ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திரு ஆடிப்பூர உற்சவம்
5. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஆடித்திருநாள் ப்ரம்மோத்ஸவம் ஐந்தாம் திருநாள் இரவு ஐந்து கருட சேவை
ஆடிப்பூர உற்சவத்தில் 5ஆம் திருநாள் மிக முக்கியமான ஒன்று ஐந்து பெருமான்களையும் பெரியாழ்வார் மங்களா சாசனம் செய்து வரவேற்பார். அதன் பின்னர் அனைவரும் திருமஞ்சனம் கண்டருளி கருட வாகனத்தில் எழுந்தருளுவர்.
ஐந்தாம் நாள் காலை -- ஸ்ரீ பெரியாழ்வார் மங்களாசாசனம்
ஸ்ரீ பெரிய பெருமாள், ஸ்ரீ சுந்தரராஜன் , ஸ்ரீனிவாசன், திருத்தங்கல் அப்பன், ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார் ஆடிப்பூர கொட்டகைக்கு எழுந்தருளி ஸ்ரீ பெரியாழ்வார் திவ்ய பிரபந்த பாசுரங்களால் மங்களா சாசனம் நடைபெற்றது.



