16 December 2018

திருப்பாவை – பாசுரம் 1

மார்கழித் திங்கள் நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்







மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால் ;

நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்!

பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்!




          நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு

மார்கழி மாதம் பெளர்ணமி நாள் இது.

குளிக்க வர விரும்புகின்றவர்களே! ஆபரணங்களை அணிந்தவர்களே!

செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில் இருக்கும் இளம் பெண்களே வாருங்கள்.

கூர்மையான வேலைக் கொண்டு தீங்கு செய்பவருக்குத் கொடியவனான, நந்தகோபனின் பிள்ளை,
அழகான கண்களுடைய யசோதையின் சிங்கக் குட்டி,
மேகம் போல உடல், சிவந்த கண், சூரியசந்திரனை போல முகம் கொண்ட நாராயணன் நாம் விரும்பியதை கொடுப்பான்;

உலகம் புகழப் பாவை நோன்பில் ஈடுபடலாம் வாருங்கள்.






ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. மார்கழி முதல் நாள் பாசுரம் சிறப்பு. படங்கள் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. மார்கழி பதிவு அருமை.
    பாடல், படங்கள் அருமை.

    ReplyDelete
  3. திருப்பாசுரமும் படங்களும் அருமை...

    வாழ்க நலம்..

    ReplyDelete
  4. வரைந்த படங்கள் கொள்ளை அழகு..

    ReplyDelete