திருப்பதி, ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் -- ரத சப்தமி விழா
முந்தைய பதிவு --- ரத சப்தமி வரலாறு ...
1.அதிகாலை ஸ்ரீ பெருமாள் சூர்ய பிரபை வாகனத்தில் புறப்பாடு
2. சின்ன சேஷ வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடு
3.கருட வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடு
4. ஹனுமந்த வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடு
பிற்பகல் சக்கரஸ்தானம் - தீர்த்தவாரி
5. கற்பக விருக்ஷம் வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடு...
6.சர்வ பூபால வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடு
7.சந்திர பிரபை வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடு
207.
போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்*
போதரேன் என்னாதே போதர் கண்டாய்*
ஏதேனும் சொல்லி அசலகத்தார்*
ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன்*
கோதுகலம் உடைக் குட்டனேயோ!*
குன்று எடுத்தாய்! குடம் ஆடு கூத்தா!*
வேதப் பொருளே! என் வேங்கடவா!*
வித்தகனே! இங்கே போதராயே
247.
கடி ஆர் பொழில் அணி வேங்கடவா!* கரும்
போரேறே!* நீ உகக்கும்-
குடையும் செருப்பும் குழலும்* தருவிக்கக்
கொள்ளாதே போனாய் மாலே!*
கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன*
சிறுக் குட்டச் செங் கமல*
அடியும் வெதும்பி* உன் கண்கள் சிவந்தாய்
அசைந்திட்டாய் நீ எம்பிரான்!
1946.
சொல்லாய் பைங்கிளியே,*
சுடர்ஆழி வலன் உயர்த்த,*
மல்ஆர் தோள்* வட வேங்கடவனை வர,*
சொல்லாய் பைங்கிளியே! (2)
2001.
கள்ளத்தால் மாவலியை* மூவடி மண் கொண்டு அளந்தான்,*
வெள்ளத்தான் வேங்கடத்தான்* என்பரால் காண் ஏடீ,*
வெள்ளத்தான்* வேங்கடத்தானேலும்,* கலிகன்றி-
உள்ளத்தின் உள்ளே* உளன் கண்டாய் சாழலே. (2)
அனுபிரேம்💛💛
No comments:
Post a Comment