26 June 2019

பரங்கிக்காய் அல்வா

வாழ்க வளமுடன் ...

சுவையான பதிவு இன்று ...ருசிக்க வாருங்கள்








தேவையானவை -.

பரங்கிக் காய்   - 2 கப்
வெல்லம்    - 1 கப்
சோள மாவு  - 2 ஸ்பூன்

நெய் - 4 டீஸ்பூன்






செய்முறை:

நறுக்கிய பரங்கிக்காயை குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் .   வாணலியில்  வேக வைத்த பரங்கிக்காய் மற்றும் வெல்லம் சேர்த்து கிளற வேண்டும் ..பின் சோள மாவை சேர்க்க வேண்டும் ...அடுத்து ஒவ்வொரு ஸ்பூன் நெய்யாக சேர்த்து கிளற வேண்டும் ..

நன்கு சுருண்டு அல்வா பதம் வரும் வரை கிளற வேண்டும் ...

















எளிய இனிய பரங்கிக்காய் அல்வா தயார் ....



இதில்  நறுக்கிய முந்திரி, பாதாம் இவைகளை   வறுத்தும் சேர்க்கலாம், ஏலக்காய் தூள், பட்டைப் பொடி , லவங்கப் பொடியும் சேர்க்கலாம்... நான் இவை ஏதும் சேர்க்காமல் வெறும் பரங்கியுன் சுவை மட்டும் போதும் என அப்படியே செய்தேன்.





அன்புடன்
அனுபிரேம்





9 comments:

  1. செய்ய எளிது. சுவைக்க இனிது.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    பரங்கிக்காய் அல்வா மிகவும் நன்றாக வந்துள்ளது. படங்கள் பார்க்கவே அழகாக செய்முறை எளிதாக உள்ளது. நானும் இதுபோல் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. எங்கள் வீட்டில் இது சூப்பரா போணியாவும்.

    ரொம்ப அழகா செஞ்ச்ருக்கீங்க அனு!!! செய்வது எளிதும் கூட!! டேஸ்டும் நல்லாருக்கும்

    நான் பம்ப்கின் பட்டர் என்று ஒன்றும் செய்வதுண்டு அதை ப்ரெட் சப்பாத்திக்கு வைத்து ரோல் செய்து சாப்பிடலாம் சூப்பரா இருக்கும் அனு. பட்டர்னா பட்டர் எல்லாம் தேவையே இல்லை. அது அத்தனை பேஸ்ட் போல இருப்பதால் பட்டர்னு சொல்லறது...

    கீதா

    ReplyDelete
  4. சென்ற வருடம் ஒருமுறை செய்திருக்கிறேன்..

    இப்போது சமையலறை வசதி பறிபோனது..
    அறைக்குள் செய்வதற்கில்லை..

    எளிய இனிய குறிப்பு.. மகிழ்ச்சி...

    ReplyDelete
  5. அருமையான சுவையான அல்வா.
    பார்க்கவே அழகு.சீனிக்கு பதிலாக வெல்லம் சேர்த்தது அருமை.

    ReplyDelete
  6. ஈசியான ரெசிப்பி. இப்போ பரங்கிகாய் சீசன் இல்லை.ஒக்ரோபரில் வரும் செய்துபார்க்கிறேன்.

    ReplyDelete
  7. பார்க்க அழகாக வந்திருக்கு. இன்றையிலிருந்துதான் இனிப்பு சாப்பிடுவதை மீண்டும் நிறுத்தலாம் என்று யோசனை...அதற்குள் ஆவலைத் தூண்டுவதா?

    ReplyDelete
  8. சுவையான அல்வா.... பார்த்து ரசிக்க முடிந்தது. சுவைக்கவும் கிடைத்தால் மகிழ்ச்சி!

    ReplyDelete
  9. அட, வேகவைத்தும் செய்யலாமா? நான் துருவிதான் செய்தேன். அடுத்தமுறை இப்படி செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete