முப்பத்து மூவர்
"பகைவருக்கு பயத்தைக் கொடுக்கும் பெருமானே! எழுந்திரு!"
பொருள்:
முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே!
நீ எழுவாயாக!
நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே!
பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக.
பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே!
லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக.
எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும்,
உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.
அன்புடன்
அனுபிரேம்
"பகைவருக்கு பயத்தைக் கொடுக்கும் பெருமானே! எழுந்திரு!"
முப்பத்துமூவர் அமரர்க்குமுன்சென்று *
கப்பம்தவிர்க்கும்கலியே! துயிலெழாய் *
செப்பமுடையாய்! திறலுடையாய்! * செற்றார்க்கு
வெப்பம்கொடுக்கும் விமலா! துயிலெழாய் *
செப்பென்னமென்முலைச் செவ்வாய்ச்சிறுமருங்குல் *
நப்பின்னைநங்காய்! திருவே! துயிலெழாய் *
உக்கமும்தட்டொளியும் தந்துஉன்மணாளனை *
இப்போதே எம்மைநீராட்டேலோரெம்பாவாய்.
பொருள்:
முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே!
நீ எழுவாயாக!
நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே!
பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக.
பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே!
லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக.
எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும்,
உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அன்புடன்
அனுபிரேம்
இன்றைக்குச் சேர்த்திருக்கும் படங்கள் ரொம்பவே அழகு... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteதொடரட்டும் பாசுர அமுதம்.