30 September 2020

பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம்

 வாழ்க வளமுடன் ,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சிற்றூர் அருகே ஆனைமலைக்கும் நெல்லியம்பதி மலைக்கும் இடையே பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் உள்ளது.

இந்த விலங்குகளின் சரணாலயம், பரம்பிக்குளம், தோனகடவு, மற்றும் பெருவாரிபள்ளம் ஆகிய மூன்று இடங்களும்  சேர்ந்து மனிதனால் உருவாகப்பட்டதாகும்.  இதன் நுழைவு வாயிலில் தான் அழகிய துவையர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. 

 இந்த சரணாலத்திற்கு உட்பட்ட இடத்தில் 7 பெரிய பள்ளத்தாக்குகளும், 3 ஆறுகளும், தேக்கடி, பரம்பிக்குளம் அணை மற்றும் சோலையாறு அணை அமைந்துள்ளது. 

இங்கு காரபாரா ஆறு (Karappara river), மற்றும் குரியர்குட்டி ஆறு (Kuriarkutty river) போன்றவை வடிகால் பகுதியாக உள்ளது.


முந்தைய பதிவுகள் 

1.   டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி

2.ஆழியார் நீர் அடுக்கு (aliyar water cascade) , பொள்ளாச்சி

3.அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவில்

4.டாப் ஸ்லிப் ஆனைமலை புலிகள் காப்பகம்

5.மேலே உயரே உச்சியில்...

முந்தைய பதிவில் டாப்சிலிப்பிலிருந்து  பரம்பிக்குளம் நோக்கி சென்றோம் என்று கூறினேன் .

மிக அழகிய முகப்புடன் இந்த பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது.









 





இங்கு சென்று  அடுத்த சவாரி பற்றி விசாரிக்க ..இங்கும் தற்பொழுது சவாரி  ஏதும் இல்லை என கூறினர். பின்னர் 8 பேர் என்றவுடன் சரி என்று எங்களுக்கான வாகனத்தை  ஏற்பாடு செய்வதாக கூறி காத்திருக்க சொன்னார்கள் .







அந்த நேரத்தில் நாங்கள் கொண்டு சென்ற மதிய  உணவை அவர்கள் அருமையாக அமைத்து இருந்த குடிலில் சென்று அமர்ந்து சாப்பிட்டோம். 

என்ன குரங்கார் தான் மிக அதிகம் , வனத்தில் இல்லாமல் அவர்கள் எங்கு இருப்பார்கள் என்ற எண்ணத்தில் வேடிக்கை பார்த்து மகிழ்ந்தோம். 

மிக அழகான இடம் , ரம்மியமாக இருந்தது.

















எங்களின்  வாகனம் வரவும் காட்டிற்குள் எங்களின்  பயணத்தை ஆரம்பித்தோம் ...


 

அங்கு  என்ன பார்த்தோம் அடுத்த பதிவில் ...

தொடரும் .....


அன்புடன் 

அனுபிரேம் 





2 comments:

  1. அழகான இடங்கள். படத்தில் பார்க்கும்போதே மகிழ்ச்சி உண்டாகிறது.

    ReplyDelete