12 April 2020

சிரிக்கும் சின்ன கண்மணிகள் ....







படம் : அஞ்சலி
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : பவதரணி

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி - சின்ன
கண்மணி கண்மணி கண்மணி

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி – மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி

2

3

4



அம்மம்மா பிள்ளைக்கனி
அங்கம் தான் தங்கக்கனி

அம்மம்மா பிள்ளைக்கனி
அங்கம் தான் தங்கக்கனி

பொன்மணி சின்ன சின்ன
கண்மணி மின்ன மின்ன

கொஞ்சிட கொஞ்சிட வரும் கண்ணே நீ
புன்னகை சிந்திடும் ஒரு பொன்மேனி

முத்தமும் தந்திடும் சிறு பூவே நீ
கண்படும் கண்படும் இந்த பொன் மேனி




5

6

7

ஆகாயம் பூமியெல்லாம்
இறைவன் உண்டாக்கிவைத்து
ஆசை தான் தீராமலே
உன்னைத் தந்தானம்மா...

கண்ணே உன் மேல் மேகம் தான்
பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளித் தாவும் மான்குட்டி
சொல்லிச்சொல்லி தாலாட்டும்...

நடக்கும் நடையில் ஒரு பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பும் ஒரு மத்தாப்பு
உனது அழகுகென்ன ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கை தட்டி...

வாராது வந்த தேவதை
உலாவும் இந்த வெள்ளி தாரகை....




8


9

10


பூப்போலே கண்ணாலேதான்
பேசும் சிங்கராமே நீ
அன்னம் போல் நம்மோடுதான்
ஆடு எப்போதும் நீ

வானம் ஆளும் ஏஞ்சல் தான்
வண்ணப்பாப்பா அஞ்சலி தான்
அம்மா நெஞ்சில் ஊஞ்சல் தான்
ஆடிப் பார்க்கும் அஞ்சலி தான்



11



12

13


நடந்து நடந்து வரும் பூச்செண்டு

பறந்து பறந்து வரும் பொன் வண்டு
எடுக்க எடுக்க இரு கை கொண்டு
இனிக்க இனிக்க வரும் கற்கண்டு

நிலாவைப் போல ஆடிவா
நில்லாமல் கூட நீயும் ஓடி வா...

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி - சின்ன
கண்மணி கண்மணி கண்மணி

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி – மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி


14

15

16


அஞ்சலி அஞ்சலி அஞ்சலி - சின்ன
கண்மணி கண்மணி கண்மணி

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி – மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி

17

18

19

20

21



லால்பாக் பூங்காவில் மலர்ந்து சிரிக்கும் மலர்கள்  ...போன வாரம் அஞ்சலி படம் பார்த்து ரசித்த பாடல் வரிகளுடன் ,....


அன்புடன்
அனுபிரேம்






13 comments:

  1. அழகான பூக்கள். பாடலும் நன்று.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார்

      Delete
  2. தலைப்பைப் பார்த்துத் திடுக்கிட்டு வந்தேன்.

    நாளை புதுவருடம் (பொதுவா 14ம் தேதி). இன்று யாருக்கு அஞ்சலி என்று.

    அழகிய பூக்களுக்கு வேறு நல்ல பாடல் கிடைக்கவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. அடடா......நிறைய பாடல்கள் யோசித்தேன் ....ஆனாலும் வெகுவாக இந்த இருநாட்கள் மனதில் இவ்வரிகளே வந்ததால் பகிர்ந்தேன் ...

      எனக்கும் கொஞ்சம் யோசனையாக தான் இருந்தது ....

      அதனால் இப்பொழுது தலைப்பை மாற்றி விட்டேன் ...

      நன்றி சார் ...

      Delete
  3. உங்க தளத்திலிருந்துதான், கண்ணைப் பறிக்கும் 'அரங்கனின் அமுதுபடிகள்' தளத்துக்கு இப்போ போகப்போகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ...நானும் வாசித்து மகிழ்ந்தேன்

      Delete
  4. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நானும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு அஞ்சலி தலைப்பை பார்த்து ஓடி வந்து பார்க்கும் போது, அழகான மலர்களும், பாட்டும் இருக்கக் கண்டு நிம்மதியடைந்தேன். இப்போது கருத்திடலாம் என வந்த போது தலைப்பு மாறியுள்ளதைப் பார்த்து அதற்குள் வேறு பதிவு போட்டு விட்டீர்களா என வியப்படைந்த வரும் போது தலைப்பை மாற்றி விட்ட விஷயம் தெரிந்து கொண்டேன்.

    அழகான மலர்கள் ஒவ்வொன்றும் கண்களை கவர்கிறது.அருமையான பாட்டு. ஆனால் அந்தப்படக் கதையில் அஞ்சலிக்கு வரும் சோகந்தான் தாங்க முடியாதது. மனது கனக்கும். முடிவை நல்ல விதமாக முடித்திருக்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா அக்கா , பாட்டையும் படங்களையும் ரசித்தமைக்கு ...

      வழமை போல பாடலின் முதல் வரிகளை போட்டேன், அனைவரும் அறிந்தது தானே என்று ஆனால் அதன் அர்த்தம் வேறு மாதிரி செல்லவும் பிறகு மாற்றிவிட்டேன் ...

      அஞ்சலி படத்தின் முடிவு என்றுமே மனதை கனக்க வைக்கும் ...

      Delete
  5. அழகிய மலர்களின் அணிவகுப்பு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்

      Delete
  6. அனு செம படங்கள். பூக்கள் அத்தனையும் ஹையொ என்ன சொல்ல?!!! அத்தனை அழகு. ரொம்ப நல்லா எடுத்துருக்கீங்க..

    நீங்களும் அழகா எடுத்துருக்கீங்க, உங்க கேமரா/மொபைல்ம் கேமராவும் சூப்பரா இருக்கு..

    கீதா

    ReplyDelete
  7. அனு செம படங்கள். பூக்கள் அத்தனையும் ஹையொ என்ன சொல்ல?!!! அத்தனை அழகு. ரொம்ப நல்லா எடுத்துருக்கீங்க..

    நீங்களும் அழகா எடுத்துருக்கீங்க, உங்க கேமரா/மொபைல்ம் கேமராவும் சூப்பரா இருக்கு..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா அக்கா ...


      எல்லாம் மலர் கண்காட்சியில் எடுத்த படங்கள் ...மேலும் இவை எல்லாம் கைபேசியில் எடுத்தவையே ..

      என் கைப்பேசி நன்றாக எடுப்பது தெரிந்து , திருடனும் என் கைபேசியை தூக்கி சென்று விட்டார் ....என்ன செய்ய

      Delete