உந்து மதகளிற்றன்
நந்த கோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை எழுப்புதல்:
நந்த கோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை எழுப்புதல்:
உந்துமதகளிற்றன் ஓடாததோள்வலியன் *
நந்தகோபாலன்மருமகளே! நப்பின்னாய்! *
கந்தம்கமழுங்குழலி! கடைதிறவாய் *
வந்துஎங்கும் கோழிஅழைத்தனகாண் * மாதவிப்
பந்தல்மேல் பல்கால்குயிலினங்கள்கூவினகாண் *
பந்தார்விரலி! உன்மைத்துனன்பேர்பாட *
செந்தாமரைக்கையால் சீரார்வளையொலிப்ப *
வந்துதிறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய். (2)
பொருள்:
மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே!
நப்பின்னை பிராட்டியே!
வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே!
உன் வாசல் கதவைத் திற!
கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது.
குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன.
பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே!
உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம்.
அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அன்புடன்
அனுபிரேம்
ஆண்டாள் தாயார் திருவடிகளே சரணம்
ReplyDeleteசிறப்பான விளக்கம். படங்களும் நன்று.
ReplyDelete