02 January 2020

திருப்பாவை – பாசுரம் 17

அம்பரமே

கதவை திறந்ததும் கோபியர் உள்ளே சென்று, நந்த கோபனையும், யசோதையையும், பலராமரையும் சயனத்திலிருந்து எழுப்புதல்:












அம்பரமேதண்ணீரே சோறேஅறஞ்செய்யும் *

எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய் *

கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! * 

எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய் *

அம்பரமூடறுத்தோங்கி உலகளந்த *

உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய் *

செம்பொற்கழலடிச் செல்வா! பலதேவா! * 

உம்பியும்நீயும் உறங்கேலோரெம்பாவாய்.








பொருள்: 

ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே!

தாங்கள் எழுந்தருள வேண்டும்.

கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே!

மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே!

நீ எழ வேண்டும்.

விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும்.

செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே!

நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.




ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

2 comments:

  1. வணக்கம் சகோதரி

    17வது பாசுரப் பாடலும், பொருள் விளக்கமும் அருமை கண்ணனின் அற்புத தரிசனம் பெற நாங்களும் ஆவலாய் காத்திருக்கிறோம்.

    ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின் திருவடிகளே சரணம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. பாசுரமும் விளக்கமும் நன்று.

    இன்றைக்கு பகிர்ந்து கொண்ட படங்கள் வெகு அழகு.

    தொடரட்டும் பாசுரத் தேன்...

    ReplyDelete