கறவைகள்
"சிறிய பெயரால் உன்னை அழைத்ததால் எங்களைக் கோபிக்காது, எங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வாயாக!"
கறவைகள்பின்சென்று கானம்சேர்ந்துண்போம் *
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து * உன்தன்னைப்
பிறவிபெறுந்தனை புண்ணியம்யாமுடையோம் *
குறைவொன்றுமில்லாத கோவிந்தா! * உன்தன்னோடு
உறவேல்நமக்கு இங்குஒழிக்கஒழியாது *
அறியாதபிள்ளைகளோம் அன்பினால் * உன்தன்னைச்
சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே *
இறைவா! நீதாராய் பறையேலோரெம்பாவாய். (2)
பொருள்:
குறையே இல்லாத கோவிந்தனே!
நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள்.
எங்களுக்கு அறிவென்பதே இல்லை.
ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும்.
உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது.
உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது.
விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்!
அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம்.
அதற்காக கோபித்துக் கொள்ளாதே.
எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அன்புடன்
அனுபிரேம்
தாழம்பூ சடையின் அழகு மிகவும் அருமை. பாசுர அடிகளுக்கான பொருளை ரசித்தேன்.
ReplyDeleteபாடலின் விளக்கமும் படங்களும் அருமை.
ReplyDeleteஸ்ரீ ஆண்டாளின் சடை அலங்காரம் மிக அருமை.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
வணக்கம் சகோதரி
ReplyDeleteபாசுரமும், அதன் பொருளும் அறிந்து கொண்டேன். மிக அருமையாக உள்ளது. எப்படி அழைத்தாலும் அவன் தாளே கதி என நினைக்கும் போது உரிமையில் அழைப்பதை தவறாக எண்ண மாட்டான் பரந்தாமன். அழகான விளக்கம்.
ஆண்டாளின் தரிசனம் நன்று. பின்புறம் தாழம்பூ ஜடையலங்காரப் படம் மிகவும் அழகாக உள்ளது.
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின் திருவடிகளே சரணம்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்லதொரு பகிர்வு.
ReplyDeleteதாழம்பூ - சமீபத்திய பயணத்தின் போது தாழம்பூ செடிகள்/புதர்களாக நிறைய பார்க்கக் கிடைத்தது.