மாலே மணிவண்ணா
"மார்கழி நீராட, தேவையான பொருள்களை அளிப்பாயாக!"
மாலே! மணிவண்ணா! மார்கழிநீராடுவான் *
மேலையார் செய்வனகள் வேண்டுவனகேட்டியேல் *
ஞாலத்தையெல்லாம் நடுங்கமுரல்வன *
பாலன்னவண்ணத்து உன்பாஞ்சசன்னியமே *
போல்வனசங்கங்கள் போய்ப்பாடுடையனவே *
சாலப்பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே *
கோலவிளக்கே கொடியேவிதானமே *
ஆலினிலையாய்! அருளேலோரெம்பாவாய்.
பொருள்:
பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே!
நீலக்கல் நிறத்தவனே!
பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே!
பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன்பிற்கு,
உலகத்தையே அதிர வைக்கும் ஒலியையும்,
பால் சாதம் போன்ற நிறத்தையும்,
உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும்,
பெரிய முரசுகளையும்,
பல்லாண்டு பாடும் பெரியோரையும்,
மங்கள தீபங்களையும்,
கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அன்புடன்
அனுபிரேம்
கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.//
ReplyDeleteநோன்பு முடியும் காலம் வந்து விட்டது அவன் அருளால் அனைத்து நல்லபடியாக நிறைவு பெற வேன்டும்.
படங்கள் அழகு, ஆண்டாளின் சடை அலங்காரம்.அழகு
படங்கள் தேர்வு மிக அருமை.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
ReplyDeleteபாசுரமும் விளக்கமும் நன்று.
ReplyDeleteதொடர்கிறேன்.