12 January 2020

திருப்பாவை – பாசுரம் 27

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா 

"நெய்யுடை பால் அன்னத்தை எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்"










கூடாரைவெல்லும்சீர்க் கோவிந்தா! * உன்தன்னைப் 

பாடிப்பறைகொண்டு யாம்பெறும்சம்மானம் *

நாடுபுகழும் பரிசினால்நன்றாக *

சூடகமேதோள்வளையே தோடேசெவிப்பூவே *

பாடகமேயென்றனைய பல்கலனும்யாமணிவோம் *

ஆடையுடுப்போம் அதன்பின்னேபாற்சோறு *

மூடநெய்பெய்து முழங்கைவழிவார *

கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய். (2)







பொருள்: 


எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! 

உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். 

அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! 

அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது.

 கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. 

புத்தாடைகளை வழங்கு. 

பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.






ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.


அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. நல்லதொரு பகிர்வு.

    தொடர்கிறேன்.

    ReplyDelete