வாழ்க வளமுடன்
நேற்றைய பதிவில் மத்வ நவமி பற்றி பார்த்தோம்..
இன்று மத்வ நவமி பற்றி குருஜி (குருஜி கோபாலவல்லி தாசர் ) வெளியிட்ட காணொளியை பகிர்கிறேன். படிப்பதை விட காணும் பொழுது இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா.
நன்றி - குருஜி
உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் திவ்ய சேவை
145.
முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி* நின்
காதிற் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு*
மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி காத்துப்*
பசுநிரை மேய்த்தாய்*
சிலை ஒன்று இறுத்தாய்! திரிவிக்கிரமா!*
திரு ஆயர்பாடிப் பிரானே!*
தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே*
விட்டிட்டேன் குற்றமே அன்றே?
231.
தாய்மார் மோர் விற்கப் போவர்* தமப்பன்மார்
கற்றா நிரைப் பின்பு போவர்*
நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை*
நேர்படவே கொண்டு போதி*
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து*
கண்டார் கழறத் திரியும்*
ஆயா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு
அஞ்சுவன் அம்மம் தரவே*
1302.
பட அரவு உச்சி தன் மேல்* பாய்ந்து பல் நடங்கள் செய்து*
மடவரல் மங்கை தன்னை* மார்வகத்து இருத்தினானே!*
தடவரை தங்கு மாடத்* தகு புகழ் நாங்கை மேய*
கடவுளே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
1993.
தந்தை தளை கழலத்* தோன்றிப் போய்,* ஆய்ப்பாடி-
நந்தன் குல மதலையாய்* வளர்ந்தான் காண் ஏடீ,*
நந்தன் குல மதலையாய்* வளர்ந்தான் நான்முகற்குத்*
தந்தை காண் எந்தை* பெருமான் காண், சாழலே.
1994.
ஆழ் கடல் சூழ் வையகத்தார்* ஏசப் போய்,* ஆய்ப்பாடித்-
தாழ் குழலார் வைத்த* தயிர் உண்டான் காண் ஏடீ,*
தாழ் குழலார் வைத்த* தயிர் உண்ட பொன் வயிறு,* இவ்-
ஏழ் உலகும் உண்டும்* இடம் உடைத்தால் சாழலே.
ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரண்..
அன்புடன்
அனுபிரேம்💞💞💞
No comments:
Post a Comment