குத்து விளக்கெரிய
"நப்பின்னையே! க்ஷணகாலமும் நீ கிருஷ்ணனை பிரிய மாட்டாயோ? இது தகுமோ?"
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அன்புடன்
அனுபிரேம்
குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால்கட்டில்மேல் *
மெத்தென்ற பஞ்சசயனத்தின்மேலேறி *
கொத்தலர்பூங்குழல் நப்பின்னைகொங்கைமேல் *
வைத்துக்கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய் *
மைத்தடங்கண்ணினாய்! நீஉன்மணாளனை *
எத்தனைபோதும் துயிலெழவொட்டாய்காண் *
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால் *
தத்துவமன்று தகவேலோரெம்பாவாய்.
பொருள் -
குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில்,
விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே!
நீ எங்களுடன் பேசுவாயாக.
மை பூசிய கண்களை உடைய நப்பின்னையே!
நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை.
காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய்.
இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அன்புடன்
அனுபிரேம்
பதிவும், படங்களும் அருமை.
ReplyDeleteஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
தேர்ந்தெடுத்துத் தந்த படங்களும் பதிவும் சிறப்பு. தொடரட்டும் பக்தி உலா.
ReplyDelete