காசி நகரமும் கால பைரவர் கோவிலும்
சிவபெருமானின் திரிசூலத்தால் தாங்கப்படுவதும் எக்காலத்தும் அழியாததுமான நகரம் காசியாகும். காசியில் சிவபெருமான் எப்போதும் நீங்காது வாசம் புரிகிறார். அதனால், இது சிவவாசம் என்றும் போற்றப்படுகின்றது.
காசியிலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவபெருமானின் தலைமைக் காவலரான பைரவமூர்த்தி அனேக பெயர்களில் எழுந்தருளியுள்ளார். இவற்றின் தலைமையிடம் காலபைரவர் சந்நதியாகும். இது காசியில் விஸ்வநாதர் கோயிலுக்கு வடக்கில், பைரவநாத் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.


