அடியார்கள் வாழ அரங்கநகர்வாழ
சடகோபன் தண்தமிழ் நூல்வாழ
கடல்சூழ்ந்த மண்ணுலகம் வாழ
மணவாளமாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்".
ஆச்சாரியார் திருவடிகளே சரணம்....
அன்புடன்
அனுபிரேம் 💗💗











No comments:
Post a Comment