திருப்பாவை 28
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா! நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய்
நன்றி: Upasana Govindarajan Art |
பொருள்:
குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம், உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.
விளக்கம்-
அடுத்த விண்ணப்பம்
மார்கழி நீராடுவான் என்று நோன்பை அறிவித்து, அந்த நோன்புக்கு உபகரணங்களான சங்கு முதலியவற்றையும், நோன்புதனை முடித்த பின்னர் அலங்கரித்துக் கொள்ளுதற்கு உபகரணமான ஆடை ஆபரணங்களையும் அன்புடன் சுற்றங்களுடன் கூடிக் குளிர்ந்து பால் சோறு உண்பதும் சென்ற இரண்டு பாடல்களால் பாடிய ஆய்ச்சியர்களை நோக்கிக் கண்ணன், பெண்களே, உங்களுடைய கருத்து இவ்வளவு என்று எனக்கு தோன்றவில்லை; நீங்கள் இப்போது சொன்னவற்றையும் இன்னும் சில கேட்டுக்கொண்டாலும், அவற்றையும் நான் தர வேண்டில், உங்களுடைய நிலைமையை அறிந்து தர வேண்டி உள்ளது.
பேறு உங்களது தான் என்று ஆன பின்பு நீங்களும் சிறிது முயற்சி உடையீர்களாக இருக்க வேண்டும். அதற்காக நீங்கள் அநுஷ்டித்த உபாயம் ஏதாவது உண்டோ என்று கேட்டருள அது கேட்ட ஆய்ச்சியர்கள், ‘எங்கள் நிலைமையை நீ தான் நேரே கண்ணால் காண்கிறாயே என்றும், அறிவு இல்லாத நாங்கள் எடுத்துக் கூற வேண்டும்படி நீ உணராதது ஒன்று உண்டோ என்றும் எங்கள் நிலைமையை நன்கு உணர்ந்த நீ எங்களிடம் வினவியது மிக அற்புதமாய் இருக்கிறது” என்று தங்கள் ஸ்வரூபம் இருக்கும்படியை அறிவித்து, இந்த இடைப்பெண்கள் கேவலம் தயா விஷயம் என்று திருவுள்ளம் பற்றி நீ எங்கள் காரியம் செய்தருள வேணும் என்று விண்ணப்பம் செய்யும் கறவைகள் பின் சென்று பாசுரம் இது.
எம்பெருமானே சாதனம் என்று இருப்பவர்களுக்கு, பேற்றுக்கு தங்களிடம் சாதனமாக ஒரு நல்ல கருமமும் இல்லை என்பதும்,
தங்களுடைய இயலாமையை அனுஸந்திக்கையும்,
ஈச்வரனுடைய குணபூர்த்தியை அனுஸந்திக்கையும்,
ஸம்பந்தத்தை உணருகையும்,
பூர்வ அபராதங்களுக்கு மன்னிப்பு கோருவதும்
ஈச்வரன் பக்கம் அவனை அடைய வழியையும் வேண்டிக் கொள்வதும்
ஆகிய இந்த ஆறு அங்கங்களும் கைங்கர்யம் வேண்டும் அடியவர்களின் அதிகாரங்களாக இந்த பாட்டில் வெளியிடப்படுகின்றன. ஆச்சியர் இன்னது செய்தார்கள், இவன் இன்னது செய்தான், என்று நாட்டார்க்குச் சொல்லுகைக்கு ஒரு காரணம் வேண்டுமே’ என்று இவன் சொல்ல, ஆய்ச்சியர்கள், ‘ஒன்றையும் எதிர்பாராமல் நீ காரியம் செய்தால் உன்னை விலக்குகைக்கு உரியார் உண்டோ?’ என்கிறார்கள்.
எங்களை பார்த்தாலும் நீ காரியம் செய்ய வேண்டும்;
எங்களையும் உன்னையும் பார்த்தாலும் நீ காரியம் செய்ய வேண்டும்;
உன்னை பார்க்காமல் எங்களை மட்டும் பார்த்தால் நாங்கள் இழக்கிறோம்.
எங்களை பார்க்காமல் உன்னை மட்டும் பார்த்தாலும் நாங்கள் பெறுகிறோம். இப்படி ஆன பின் எங்கள் ரக்ஷணத்திற்கு உன்னை நாங்கள் விடலாமோ என்கிறார்கள்.
எங்களுக்கு அறிவில்லை என்பதால் நன்மை இல்லை என்றோம்;
நீ நன்மைக்கு துணை என்றோம்; நீ பூர்ணன் என்றோம்; சுலபன் என்றோம்; உன்னோடு எங்களுக்கு என்றும் மாறாத சம்பந்தம் உண்டு என்றோம்; எங்கள் தப்புக்கு மன்னிப்பு கேட்டோம்; இனி நாங்கள் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. இனி நீ உன்னை இழவாமல் காரியம் செய்ய பார்; உன் ஞான சக்திகளுக்கு குறைவில்லாமல் இருந்தது; எங்களுக்கும் அறிவில்லாமை முழுமையாக இருந்தது. குற்றங்களை பார்த்து சீர முடியாதவனாக எல்லா விரோதிகளையும் போக்குகிறேன் என்றவனாக நீ இருந்தாய்; பிராப்தி விஷயமாக எங்களை சோதிக்காமல் ஏற்று கொள் என்ற எங்கள் வேண்டுகோளையும் ஏற்று கொள்ள கூடாதோ என்றும் உபாய பூர்த்தியையும் சொல்லி, புகுந்த எல்லா குறைகளையும் மன்னித்து எங்கள் பிராப்த சித்திக்கு நீயே உபாயம் ஆக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் பாடல்.
28. கற்றுக் கறவை - குறை ஒன்றுமில்லாத கோவிந்தா - (விருந்தாவனம்)
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....
அன்புடன்
No comments:
Post a Comment