25 December 2018

திருப்பாவை – பாசுரம் 10

நோற்றுச் சுவர்க்கம்

“நீ உறங்குவதைப் பார்த்தால் கும்பகர்ணனே உன்னிடம் தோற்றுப்போவான் போல் இருக்கிறதே!?”





நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால்

பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த

கும்ப கருணனும் தோற்றும் உனக்கே

பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற

அனந்தல் உடையாய் அருங்கலமே

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.


              நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு

நோன்பு நோற்றுச் சுவர்க்க உலகம் புகுவேன் என்று சொன்னவளே! வாசல் கதவைத் தான் திறக்கவில்லை; 
பதிலாவது சொல்லக் கூடாதா?

நறுமணம் மிகுந்த துளசியை திருமுடியில் சூடிய நாராயணன் நம்மால் போற்றப்பட்டு நாம் வேண்டியதெல்லாம் தருவான்.
 அந்த புண்ணியனால் முன்பு ஒரு நாள் எமனின் வாயில் விழுந்த கும்பகர்ணன் தான் உன்னிடம் தோற்று அவனது பெரும் தூக்கத்தை உனக்குத் தந்தானோ?

அளவிடமுடியாத பெரும் தூக்கத்தை உடையவளே! அழகிய கும்பத்தைப் போன்ற அழகுடையவளே! உறக்கம் தெளிந்து வந்து கதவை திறப்பாய்!







ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

3 comments:

  1. படங்கள் அருமைப்பா

    ReplyDelete
  2. படங்களும் பாடல் விளக்கமும் நல்லாருக்கு அனு

    கீதா

    ReplyDelete
  3. திரு கேஷவ் அவர்களின் ஓவியங்கள், தேர்ந்தெடுத்து தரும் படங்கள், இன்றைய பாசுரம் என அனைத்தும் ஆருமை.

    பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.

    ReplyDelete