27 January 2025

சித்திர சந்தே 2025

சித்திர சந்தே(சந்தை) ,பெங்களூரூ

பெங்களூரில்  ’சித்திர சந்தே’ என்று அழைக்கப்படும் ஓவியக் கண்காட்சியை  கர்நாடகா சித்ரகலா பரிக்ஷத் வருடா வருடம்  வருடத்தின் முதல் ஞாயிறு அன்று  நடத்திவருகிறது. குமர க்ருபா சாலையை முழுவதும் இந்த கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டு சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓவியர்கள் பங்கேற்கிறார்கள். 

பலவிதமான ஓவியர்களும்,வித்தியாசமானா  தத்ருபமான ஓவியங்களும் இங்கு சாலை எங்கும் நிரவி உள்ளது.இந்த ஆண்டு பெண்குழந்தைக்கான பாதுகாப்பு என்னும் தலைப்பில் பல நிகழ்ச்சிகளும்,பல கருத்துக்களும் என  முன்னெடுக்கப்பட்டன. 




சாலை இருபுறமும் மரங்கள் சூழ்ந்திருக்க மக்கள் கூட்டமாக குடும்பத்துடன் வந்து ரசிக்கிறார்கள். காண கண் கோடி வேண்டும் என்று சொல்லுவது இந்த கண்காட்சிக்கு பொருந்தும்.

போன வருடம் போல இந்த வருடமும் அங்கு சென்று பார்க்கும் வாய்ப்பு அமைந்தது.போன வருடம் இங்கு படங்களை பகிர இயலவில்லை.பல வகையான ஓவியங்களும், மக்களும் என மிக பெரிய திருவிழா இது. அங்கு செல்லும் பொழுதே எனக்கு மிக ஆனந்தமாகிவிடும், அம்மக்களையும்  அவர்களின் மகிழ்ச்சியும் காணும் பொழுது மிக மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்தியாவின் பல ஊரிலிருந்து பல மொழி பேசும் கலைஞர்கள் வந்து தங்களின்  சித்திரங்களைச் சந்தைப்  படுத்துகின்றனர்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் உற்சாகத்துடன் இங்கு காணலாம்.

இவ்வருடம் அந்த திருவிழாவில் நாங்கள் ரசித்து, பார்த்து, படம் எடுத்தவற்றை  அவ்வப்பொழுது  இனி வரும் பதிவுகளில் பகிர்கிறேன் ...

நீங்களும் கண்டு ரசியுங்கள் ..































படங்கள் மட்டும் அல்லாது  இந்த முறை சின்ன சின்ன வீடியோக்களும் எடுத்தேன், அவற்றையும் இணைத்து இருக்கிறேன்.




தொடரும் ...


அன்புடன்

அனுபிரேம்💞💞💞






No comments:

Post a Comment