04 December 2020

அருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோயில், மலைக்கோட்டை, திருச்சி.


வாழ்க வளமுடன் ,

இன்றைய பதிவில்  உச்சிப்பிள்ளையார் கோயில் காணலாம் ....





கடந்த செப்டம்பர் மாதம்  இங்கு சென்றோம் ... எப்பொழுது சென்றாலும் கூட்டமாக இருக்கும் , ஆனால்  இந்த முறை யாருமே இல்லாமல் ஆஹா அருமையான தரிசனம்.

தகவல்களுடன் தரவேண்டும் என்பதே ஆசை ஆனால்  அதற்கு நேரம் ஒத்துவரவில்லை .. விரைவில் தகவல்களுடன் காணலாம் .


ஐந்தாம் திருமுறை


பாடல் எண் : 1

மட்டு வார்குழ லாளொடு மால்விடை

இட்ட மாவுகந் தேறு மிறைவனார்

கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயும்

சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே 


சிராப்பள்ளிச் செல்வர், தேன் ஒழுகும் நீண்ட குழலை உடைய உமாதேவியோடு பெரிய விடையினை விருப்பத்தினோடு உகந்து ஏறும் இறைவர்; பாசக்கட்டு நீத்தவர்க்கு இன்னருளே புரியும் மேலோர்.


பாடல் எண் : 2

அரிய யன்தலை வெட்டிவட் டாடினார்

அரிய யன்தொழு தேத்து மரும்பொருள்

பெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார்

அரிய யன்தொழ அங்கிருப் பார்களே  .


திருமால், அயன் ஆகியோர் தலைகளை வெட்டி வட்டுப்போல் ஆடியவரும், அவ்விருவரும் தொழுது வணங்கும் அரும்பொருளும், பெரியவரும் ஆகிய அப்பெருமானுக்குரிய சிராப் பள்ளியைச் சிந்தையுள் பேணும் அன்பர், திருமாலும் பிரமனும் தொழச் சிவலோகத்திருப்பார்கள்.


பாடல் எண் : 3

அரிச்சி ராப்பக லைவரா லாட்டுண்டு

சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்

திருச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை

நரிச்சி ராது நடக்கும் நடக்குமே. 


நெஞ்சே! ஐம்புலக் கள்வரால் இராப் பகலாக அரிக்கப்பெற்று ஆட்டப்பெற்று வருந்தியிராமல் இருக்க, ஓர் உபாயம் சொல்லக் கேட்பாயாக! திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை பொருந்தி இருக்காமல் உன்னைவிட்டு நடக்கும்; நடக்கும்!


அன்புடன் 

அனுபிரேம் 

3 comments:

  1. பல முறை நாங்கள் சென்றுள்ளோம். அருமையான கோயில். இப்போது பதிவு மூலமாகச் சென்றோம். நன்றி.

    ReplyDelete
  2. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பார்த்தது. இப்போது மீண்டும் காண்பதற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  3. அழகான, எனக்கும் பிடித்த கோவில். சமீபத்தில் வாட்ஸ் அப் வழி கோவிலில் கார்த்திகை திருவிழா காட்சிகளை DRONE CAMERA வழி படம் பிடித்து இருந்ததை அனுப்பி இருந்தார்கள். அவ்வளவு சிறப்பாக இருந்தது.

    ReplyDelete