25 January 2020

அம்பேத்கர் நினைவு பூங்கா, லக்னோ

வாழ்க வளமுடன் ...






முந்தைய  லக்னோ பதிவுகளில்  கீழ் கண்ட  இடங்களை எல்லாம் பார்த்தோம் ...

1.லக்னோ பயணத்தில் ...

2.விளையாட்டு மைதானத்தில் .....

3 .லா மார்டினியர் காலேஜ் ,லக்னோ

4.லா மார்டினியர் காலேஜ் - 2

5.பரா இமாம்பரா (Bara Imambara)  , லக்னோ 

6.பூல் பூலையா

7.பரா இமாம்பரா மேல் தளம் .....

8.ஷாஹி பாவ்லி -பரா இமாம்பரா 

9.சோட்டா இமாம்பரா,லக்னோ 

அதில் கடைசியாக நாங்கள் சென்ற இடம் இந்த அம்பேத்கர் நினைவு பூங்கா...

மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்க பெற்ற பெரிய பூங்கா ...எங்கு காணிலும்  யானைகளின் அணிவகுப்பு ...





நாங்கள் சென்ற  போது  அங்கு நல்ல மழை  அதனால் சிறிது காத்திருந்து பின் உள்ளே சென்றோம் ...



14 ஏப்ரல் 2008 அன்று முதலமைச்சர் மாயாவதியால் பொதுமக்களுக்காக இந்த நினைவு பூங்கா  திறக்கப்பட்டது. இந்த பூங்கா முழுவதும்  ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட சிவப்பு மணற்கல்லைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.

நினைவுச்சின்னத்தின் மதிப்பு  பல  பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் பெயர் அம்பேத்கர் பூங்காவிலிருந்து பீம்ராவ் அம்பேத்கர் நினைவிடமாக 2012 மே மாதம் மாற்றப்பட்டது.

குடைக்குள் குழந்தைகள் ..









மிக பெரிய நீண்ட வளாகம் ....இந்த அமைவிடம் முழுவதும் பல  ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது .

வெயில்  நேரத்தில் நிச்சயம்  இங்கு நடக்க இயலாது . எல்லா இடங்களையும் மார்பில் கொண்டு இழைத்துள்ளனர் ..



மண்டபத்தின் உள்ளே .... அங்கு அம்பேத்கார் அவர்களின் வாழ்க்கை படங்கள் சிற்பங்களாக உள்ளன .










இன்னும் சில படங்கள் அடுத்த பதிவில் தொடரும் ..

அன்புடன்
அனுபிரேம்



3 comments:

  1. அம்பேத்கர் நினைவு பூங்கா மிக அருமை.

    ReplyDelete
  2. மிக அருமையான கட்டிடக் கலை. பகிர்வுக்கு நன்றி அனு.

    ReplyDelete
  3. நல்லதொரு பகிர்வு.

    இது அமைக்கப்பட்ட போது நிறைய எதிர்ப்பு - பல ஊர்களில் இப்படி பூங்காக்கள் அமைத்தார் மாயாவதி. தில்லியை அடுத்த நோய்டாவிலும் இப்படி ஒரு பூங்கா உண்டு - எங்கே பார்த்தாலும் யானைச் சிலைகள்! யானை அவர்கள் கட்சிச் சின்னமும் கூட!

    ReplyDelete