வெள்ளி அவுதா தொட்டில்!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தை தெப்பத்திருவிழா பன்னிரெண்டாம் நிறைவு நாள் வைபவம்.-- [11.02.25] செவ்வாய்க்கிழமை
காலையில் அம்மன்,சுவாமி எழுந்தருளிய வாகனங்கள்.
அம்மன் : வெள்ளி அவுதா தொட்டில்
சுவாமி : வெள்ளி சிம்மாசனம்
![]() |
5:30 மணியளவில்.....
நான்கு சித்திரை வீதி, அம்மன் சந்நதி,கீழமாசி வீதி, யானைக்கல், நெல்பேட்டை,முனிசாலை,காமராஜர் சாலை, திருக்கண் மண்டகப்படியாகி தெப்பக்குளத்தைச் சுற்றி முத்தீஸ்வரர் திருக்கோயில் சேர்தல்.
எழுந்தருளிய மண்டபம் : அருள்மிகு முத்தீஸ்வரர் கோவில் சென்று பின் தெப்பம் சுற்றி மேல் மகாஸ்ரீ திருமலை நாயக்கர் மைய மண்டபம் எழுந்தருளல்.
இரவு:அம்மன்,சுவாமி எழுந்தருளும் வாகன விபரம்-
அம்மன் : வெள்ளி அவுதா தொட்டில்
சுவாமி : தங்கக் குதிரை வாகனம்
இரவு எழுந்தருளும் நேரம் : 10:00 மணியளவில்
இரவு திருவீதியுலா:
தெப்பகுளம் சுற்றி காமராஜர் சாலை வெங்கலகடை தெரு கீழ அவணி மூல வீதி சொக்கப்பநாயக்க்கன் தெரு நான்கு சித்திரை வீதிகளில் சுற்றி அம்மன் சன்னதி வழியாக திருக்கோயிலுக்குள் வந்து சேருதல்.
பன்னிரண்டாம் நாள் காலை சுவாமி வெள்ளி சிம்மாசனம் வாகனத்திலும் அம்பாள் வெள்ளி அவுதா தொட்டில் வாகனத்திலும் எழுந்தருளி, தெப்பத்திற்குத் திருக்கோயிலில் இருந்து புறப்பாடு.
அவுதா என்றால் அம்பாரி என்று பொருள் . அராபிக் வார்த்தை howdaj ,இந்தியில் howdah வாக மாறி தமிழில் அவுதா ஆனது.ஏறத்தாழ தொட்டிக்கும் இதே அர்த்தம் தான். தொட்டி என்றாலும் அம்பாரி என்றே பொருள்.
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா திருமலை நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது.
இன்றைய தினம் திருமலை நாயக்கர் ஜென்ம நட்சத்திரம். அவரே இத்தெப்பக்குளத்தையும் ஏற்படுத்தி தன் பிறந்தநாளை முன்னிட்டு இத்தெப்போற்சவத்தையும் மதுரையில் ஏற்பாடு செய்தார்.
பத்தாம் நாள் தை உற்சவம் முடிந்து தீர்த்தவாரியாகி கொடியும் இறக்கியாயிற்று.
எனவே தெப்பம் ஏக தின உற்சவம். நாயக்கர்களுக்கு மீனாட்சி அம்மனின் ராஜ்ய பாரத்தின் மீதிருந்த பற்று யாவரும் அறிந்ததே. எனவே தான் நாயக்க மன்னன் பிறந்தநாளையொட்டி அம்பாரியில் இராணியாக மீனாட்சியை அமரச்செய்து புறப்பாடு .
இந்த ஒரு உற்சவத்தில் மட்டும் தான் சுவாமியைக்காட்டிலும் அம்பாள் அதிகப்படியான ஒரு வாகனத்தில் உலா. அதாவது இருவருக்கும் வெள்ளி சிம்மாசனம் தான் ஆனால் அம்பிகைக்கு சிம்மாசனத்தின் மேல் கூடுதலாக ஒரு அவுதா. மற்றைய எல்லா நாட்களும் (இன்று இரவும் கூட) சுவாமியைக்காட்டிலும் அம்பிகை ஒரு படி மேலே தான் மதுரையில்..
இன்றைய நாளில் அத்தனை பிரதானம் அன்னை மீனாட்சிக்கு.
மதுராபுரி அம்பிகை மாலை
- குலசேகர பாண்டியன் அருளியது -
நும் கேள்வர் பாகத்தும், அந் நான் மறை எனும் நூல் இடத்தும்,
கொங்கு ஏய் பொகுட்டுக் கமல ஆலயத்தும், குடி கொண்ட நீ
எங்கே இருக்கினும் நாய் அடியேனுக்கு இடர் வரும் போது
அங்கே வெளிப்படுவாய்! மதுராபுரி அம்பிகையே! 18.
பொன்னே! நவ மணியே! அமுதே! புவி பூத்து அடங்கா
மின்னே! ஒளி உற்ற மெய் பொருளே! கரு மேதியின் மேல்
எந் நேரம் காலன் வந்து ஆவி விட்டாலும், எனக்கு அஞ்சேல் என்று
அந் நேரம் வந்து அருள்வாய்! மதுராபுரி அம்பிகையே! 19.
எந் நேரம் காலன் வந்து ஆவி விட்டாலும்,
எனக்கு அஞ்சேல் என்று
அந் நேரம் வந்து அருள்வாய்!
மதுராபுரி அம்பிகையே!
கருப்பு கவுனி அரிசி மருத்துவ பயன்கள்
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2025/02/blog-post.html
சிறப்பு
Deleteபடங்கள் அனைத்தும் அழகு.
ReplyDeleteதகவல்கள் சிறப்பு. தொடர்கிறேன்.
நன்றி வெங்கட் சார்
Deleteஅருமையான படங்கள்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் சார்
Deleteமீனாட்சி ஊரில் இருந்தும் முழங்கால் வலி தொந்திரவால் எங்கும் போக முடியவில்லை.
ReplyDeleteஉங்கள் பதிவின் மூலம் தரிசனம் செய்து கொண்டேன்.
அம்பாரி வாகனம் அருமை.
படங்கள் எல்லாம் அழகு.
நன்றி மா, மனதால் இருந்த இடத்திலிருந்து நினைத்தாலே போதுமே அவளுக்கு ...எங்கும் இருப்பாள் நம் மீனாட்சி
Deleteபடங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு அனு.
ReplyDeleteஅவுதா என்பதைப் பார்த்ததும் புதுசா இருக்கே என்று நினைத்தேன் வாசித்ததும் தெரிந்தது அம்பார் என்றும் அரபு, ஹிந்தி, தமிழில் அவுதா என்று ஆகியதும் தெரிந்தது.
நல்ல விவரங்கள், அனு
கீதா
நன்றி அக்கா
Delete