14 June 2019

கல்லிலே கலைவண்ணம் ...ஹளபேடு

வாழ்க வளமுடன்

ஹோய்சாலேஸ்வரர்  கோவிலின் முகப்பு மற்றும் உட்புறம் ரசித்தோம் இன்று வெளிப்புற சிற்பங்கள் ...







 தென்னிந்தியாவில் உள்ள பெரிய சிவன் கோயில்களுள் இக்கோவிலும்  ஒன்றாகும்.

வெளிப்புறம் எடுக்கப்பட்ட சிவன் மற்றும் தேவியும் சிற்பங்கள்.. அவர்களின் ஆபரணங்கள் மற்றும் அமர்ந்து இருக்கும் விதம் என ஒவ்வொன்றும் ஒரு தனி அழகு  ...






இக் கோயில் எளிமையான இரட்டை விமானக் கோயில் ஆகும்.

ஒரு விமானம் ஹோய்சலேஸ்வரருக்கும், மற்றது சாந்தலேஸ்வரருக்கும் உரியது.

சாந்தலேஸ்வரர் என்ற பெயர் விஷ்ணுவர்த்தனனின் அரசியாகிய சாந்தலேஸ்வரியின் பெயரைத் தழுவி ஏற்பட்டது ஆகும்.

நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைச் செய்வதற்கு உகந்த சோப்புக்கல் எனப்படும் ஒருவகைக் கல்லாலேயே இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.




அங்கிருந்து தெற்கு வாசல் நோக்கிச் செல்ல தரையிலிருந்து மூன்று அடி உயரத்தில் ஒரு நடைபாதை. இதில் செல்கையில், கணபதி, விஷ்ணுவின் அவதாரக்காட்சிகள், சிவன், பார்வதி ,லட்சுமி, பிரம்மா மற்றும் சரஸ்வதி என்று தெய்வத் திருவுருக்கள் உறைந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்கள்.


 கூடவே, ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பக்த பிரகலாதன் காவியக் காட்சிகளும் அற்புதமாகச் செதுக்கப்பட்டு, கண்களுக்குக் கலை விருந்தளிப்பதை ரசிக்கலாம்.





கோயில் முழுவதும் ஜகதி எனப்படும் மேடையொன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள இரண்டு கோயில்களும் கிழக்கு நோக்கியவையாக அருகருகே அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் முன் மண்டபங்கள் உள்ளன.




ஒவ்வொரு சிறுக் கட்டத்திலும்  ஒரு சிற்பம் 



 உட்பகுதியில் கோயிலின் தளவடிவம் எளிமையாகத் தோற்றம் அளித்தாலும், சுவர்களில் உட்பதிந்தும், வெளியே துருத்திக் கொண்டும் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ள பகுதிகளால் வெளிப்புறம் வேறுபாடாகக் காட்சி தருகின்றது.







கருவறைகளுக்கு மேல் அமைந்திருந்து இன்று அழிந்து போய்விட்ட சிகரங்கள் இதன் கருவறையைப்போலவும்,   நல்ல நிலையிலிருக்கும் பிற ஹோய்சாலக் கோயில்களில் காணப்படுவது போலவும் நட்சத்திர (நாள்மீன்) வடிவு கொண்டு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.








நந்த கோபாலன் 

தலை இல்லா சிற்பங்கள் 

யாளி யா இது 

சண்டை ....

பத்துத் தலை ராவணா

ராமர் 





எத்தனை அம்புகள்  ..



 இக் கோயில்களின் வெளிச் சுவர்களில் பல நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் உள்ளன. ஹளபீட்டில் உள்ள இக்கோயில், இந்தியக் கட்டிடக்கலையின் ஒரு சிறப்பான எடுத்துகாட்டு எனப்படுகின்றது.


இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் பேலூரில் கட்டப்பட்டு வந்த  சென்னகேசவர் கோயிலுக்குப் போட்டியாகவே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.








மரங்களுக்கு அடியில் பாம்பின் படம் ஏன் என்ற என் தேடலுக்கு இணையத்தில் கிடைத்த விடை ....


சுக்ரீவனுக்கு ’ராமனால் மகாபலம் பொருந்திய வாலியை வதம் செய்யமுடியுமா?’ எனும் ஓர் ஐயம் ஏற்பட்டது.

மலைப்பகுதியில் கிடந்த துந்துபியின் எலும்புக்கூட்டினைக் காட்டி, ”தொலை தூரத்தில் உள்ள கிஷ்கிந்தையிலிருந்து வாலி தன் காலால் அவ்வரக்கனின் சடலத்தை இங்கு விழச்செய்தான்.

அத்தகைய பலசாலி என் அண்ணன்” என்றான்.

 அவன் நோக்கத்தைப் புரிந்துகொண்ட ராமன் தன் வலது கால் கட்டைவிரலால் அந்த எலும்புக்கூட்டினை பல யோசனை துரத்திற்கப்பால் விழச்செய்தான்.

 “இது இப்போது காய்ந்துபோன எலும்புக்கூடல்லவா?” என்று கூறிய சுக்ரீவன்மீது சினம் கொள்ளாமல், “நண்பா, உன் ஐயப்பாடு எனக்கு புரிகிறது.

 நான் என்ன செய்தால் உனக்கு என் பராக்கிரமத்தின்மீது நம்பிக்கை உண்டாகும்?” என்றான் ராமன்.

சுக்ரீவன் அம்மலையில் வளர்ந்திருக்கும் ஏழு மரா மரங்களைச் சுட்டிக்காட்டி, “சிறுவயதில் நானும் அண்ணனும் இங்கு விளையாட வருவோம்.

அப்போதெல்லாம் வாலி ஒரு மரத்தைப் பற்றி  வேகமாக ஆட்டுவான்.

 உடனே ஏனைய மரங்களும் புயலில் சிக்கியதுபோல் ஆடும். அப்படிப்பட்ட வல்லவன் வாலி” என்றான்.

முகத்தில் இளநகையோட ராமன் தன் வில்லிலிருந்து ஒரு அம்பை எய்ய, ஒரே சீராக இல்லாமல் அங்கும் இங்குமாக இருந்த அவ்வேழு மரங்களும் சடசடவென சாய்ந்தன.

மகிழ்ச்சியில் திளைத்த சுக்ரீவன், “ராமா என்னை மன்னியுங்கள்.

 வாலியின் வலிமையை  நன்கறிந்த நான் அதனை உங்களுக்குச் சொல்ல முற்பட்டேன்” என்று கூறி அவன் அடிபணிந்தான்.

அவ்வளவில் அம்மரங்களின் வேரடியில் உறங்கிக் கொண்டிருந்த வாசுகி என்னும் அரவரசன் எழுந்து ராமன் கண்களுக்கு மட்டும் தெரிந்தவாறு, “அண்ணலே, கிருத யுகத்தில் அமிர்தத்திற்காக பாற்கடலில் வடவரையை மத்தாக்கி என்னை நாணாக்கிக் கடைந்தபோது, என் உடலில் ஏற்பட்ட காயங்களைத் தங்கள் திருக்கரத்தின் ஸ்பர்சத்தினால் ஆறவைத்தீர்கள்.


அப்போது நான் என் களைப்பு நீங்க உறங்க ஒரு இடம் தேவை என்றேன். ‘யாரும் சுலபமாக நெருங்க முடியாத ரிச்யமுகத்தில் உறக்கம்கொள்.

 அடுத்த திரேதா யுகத்தில் நான் மானிடனாக ராமன் எனும் பெயரோடு அவதரித்து அங்கு வருவேன்.

 அந்த ராமன் வரும் வரை காத்திரு. நெளிந்திருக்கும் உன் உடல்மீது ஏழு மரா மரங்கள் வளர்ந்து எனக்கு அடையாளம் காட்டியவாறு நிற்கும்  (அதனால்தான் வாலி ஒரு மரத்தை ஆட்டும்போது வாசுகியின் நெளிவால் இதர மரங்களும் ஆடின).


உன்மீது வளர்ந்த அம்மரங்களை நான் வீழ்த்தியதும் நீ களைப்பு நீங்கி உன் இடத்திற்குச் செல்லலாம்’ என்றீர்கள்.

 உங்கள் கருணைக்கு நன்றி. இப்போது எனக்கு விடை கொடுங்கள்” என்று கூறி வணங்கி தன்னிடம் சேர்ந்தான்.

வாசுகி அகன்றதும், ராமன், “சுக்ரீவா, இனி தாமதிக்க வேண்டாம். நாளை காலை நீ வாலியை வலுச்சண்டைக்கு இழு. நீங்கள் இருவரும் மல்யுத்தம் செய்யும்போது நான் வாலியைக் கொல்கிறேன்” என்றான்.


( வாசுகியைப் பற்றிய இந்த உபகதை செவிவழியாய்  வந்திருக்க வேண்டும். இது வால்மீகியில் இல்லை, கம்பனிலும் இல்லை. ஆந்திராவில் ஒரு பெளராணிகரின் உபன்யாசத்தில் இதனைக் கேட்டேன்..என இதை எழுதிய ஆசிரியர் 
ஸம்பத் கூறுகிறார்   )





இது போலப் பல பல காட்சிகள் அனைத்தையும் ஒரே பதிவில் பதிவிட்டாலும், மிக அதிகமாகத் தெரியும். அதனால் அக்காட்சிகளை இன்னும் சில பதிவுகளா பதிவிடுகிறேன்...


முந்தைய பதிவுகள் ...









தொடரும்....

அன்புடன்
அனுபிரேம் 





4 comments:

  1. சிற்பங்களின் தெளிவு அருமை சகோ.
    கதையும் சுவாரஸ்யமாக இருந்தது.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    ஹளபேடு கோவிலின் கட்டிட கலையும் சிற்பங்களின் அற்புத வடிவமைப்பும் மிகவும் அழகாக அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு சிற்பத்தையும் காணும் போது அங்கு சென்று தரிசிக்கும் ஆவல் பெருகுகிறது. ராமாயண காலத்து கதையும் மிகவும் நன்றாக இருந்தது. இதுவரை கேள்விப்படாத கதை. இன்னமும் அழகான படங்களை அடுத்த பதிவில் எதிர் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. கதை சுவாரஸ்யம். அருமையான படத் தொகுப்பு.

    ReplyDelete
  4. கதை அருமை. படங்களும் மிக அழகு.

    காணொளி மிக அருமை.
    நேரில் பார்த்த மகிழ்ச்சியை கொடுத்தது.

    ReplyDelete