ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூர உற்சவம்
முதல் திருநாள்
மூலவர் -சக்கரவர்த்தி திருமகன் திருக்கோலத்தில்
உற்சவர் -இளைய பெருமாள் திருக்கோலத்தில்
பாசுரம் - பேதம்நன்கரிவார்களோடு
![]() |
காசி ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயம்
கல்வியை வழங்கும் கிரகமான புதன் காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக கிரகபதவி பெற்றார். கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும். இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம். ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.