மாரி மலை முழைஞ்சில்
"நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டறிந்து அருள வேண்டும்!"
மாரிமலைமுழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும் *
சீரியசிங்கம் அறிவுற்றுத்தீவிழித்து *
வேரிமயிர்பொங்க எப்பாடும்பேர்ந்துதறி *
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு *
போதருமாபோலே நீபூவைப்பூவண்ணா! * உன்
கோயில்நின்றும் இங்ஙனேபோந்தருளி* கோப்புடைய
சீரியசிங்காசனத்துஇருந்து * யாம்வந்த
காரியம் ஆராய்ந்தருளேலோரெம்பாவாய். (2)
பொருள்:
மழைக் காலத்தில் மலைக்குகையில் படுத்துத் தூங்கும் வீரமுள்ள சிங்கம்,
தூக்கம் தெளிந்து எழும்பொழுது நெருப்புப் போன்ற தன் சிவந்த கண்களைத் திறந்து,
பிடரி மயிர் சிலிர்த்து,
உடம்பை நாலு பக்கமும் அசைத்துச் சோம்பல் முறித்துக்கர்ஜனை செய்து வெளியே கிளம்புகிறது.
அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே!
நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி,
இங்கே வந்து அருள் செய்.
வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து,
நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து,
அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அன்புடன்
அனுபிரேம்
பாடல் விளக்கமும், ஆண்டாளின் அழகிய தரிசனமும் அருமை.
ReplyDeleteஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
விளக்கம் நன்று.
ReplyDeleteதேர்ந்தெடுத்து கொடுத்த படங்கள் வெகு அழகு.