09 February 2025

வாங்க படம் பார்க்கலாம் ..

 சித்திர சந்தே(சந்தை) ,பெங்களூரூ யில் எடுத்த காட்சிகள் ...


சித்திர சந்தே 2025 முதலாம் பாகம் 






என்ன இருக்கு அங்க ...





யே  அப்பா என்ன சத்தம் இங்க ..


ஹாய் ..ஹி  ஹி  நான்  தான் 



நானும் அவனும் 


வண்டிகள் எல்லாம் கொடியில்  பறக்குதே ..


ஏயே  சாமி இளநி வாங்கலையோ ..

அடேய் தியானம் பண்ண உடுடா ...








நீங்களும் தியானத்திலா அப்ப  சரி 


யப்பா சாமி நீ எங்க  நின்னு டான்ஸ் ஆடுற ..


இந்த பக்கம் கோடரி அந்த பக்கம் லட்டு .. ம்ம் நீ கலக்கு சாமி 


இது பக்தியா காதலா ..


சரி சரி  புரிஞ்சுடுச்சு  இரண்டும் ஒன்னுகுள்ள ஒன்னுன்னு 
 எது இரண்டும்.. ஓ  பக்தியும் காதலும் மா  ..




மச்சமும் கூர்மையும் எல்லாம் அவனுள்ளே 




கொடி  கட்டி காற்றில் காயும் படங்கள் 





போவோமா ஊர்கோலம் ....












தொடரும் ...


அன்புடன்

அனுபிரேம்💞💞💞







8 comments:

  1. ஓவியக் கண்காட்சிகளில் படங்கள் எடுக்க விடமாட்டாங்களே..

    பக்தியா காதலா மற்றும் அர்த்தநாரீஸ்வரர் அதைத் தொடர்ந்து வரும் அந்த மாதிரி டைப் ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இதன் விலைகளெல்லாம் கேட்டீங்களா இல்லை பார்வை மாத்திரம்தானா?

    ReplyDelete
    Replies
    1. மிக சில பேர் மட்டும் தான் படம் எடுப்பதை விரும்புவது இல்லை சார், முக்கால் வாசி பேர் மிக மகிழ்ச்சியுடன் எடுத்தக்க சொல்வார்கள்.

      விலை எல்லாம் ரொம்ப அதிகம் சார், ஆரம்பமே பல ஆயிரங்களை தாண்டும், போன ஆண்டு பரிசு அளிக்க சில தஞ்சாவூர் ஓவியங்கள் வாங்கினேன் .. வாங்கும் எண்ணம் இருந்தால் கேக்கலாம், எனக்கு அந்த ஐடியாவே இல்ல எனவே விலை கேக்க வில்லை சார்.பார்வையால் ரசித்துக் கொண்டு வந்துவிட்டேன்ஆனால் பலர் மிக விரும்பி வாங்கியதை காண முடிந்தது.

      Delete
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. சித்திர சந்தே ஓவியங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. "என்ன இருக்கு அங்கே" என பசு கேட்கும் ஓவியம் அழகோ அழகு.

    "ஆற்றங்கரை மரமே, அரசமர நிழலே.. " என் பிள்ளையார் பாடுகிறரோ..? அந்த ஓவியந்தான் எத்தனை இயற்கை அழகுடன் சூப்பராக உள்ளது.
    படங்களையும், தங்கள் கற்பனை வரிகளையும் மிகவும் ரசித்தேன்.

    "பிள்ளாயாருக்குப் பிடித்த இளநீர் வாங்கவில்லையா..? "என இளநீர் விற்பவர் கேட்பதும், "தியானம் செய்யும் போது என்ன இடைஞ்சல்" என பிள்ளையார் கோபப்படுவதும் ஒன்றிற்காக ஒன்று என நல்ல கற்பனை வரிகள். ரசித்தேன்.

    காளிங்க நர்த்தனம், மச்ச, கூர்ம அவதாரங்கள் என அத்தனையும் அர்மை." அந்த போவோமா ஊர்கோலம்" கண்களை கவர்கிறது. அத்தனையும் சிறப்பு சகோதரி. வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

    பாரதியின் பாடலும் அருமை. ஓவியங்களை ரசித்தேன். பாடல் மனதிற்கு இதமளிக்கிறது. நல்லதோர் பதிவுக்கு தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். . தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. பசு கேட்கும் ஓவியம் அழகோ அழகு ...அது பிச்சுவாரி ஓவியம் கமலா அக்கா எனக்கும் அதன் மேல் ஈர்ப்பு அதிகம் .

    "ஆற்றங்கரை மரமே, அரசமர நிழலே.. " என் பிள்ளையார் பாடுகிறரோ..? அந்த ஓவியந்தான் எத்தனை இயற்கை அழகுடன் சூப்பராக உள்ளது. ..எத்தனை நுணுக்கமான ஓவியம் எத்தனை நாள் உழைப்போ ..ரொம்ப தத்ரூபம் அப்படம்

    நல்ல கற்பனை வரிகள். ரசித்தேன்...நன்றி அக்கா

    உங்களுக்கு இப்பதிவு இத்தனை பிடித்ததில் மிக மகிழ்ச்சி அக்கா ..அங்கு நான் சில மணிநேரங்களே இருந்தேன் ஆனாலும் இன்னும் அந்த மகிழ்ச்சி உள்ளது .

    ReplyDelete
  4. மிக அழகிய ஓவியங்கள். சில ரசிக்க வைக்கின்றன. சில பிரமிக்க வைக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார், மிக அழகான ஓவியங்கள் நிறைந்த சந்தை அது

      Delete
  5. மிக அருமையாக இருக்கிறது ஓவிய கண்காட்சி படங்கள்.
    மரத்தடி பிள்ளையார், குளம், தண்னீர் சுமந்து செல்லும் பெண்கள் படம், இளநியை சைக்கிளில் வைத்து தள்ளி போகும் படம் எங்கள் வீட்டுக்கு(மாயவரத்தில்) வரௌம் இளநீர்காரர் நினைவு படுத்தியது.
    பாரதியார் கவிதை நன்று.

    ReplyDelete