"கிருஷ்ணா! உன் மீது பற்று கொண்ட எங்களுக்கு மற்ற பொருள்கள் மீது பற்று ஏற்படாமல் காப்பாயாக!"
சிற்றஞ் சிறுகாலே வந்துஉன்னைச்சேவித்து * உன்
பொற்றாமரையடியே போற்றும்பொருள்கேளாய் *
பெற்றம்மேய்த்துண்ணுங் குலத்தில் பிறந்து * நீ
குற்றேவல்எங்களைக் கொள்ளாமல்போகாது *
இற்றைப்பறைகொள்வா னன்றுகாண்கோவிந்தா! *
எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் * உன்தன்னோடு
உற்றோமேயாவோம் உனக்கேநாம்ஆட்செய்வோம் *
மற்றைநங்காமங்கள் மாற்றேலோரெம்பாவாய். (2)
பொருள்:
கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம்.
அதற்கான காரணத்தைக் கேள்!
பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே!
நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை.
என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும்.
எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும்.
உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும்.
இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அன்புடன்
அனுபிரேம்
கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். //
ReplyDeleteவேண்டும் வேண்டும் இந்த பாக்கியம் ஆண்டு தோறும்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். //
ReplyDeleteவேண்டும் வேண்டும் இந்த பாக்கியம் ஆண்டு தோறும்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
சிறப்பான தரிசனம்.
ReplyDeleteதேர்ந்தெடுத்துச் சேர்த்த படங்கள் அனைத்துமே சிறப்பு.