06 September 2020

டாப் ஸ்லிப் ஆனைமலை புலிகள் காப்பகம்

  வாழ்க வளமுடன் ,

கோவையில் இருந்து 78 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது டாப்ஸ்லிப் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வனம். பரம்பிக்குளம் கேரளா வன துறையாலும், டாப்ஸ்லிப்  தமிழக வன துறையாலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.


இந்திராகாந்தி தேசியப் பூங்கா என்று அழைக்கப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு உட்பட்டது டாப் ஸ்லிப். இங்குள்ள பெரிய மரங்களை வெட்டி உருட்டிவிடுவார்களாம்... தடையேதும் இன்றி அந்த கட்டைகள் மலையடிவாரத்திற்கு வந்து விழுமாம். அதனால் டாப் ஸ்லிப் என்று பெயர் வந்தது என்று கூறுகின்றனர்.


பொள்ளாச்சியிலிருந்து 36 கிமீ தூரம் பயணித்து அங்கிருந்து மலை ஏற்றம். 


முந்தைய பதிவுகள் 

1.   டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி

2.ஆழியார் நீர் அடுக்கு (aliyar water cascade) , பொள்ளாச்சி

3.அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவில்

மாசாணியம்மன் கோவில் தரிசனத்திற்கு பின்  டாப்ஸ்லிப் நோக்கி சென்றோம் ...






அங்கு நுழைவு வாயிலில் வனத்துறை அதிகாரிகள் உள்ளனர். ஒவ்வொரு வண்டியையும் சோதனை செய்தே அனுப்புகின்றனர். 

இந்த வனத்துறைக்கு உள்ளே மது போன்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை. இது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் வழியில் எங்கும் நிறுத்தாமல் செல்ல வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். 






அங்கிருந்து மலைக்கு செல்லும் வழி ....






முதலில் சமதளமாக ஆரம்பித்தாலும் பின் மிக குறுகிய வளைவுகள் வருகின்றன . எங்கள்  பயணம் மே மாதம்  என்பதால் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது .








வளைந்து நெளிந்து செல்லும் வழியின்  காணொளி ..




தொடரும் .....

அன்புடன் 

அனுபிரேம் 




2 comments:

  1. இங்கெல்லாம் சென்று பார்க்க வேண்டும் என்பது ஆவல்...

    ReplyDelete
  2. அழகான படங்கள். காணொளியும் கண்டேன்.

    பயணித்து நீண்ட நாட்களாகி விட்டன. தீதுண்மி காலம் முடிந்த பிறகு தான் பயணிக்க வேண்டும்.

    தகவல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete